பிரேஸ் காட்டுக்குள் !!!!

பிரேஸ் காட்டுக்குள் மனித இனத்தைப்போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்க்ள் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.உலகத்தின் கண்களில் இருந்து இது நாள் வரை தென்படாமல் இருந்த பழங்குடி இனமொன்று பிரேஸிலின் ரியோடி ஜெனீரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த அபூர்வமான பழங்குகுடியினர் உடம்பெங்கும் செம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தை பூசியிருக்கின்றனர்.
இவர்களின் இனம் எதுவென்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.ஹெலிகப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஹெலிகப்டரில் இருந்து படம் எடுக்கும் போது அவர்கள் அதை நோக்கி அம்பெறிந்தமை குறிப்பிடத்தக்கது. பிரேஸில் நாட்டின் ஏக்கர் மாநிலத்தின் பெரு நாட்டின் எல்லைப்பகுதியில் இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0 மறுமொழிகள் to பிரேஸ் காட்டுக்குள் !!!! :