அண்டார்டிகா . !!!

உலகில் உள்ள 7 பெரிய கண்டங்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பது அண்டார்டிக்கா கண்டம் . இது யாருக்கும் சொந்தமானது அல்ல . இங்கே எந்த அரசாங்கமும் கிடையாது . ' நோ மேன்ஸ் லாண்ட் 'என்று ஆங்கிலத்தில் சொல்வோம் .

ஆனாலும் , ஏழு நாடுகள் அதைச் சொந்தம் கொண்டாட முயற்சி செய்து வருகின்றன . கடுமையான குளிர்ப்பிரதேசம் என்பதால் இங்கே வசிப்பதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை . இதன் மக்கள் தொகை 1000க்கும் குறைவாகத்தான் உள்ளது . கோடைக் காலங்களில் மட்டும் சுமார் 3000 டூரிஸ்ட்டுகள் வருவர் .

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள்தான் அங்கே முகாம் இட்டிருப்பார்கள் . அவர்களுக்காக அங்கே 20 விமானத்தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன .பூமிக் கிரகத்திலேயே மிகவும் குளிரான பகுதி அண்டார்டிக்காதான் . மைனஸ் 90 டிகிரி வரை இங்கே படுபயங்கர குளிர் நிலை செல்லும் . கோடைகாலத்தில் 24 மணி நேரமும் சூரியன் மறையாது . அதேபோல் குளிர் காலத்தில் சூரியன் தோன்றவே தோன்றாது . இருட்டு மட்டுமே இருக்கும் .அண்டார்டிக்காவை சூழ்ந்த கடல் எப்பொழுதும் உறைபனியாகவே இருக்கும் . அதனால் குறிப்பிட்ட கோடை காலங்களில் மட்டுமே கப்பல்கள் அங்கே செல்ல முடியும் .

பென்குயின் போன்ற பறவைகளும் , கடல் பாசி போன்ற தாவரங்கள் மட்டுமே அங்கே உண்டு . முக்கியமான இன்னொரு விஷயம் என்ன தெரியுமா ? அண்டார்டிக்காவில் கொசுவே கிடையாது .
.

0 மறுமொழிகள் to அண்டார்டிகா . !!! :