அறிஞர்களின் முத்துக்கள்...!!!

கற்றறிந்த அறிஞர் பெருமக்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூர்மையான அம்புகள் போல.. கேட்பவர்களின் மனதை தைய்க்காமல் இருக்காது. இதோ சில அறிஞர்களின் முத்துக்கள்...

ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு.
-விவேகானந்தர்.


நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில் கெட்டடிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும் கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.
-ப்ராங்கின்.


அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-தாகூர்.


சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
-கண்ணதாசன்.


மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ, ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.
-பிளாட்டோ.


தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. உடனே திரும்பி விடுங்கள்.
-யாரோ.


நன்றாக ஆளப்படக்கூடிய நாட்டில் வறுமை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். மோஷமாக ஆளப்படக்கூடிய நாட்டில் செல்வம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
-கன்பூஷியல்.


பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும். -கவிஞர் கண்ணதாசன்.

கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம்.
-பல்கேரியப் பழமொழி.


எல்லாம் சரியாக இருக்கிறது என்பவனிடமும், எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாயிரு.
-சிங்சௌ.என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.
-மாவீரன் நெப்போலியன்.


உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான். உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
-யங்.


பிரச்சனைகளே இல்லாத வாழ்வை வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.
-யாரோ.


நூலறிவு பேசும்- மெய்யறிவு கேட்கும்.
-ஹோம்ங்.


நிச்சயமாகவே, நெருப்பு விறகை சாப்பிடுவது போல, பொறாமை நன்மைகளை சாப்பிட்டுவிடும்.
-நபிகள்.


பணக்காரனாக வேண்டுமென்று விரும்புகிறவன் கஞ்சனாக இருக்கிறான். நான் பணக்காரன் என்று நினைத்து செலவு செய்பவன் ஏழையாகின்றான். -ஷேக்ஸ்பியர்.

நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி பண விஷயத்தில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஓரே மதம்தான்.
-வால்ட்டேர்.


கடினமான செயலின் சரியான பெயர் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் கடினம்.
-செஸ்டர்ன்.


துன்பம் வந்து விடுமோ என்று நினைக்கும் எண்ணங்கள் இருக்கிறதே இவை துன்பத்தை விட துயரமானவை.
-ஹைஸாடிக்.எப்போது நீ வணங்கத் தொடங்குகிறாயோ அப்போதிலிருந்து நீ வளரவும் தொடங்குகிறாய்.
-ஸ்டர் பீல்டு.

பிறருடைய நம்பிக்கையை காப்பாற்றுங்கள். பிறர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தாலும் நீங்கள் பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.
-முகம்மது நபி.நானும் குறைகள் நிறைந்த மனிதனாக இருப்பதாலும், எனக்கும் பிறருடைய அனுதாபம் தேவைப்படுவதாலும், நான் பிறருடைய குறைகளை கண்டுபிடிக்க அவசரப்படுவதில்லை. -காந்தியடிகள்.


விலைவாசிகள் இறக்கப்படுவது ஓன்றே உண்மையான வாழ்க்கைத்தர உயர்வுக்கு வழிகோலும்.
அறிஞர் அண்ணா.


மலரைப் பார், கொடியைப் பார், வேர் எப்படியிருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதை பார்க்க் முயன்றால் நீ மலரையும், கொடியையும் பார்க்க முடியாது.
கண்ணதாசன்.


நான் என்ற உணர்வு நிச்சயமாக தவறில்லை. நான் மாத்திரம் தான் என்ற உணர்வு தான் தவறு.
டாக்டர் எஸ். மனோகர் டேவிட்.

உங்கள் கூடாரங்கள் பிரிந்திருக்கட்டும். உங்கள் இதயங்கள் சேர்ந்திருக்கட்டும்.


கடந்த காலம் பற்றிய நினைவு மனிதனை அறிவாளி ஆக்குவதில்லை. வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே அறிவாளிக்கு அடையாளம்.
பெர்னாட் ஷா.


கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.
கன்பூசியஸ்.


உனது துயரங்களை பிறரிடம் கூறாதே. பலர் அதற்காக வருத்தப்படமாட்டார்கள். சிலரோ அதில் மகிழ்ச்சியும் அடைவர்.
யாரோ.


அவதூரை அடக்குவதற்கு அதை அலட்சியமாக தள்ளிவிடுவதே முறை.
யாரோ.

மக்கள் அனைவருக்கும் கல்வி அளிக்காமல் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது சாபக்கேடாய் அமையும்.
ஹெர்மன் எல். லேலேண்ட்.


முதுகுக்குப் பின்னால் ஓரே ஓரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடுப்பதுதான்.
யாரோ.


எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
ஹிட்சாக்.


நீங்கள் முன்னுக்கு வர பணம் தேவையில்லை. மற்றவரின் பணத்தை பயன் படுத்தியே முன்னுக்கு வரலாம். அதற்கு தேவை நேர்மை, துணிவு, கடின உழைப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.


நம்மிடம் உள்ள பணம் நம் செருப்பைப் போல இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால் அது நம் காலைக் கடிக்கும். பெரியதாக இருந்தால் நாம் இடறி விடுவோம்.
கோல்டன்.


வேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து என்று வேலை செய்பவன் அடிமை. வேலை செய்வதுதான் சுகம் என்று வேலை செய்கின்றவன் கலைஞன். தேவை இல்லாத வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்கின்றவன் முட்டாள்.
ஆண்ட்ரூ.


உனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.
தந்தை பெரியார்.


கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை குழந்தைகளின் கல்விக்கு செலுத்துங்கள்.
டாக்டர் அம்பேத்கார்.

நல்லவர்களுக்கு தனிமை என்பது கிடையாது. அவர்களைச் சுற்றி எப்போதும் பத்து பேர் கூடிவிடுவார்கள்.
சுந்தர ராமர்.


ஓருவனின் மனம் தூய்மையாக இல்லையெனில் பணமோ, பலமோ அவனுக்குப் பலன் தராது.
-அரிஸ்டாட்டில்.நீங்கள் செய்யும் எந்த குற்றத்திற்காகவும் சந்தர்ப்பம், சூழ்நிலை ஆகியவற்றை காரணம் காட்டாதீர்கள்.
-பெர்னாட்ஷா.


சோம்பேறி இரண்டு முட்களுமில்லாத கடிகாரம் அது நின்றாலும் ஓடினாலும் உபயோகமில்லை.
-கௌப்பர்.


பழிவாங்க விரும்பினால் முதலில் அலட்சியம் செய்து விடு. அது ஆரம்பம். மன்னித்து விடு. அது முடிவு.
-பெர்னாட்ஷா.


உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள் மட்டுமே தேவை. நிறைய பொருமை, வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தும் திறமை. தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை, தவறு செய்தவர்களை அணைத்துச் செல்லும் கணிவுடைமை.
-மாத்யூ ஆர்னால்ட்.


மக்களின் வறுமையை போக்க வேண்டுமானால் முதலில் அவர்களுடைய அறியாமையை கட்டாயக்கல்வி மூலம் நீக்குங்கள். சிக்கனமாக வாழக் கற்றுக்கொடுங்கள்.
விஸ்வேஸ்வரய்யா.


ஓரு நாடு நல்ல சட்டங்களால் ஆளப்படுவதை காட்டிலும் நல்ல மனிதனால் ஆளப்பெறுவது மேலாகும்.
-அரிஸ்டாட்டில்.


சிலர் பணத்தை வெறுப்பாக கூறுவர் அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தையே.
-கோல்ட்டன்.


ஓரு காரியத்தை ஏன் தவறாக செய்தோம் என்று விளக்கம் சொல்வதற்குள் அதை சரியாக செய்து விடலாம்.
-யாரோ.பணம் என்பது ஓரு சாதனைப் பொருள். அதுவே சுகமன்று. முடிவன்று. அவரவர்களுக்கு ஓரு வரம்புண்டு. அந்த வரம்புக்கு மேல் மிஞ்சின பின் அது ஓரு பாரமும் கவலையும் தான்.
-ராஜாஜி.


ஓற்றுமையாக இருங்கள் ஆனால் மிக நெருக்கமாக இருக்காதீர்கள்.
-கலீப் இப்ரான்.


அனுபவம் என்பது புது மாதிரியான வாத்தியார். அது பாடங்களை கற்றுத் தந்த பின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலம் தான் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.
-கவிஞர் கண்ணதாசன்.கடமையைச் செய்கின்றவனுக்கு கடமை இருந்து கொண்டே இருக்கும். கவலைப்படுகின்றவனுக்கு கவலை இருந்து கொண்டே இருக்கும்.
-யாரோ.


விவாதம் செய்வது நிழல்களுடன் போராடுவதற்கு சமம்.
-வெஸர்மாஸ்.


பார்க்க கண்களை கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி.
- யாரோ

1 மறுமொழிகள்:

Anitha said...

அனுபவம் என்பது புது மாதிரியான வாத்தியார். அது பாடங்களை கற்றுத் தந்த பின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலம் தான் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.

Really super