காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் !!!


1. நான் மகாத்மா அல்லவே!

காந்தியடிகள் பெங்களூரில் தங்கியிருந்தார். ஒரு நாள் ஒரு மங்களை ஒரு தட்டில் தேங்களாய், பழம், வெற்றிலைப்பாக்கு, பூ முதலியன எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் தட்டை அண்ணலின் அடிகளில் வைத்து அடிகளைத் தொட்டு வணங்கி எதிரே நின்று கொண்டிருந்தாள். அண்ணல் கைகூப்பி அதை ஏற்றக்கொண்டார். அவள் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தாள். அண்ணல் மீண்டும் கைகூப்பி விடை கொடுத்தார். மறுபடி மூன்றாவது தடவையும் காந்தியடிகள் நமஸ்காரம் செய்தார். ஆனால் அவளோ, நகருவதாக இல்லை. அச்சமயம் ராஜாஜியும் அண்ணலுடன் கூட இருந்தார். காந்திஜி, ராஜாஜியிடம், ”இந்தப்பெண் ஏதாவது சொல்ல விரும்புகிறாளா? கேளுங்கள்” என்றார்.
ராஜாஜி அந்தச் சகோதரியிடம் கன்னடத்தில் பேசி அறிந்துகொண்டு ” இவளுக்குக் குழந்தை வேண்டும். நீங்கள் மகாத்மா. ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்புகிறாள்” என்று தெரிவித்தார். காந்திஜி சொன்னார். ”நான் ஒன்றும் மகாத்மா அல்லவே! ஆசீர்வாதம் எப்படிச் செய்வேன்?”

ராஜாஜி: ”நீங்கள் எவ்வளவோ பேருக்கு ஆசீர்வாதம் செய்து பலித்தும் இருக்கிறதாம். எனக்கு மட்டும் ஏன் ஆசீர்வாதம் செய்யக்கூடாது என்கிறாள் இவள்!”
காந்திஜி: ”அப்படியா! எனக்கு ஒரு சக்தி இருக்கிறது! என்று இன்றுதன் தெரிந்துகொள்கிறேன்! ஆயினும் இவளிடம் சொல்லுங்கள் கிராமத்தில் இவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனவே! ஒன்றைத் த்த்து எடுத்துக் கொண்டு ஏன் வளர்த்து மகிழக் கூடாது?”
ராஜாஜியின் மூலம் அவள் பதில் சொன்னாள்:”உறவினர்கள் குழந்தை, ஊரார் குழந்தைகள் எல்லாரிதமும் நான் பிரியமாகத்தான் இருக்கிறேன். ஆனால் என்ன இருந்தாலும் நம்முடையதுதானே நம்முடையதாகும்?”


இதைக்கேட்டு விட்டு அண்ணல் ”நான், எனது, பிறருடையது” என்ற மோகத்தைப்பற்றி சிறந்த உபதேசம் செய்தார். எதற்கும் அச்சகோதரி அசைந்து கொடுக்கிறவளாக்க் காணோம். இறுதியில் அண்ணல் ”ஆண்டவன் உனக்கு ஆண்குழந்தை அளித்தால் நான் தடுக்கவா போகிறேன்?” என்று சொன்னார்.இதையே ஆசியாக்க் கொண்டு அச்சகோதரி போய்ச் சேர்ந்தாள்!
2. ஓய்வு நேர வேலைக்கு ஊதியம் எதிர்பார்க்கக்கூடாது
”யங் இந்தியா” பத்திரிகையை அடிகள் ஏற்றுக்கொள்வதற்கு முன் ஒரு நாள் அதன் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதன் அப்போதைய ஆசிரியர் ஆர்.கே. பிரபுவும் அருகே இருந்தார். அடிகள் அவரிடம், ”இதற்குச் செய்திகள் எங்கிருந்து சேகரிக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
பிரபு: ”யங் இந்தியா”, பாம்பேகிரானிக்கிள்” இவற்றிற்கு மாற்றாகப் பல பத்திரிகைகளை வருகின்றன. அவற்றிலிருந்து கத்தரித்து எடுக்கிறேன்.
காந்திஜி: இந்த வேலையில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?”

பிரபு: ‘இந்தப் பத்திரிகைக்கு வேண்டிய செய்திகள் தயாரிக்க அரைமணியைவிட அதிகமாவது அபூர்வம்தான்!” காந்திஜி வியப்புடன் சொன்னார்: ”நான் தென்னாப்பிக்காவில் இருந்த போது ”இந்தியன் ஒபினியன்” நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது மாற்றாக சுமார் 200 பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. நான் அவற்றை மிகவும் கவனமாய்ப படிப்பேன். அவற்றிலிருந்து ஏதாவது செய்தி எடுப்பதற்கு முன்பு இதனால் வாசகருக்கு உண்மையிலேயே பயன் உண்டு என்று தெரிந்துதான் எடுத்துக் கொள்வேன். பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்பவன் தன் பொறுப்பை மிகவும் கடமை உணர்வுடன் ஈடேற்ற வேண்டும். பத்திரிகைக் தொழில் என்ன? எல்லாத் தொழிலிலுமே இந்தக் கடமையுணர்வு தேவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சரியா, இல்லையா?


பிரபு சற்றே வெட்கத்துடன், ”ஆம் உண்மைதான். ஆனால் ”பாம்பே கிரானிக்கிள் ஆசிரியர் குழாத்தில் இருக்கும் என்குக அந்த வேலை செய்யவே வாரத்தின் நாள் எல்லாம் போய்விடுகின்றன. பிறகு இதை மிகவும் விரைவில் முடிக்க வேண்டி நேர்ந்து விடுகிறது.”
காந்திஜி சட்டென்று இதற்கெல்லாம் உங்களுக்கு சன்மானம் எவ்வளவு கொடுக்கப்படுகின்றது? என்று கேட்டார்.


பிரபு: ஒரு பத்திக்கு பத்து ரூபாய்க் கணக்கில் கிடைக்கிறது.
ஒரு பத்தி பத்து அங்குலம் தான் இருக்கும். அதுவும் பத்து பாயிண்டு எழுத்துக்கள் கொண்டது. ஆகவே கணக்குப் பார்த்தால் நூறு அல்லது நூற்றைம்பது ரூபாய் அவருக்குக் கிடைத்து வந்தது. காந்தி அடிகள் தனக்குள் கண்க்குப் போட்டுப் பார்த்துவிட்டு ”கிரானிக்கிளில் வேலை செய்வதற்கு எவ்வளவு கிடைகிறது?” என்று கேட்டார்.


பிரபு: மாதம் நானூறு ரூபாய். காந்தி அடிகள் ஒரு கணம் தயங்கினார்.மேலே சொன்னார்: ”யங் இந்தியா” வுக்காக நீங்கள் பணம் வாங்கிக் கொள்வது சரி என்று படுகிறதா உங்களுக்கு? இந்தப் பத்திரிகை பணம் ஈட்டும் இதழல்ல என்ற நீங்கள் அறிவீர்களை அல்லவா? இது தேசபக்தியின் தொண்டுவேலை. இதன் மூலம் அதன் செலவுக்குக் கூடக் கிடைப்பதில்லை. அப்படியிருக்கும்போது இதை நடத்துகிறவர்கள் பளுவைக் கூட்டுவது உங்களுக்கே சரியாகத் தோன்றுகிறதா?


பிரபு: ”உரிமையாளர்கள் விரும்பிக் கொடுப்பதையே நான் வாங்கிக் கொள்கிறேன். நான் பிடிவாதமாக எதுவும் கேட்கவில்லையே!” காந்திஜி சொன்னார்:, ”சரிதான். இருந்தாலும் நானாக இருந்தால் ஒர் பைசா கூட வாங்கிக் கொள்ள மாட்டேன். உங்கள் முழு நேர வேலைக்குத் தகுதியாக ”பாம்பே கிரானிக்கிள்’ கார்ர்கள் ஊதியம் தந்து விடுகிறார்கள். ‘யங் இந்தியா’வுக்குச் செய்வது ஒழிந்த நேரத்தில் செய்கிற வேலை! முழு நேரத்துக்கும் ஒரு இடத்தில் சம்பளம் கிடைக்கும் போது இடையில் செய்யும் வேலைக்கும் ஊதியம் வாங்குவது சரியில்லை. அதை எதிர்பார்க்கவும் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படித்தானில்லையா?


காந்திஜி பிரபிவின் உள்ளத்தில் அறநெறியின் அருமைப் பாடம் ஒன்றைப் பதிய வைக்க முயன்றார். பிரபு அதன் புது ஒளியில் கொஞ்சம் திடுக்கிட்டார். அவர் மிகவும் பணிவுடம் தலையை மட்டும் அசைத்துவைத்தார், ஒத்துக்கொண்டதற்கு அறிகுறியாக.
3. என் படுக்கையை இதன் மேலேயே விரி
எரவாடா சிறையில் மழை வரும் போதெல்லாம் கட்டிலைத் தூக்கித் தாழ்வாரத்தில் போடுவது சிரம்மாயிருக்கும். எனவே காந்தியடிகள் மேஜரிடம் லேசான கட்டில் ஒன்று கேட்டார்.


அவர் ”(தேங்காய் நார்க்) கயிற்றுக் கட்டில் இருக்கிறது. போதுமா? அல்லது தில் நாடாப் பின்னித் தரட்டுமா? சொல்லுங்கள்” என்று கேட்டார்.


மாலையில் கட்டில் வந்தது. கயிற்றுக் கட்டில்தான். அடிகள், ‘நாடா வேண்டாம். இதன் மேலேயே என் படுக்கையை விரியுங்கள்’ என்று சொல்லி விட்டார்.


வல்லபாய் சொன்னார்: என்ன, நீங்கள் இதில் தூங்குவீர்களா? ஏற்கனவே மெத்தைக்குள்ளேயே தேங்காய் நார்! கட்டிலிலும் தென்னங்கயிறு. பிறகு என்ன மிச்சம், கட்டிலின் நான்கு மூலையிலும் தேங்காயைக் கட்டிவிட வேண்டியதுதான். இது அபசகுணம், நாளையே நான் நாட போட்டுப் பின்னச் செய்து விடுகிறேன்.


காந்திஜி: இல்லை வல்லபாய்! நாடா என்றால் அழுக்குச் சேரும். தண்ணீர்விட்டுச் சுத்தம் செய்ய முடியாது. நார்க் கயிறென்றால் சுலபமாக்க் கழுவிவிடலாம்.


வல்லபாய்: வண்ணானிடம் இன்று போட்டால் நாளை வெளுத்துக் கொண்டுவந்து விடுகிறான்!

காந்திஜி: ஆனால் அவிழ்த்தல்லவா போடவேண்டும். இது என்றால் கட்டிலில் வைத்தே அலம்பிவிடலாமே!”


மகாதேவ தேசாயும் மகாத்தமாவின் பக்கம் சேர்ந்து கொண்டார். ”இதை வெந்நீரிலும் கழுவலாம். மூட்டைப் பூச்சியும் அடையாது” என்று சொன்னார்.


வல்லபாய்: சரிதான், நீரும் சேர்ந்து விட்டீரல்லவா? இந்தக்கட்டிலில் இருக்கிற மூட்டைப்பூச்சி, தெள்ளுப்பூச்சிக்கு கணக்கே இல்லை.
காந்திஜி சொன்னார்: ஏன் வீண் வம்பு! நான் இதில் தான் தூங்கப் போகிறேன்.எனக்கு குழந்தையிலிருந்தே இதனுடன்தான் பழக்கம். எங்கள் அம்மா ஊறுகாய் போட இஞ்சியை இதன் கயிற்றில் தேய்த்துதான் தோல் நீக்குகிற வழக்கம்!


வல்லபாய்: தோல் நீங்கி விடுமல்லவா! இதோ நான்கைந்து எலும்புகளை மூடிக் கொண்டிருக்கிற உங்கள் தோலும் உரிந்து போகட்டும்! அதற்குத்தான் சொல்கிறேன் நாடா பின்னியே ஆகவேண்டும்.
காந்திஜி: ‘விளக்குமாற்றுக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சலம் கதையாகிவிடும். (குதிரை கிழமாம்! லகான் மட்டும் உயர்ந்ததாம்) இந்தக் கட்டிலுக்கு நாடா பொருந்தாது. இதற்குத் தென்னை நார்க்கயிறுதான் சரி. தண்ணீர் தெளித்தால் போதும், துவைத்து வேட்டி போல் அழுக்கு நீங்கிவிடும். இது மடிக்கவும் மடிக்காது. எவ்வளவ வசதி!”
வல்லபாய: சரி, நான் சொல்கிறதைக் கேட்காது போனால் உங்கள் இஷ்டம்.
காந்தி அடிகள் அதே கட்டிலைத்தான் பயன்படுத்தினார்கள்.4. உனக்குத் திருமணம் பெருந்தேவைஎரவாடாச் சிறையில் அடிகள் இருக்கும்போது வெளி நாடுகளிலிருந்து அவருக்கு அநேக கடிதங்கள் வரும். மார்கரேட்டு என்ற பெயருள்ள ஒரு பெண்மணி அன்பு த்தும்பும் மடல்கள் எழுதி வந்தாள். ஒருநாள் அவள் அடிகளைச் சந்திக்க சிறைக்கு வந்தாள். மகாதேவ தேசாய்க்கு அவளைப்பார்த்ததும், ‘இது சரியான அசடு’ என்று தோன்றிற்று. அவர் காந்தியடிகளிடம் கேட்டார். இவளை இவ்விதம் வர அனுமதிக்கக்கூடாது. இவள் ஏன் இங்கு வந்தாள் என்று நமக்குத் தெரியாது. வேளை தேடி வந்தாளோ அல்லது வேறு என்ன காரணமோ! அவள் தேடி வந்தாளோ அல்லது வேறு என்ன காரணமோ! அவள் நாடு கடத்தப்பட்டு வந்திருப்பாள் போலவும் தோன்றுகிறது.


காந்திஜி உறுதியாகச் சொன்னார்: அவளைக்கண்டிப்பாய் வரச்சொல், அவளிடம் ஹரிஜன வேலை வாங்கவேண்டும். அவளைப் பார்க்காமல் அவள் எதற்கு வந்தாள், எப்படிப்பட்டவள், வேலை செய்வானா என்றெல்லாம் எப்படி முடிவு செய்ய முடியும்?


கடைசியில் அவள் வந்தாள். காந்தியடிகளின் கால்களைப் பிடித்துக்கொண்டு ”நான்பொய் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். காரணமும் தவறாகவே சொல்லியிருக்கிறேன். இங்கே இருக்க வேண்டிய காலக்கெடுவும் பொய். பாபுஜி! நான் விரதம் எடுத்துக் கொள்கிறேன். என்னை ஆசிரமத்துக்கு அனுப்பிவிடுங்கள். எனக்கு நீங்கள்தான் கடவுள். என்னை இந்தியப் பெண்ணாக்கி விடுங்கள் யாருக்காவது. தத்துப் பெண்ணாக்குங்கள். இல்லை என்றால் பிரம்சரிய விரதம் எடுத்துக்கொண்டிருக்கும் யாருக்காவது என்னை மணம் செய்து கொடுத்துவிடுங்கள்” என்று புலம்பினாள்.


கேட்ட காந்தியடிகள் சிரித்தார். மூன்றாவது நாளே அவள் மண்டுத்தனம் வெளியாகிவிட்டது. காந்திஜி பரிகாசம் பேசுகிறார். அவர் எப்படிக் கடவுளாக முடியும். அவளை அவர் ஆண்கள் உடை உடுத்தச் சொல்லி அறிவுரை சொன்னார். இது அநாகரிகம் என்று அவள் நினைத்தாள். வேறு ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் அங்கிருந்தாள். அவள் பெயர் நீலா நாகினி. அவள் கழந்தை மகாதேவ தேசாயின் தோளில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட மார்கரெட் எரிச்சலுடன் அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிட்டாள். காந்தியடிகள் சத்தம் போட்டார். ”உனக்கு வெட்காமியல்லை! குழந்தையை இப்படியா இழுத்துத் தள்ளுவது? இது குழந்தையா, கல்லா?
வெட்கமில்லாமல் அவள் சொன்னாள்: என் நாயைக்கூட நான் இப்படித்தான் தள்ளுவேன். ஒன்றும் ஆவதில்லையே!
காந்திஜி: குழந்தைக்கும் நாய்க்கும் வேறுபாடு இல்லையா?
மார்கரெட்டு: என் நாயையே நான் குழந்தையைப் போல் தான் பாவிக்கிறேன்.


இதைக்கேட்டு காந்திஜி சொன்னார்: சரிதான் உனக்குத் திருமணம் தேவைதான். அதுவும் பிரமசரிய விரதம் எடுத்துக்கொண்டவனுடன் கூடாது. பிள்ளை பெற விரும்புகிற ஒருவருடனும் ஒழுங்கா முறையாகத் திருமணம் செய்துகொள். பிறகு தெரியும் குழந்தை என்றால் என்ன தவறு.


அவள் மிகவும் நிஷ்டூரம் வாய்ந்தவள். அதற்காக அடிகள் அவளை ஒதுக்கவில்லை. அவளை அரசியலிலோ ஒத்துழையாமை இயக்கத்திலோ பங்கு எடுத்துக்கொள்ளவிடாமல் ஹரிஜனத் தொண்டு செய்யத் தேவையான பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.5. சாவுடன் சண்டைப்போட முடியாது.
1933 - ஆம் ஆண்டில் எரவாடா சிறையிலிருந்த காந்தியடிகளுக்கு அவர் விருப்பப்படி ஹரிஜனத் தொண்டு செய்ய அரசு வசதிகள் தரவில்லை. அவர் உடனே உண்ணாநோன்பு தொடங்கிவிட்டார்., மே 29 இல் தான் 21 நாள் உண்ணாவிரதம் முடிந்திருந்தது, ஆகஸ்ட் 16 இல் இந்த விரதம் தொடங்கிவிட்டது. இடையிலே மூன்று மாதங்கள்தான் கழிந்திருந்தன. உடல்நிலை பூராவும் சரியாகியிருக்க முடியாது. எனவே இம்முறை உடல் மிகவும் நோவுக்குட்படுவது இயற்கையே. உணைமையிலேயே இரண்டு மூன்று நாட்கள் தான் முடியாமல்தான் இருந்தது. அடிகளே ஒரு கடித்த்தில் இதை விவரித்திருந்தார். ”நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆகஸ்ட் 23 தேதியன்று இரவு குமட்டி வாயில் எடுத்தபோது ‘சரி போகவேண்டியதுதான், இனித்தாங்கது’ என்று முடிவு செய்துவிட்டேன். சாவுடன் சண்டைப்போட முடியாது. 24 ஆம் தேதியன்று என்னிடம் இருந்த பொருள்களைத் தானம் செய்தும்விட்டேன்.”


இவ்வளவும் செய்து விட்டு ‘இனி என்னுடன் யாரும் பேச வேண்டாம். தண்ணீரும் கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தார்.
திருமதி கஸ்தூரிபாய் காந்தியும் அருகிலிருந்தார்கள். அவரையும் ‘போ’ என்று உத்தரவு கொடுத்து விட்டார். கண்களை மூடிக்கொண்டு ராமநாமம் ஜபிக்கத் தொடங்கிவிட்டார். பாவோ அயர்ந்துபோய் அங்கேயே நின்றுவிட்டார். இதே நேரத்தில்…


தீனபந்து ஆண்ட்ரூஸ் மூன்று நாட்களாக்க் கவர்னரிடம் ”காந்திஜியை விட்டுவிடுங்கள்” என்று முறையிட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் வெற்றியடைந்திருந்தார். விடுதலை உத்தரவு பெற்றுக்கொண்டு மருத்துவ மனைக்கு வந்தார். காந்தியடிகளையும் பாவையும் அழைத்துக் கொண்டு பர்ணகுடிக்குச் சென்றார்.


கொஞ்சம் கொஞ்சமாக காந்தியடிகள் உடல் தேறிவந்தார். அவர் ”அரசு விடுதலை செய்து விட்டாலும் ஓராண்டு காலக்கெடு முடியும் வரை ஒத்துழையாமை இயக்கத்தில் நேரடி பங்குகொள்ளமாட்டேன் முக்கியமாக ஹரிஜனத் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பேன்” என்று அறிவித்து விட்டார்.


இதற்குப் பிறகு அவர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹரிஜன யாத்திரையை மேற்கொண்டார்.
6.சத்தியாகிரகத்தில் மனிதன் தானே கஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்!
1918 தொடக்கத்தில் அகமதாபாத்தின் பிளேக் நின்று அமைதி ஏற்பட்டது. மில் முதலாளிகள் ‘பிளேக் - போனசை’ நிறுத்திவிட எண்ணினார்கள். இதைக் கேட்ட நெசவுப்பகுதி தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. உலகச் சண்டையின் காரணமாக சாமான்கள் விலை ஏறியிருந்தன. ஆனால் சம்பளத்தைப் போல் 75 சதவிகிதம் பிளேக் போனஸ் கிடைத்து வந்ததனால் விலை ஏற்றம் அவர்கள் வாழ்க்கையை பாதிக்காதிருந்தது. அதை நிறுத்திவிட்டால் தொல்லை வந்து சேரும்.. எனவே அவர்கள் போனஸ் இல்லாமல் சம்பளத்தையே முறையாக்க் கட்டி கொடுக்கும்படி கேட்க முடிவு செய்தனர்.


அனுசூயா பென் முன்னமேயே ”ஊடு”ப் பிரிவுத் தொழிலாளர்கள் ஹர்த்தாலுக்குத் தலைமை வகித்து நடத்தியிருந்தார். எனவே நெசவுப் பிரிவுத் தொழிலாளர்கள் அவரிடம் சென்று வேண்டினார்கள். அவர் இந்தத் துறையில் காந்திஜியிடம் யோசனை கேட்பது மிகவும் தேவை என்று எண்ணினார். நல்லகாலமாக காந்தி அடிகள் பீஹாரிலிருந்து திரும்பி வந்திருந்தாரள். அவர் இதைக் கேட்டுப் பேசிச் சிந்தித்து 35 சதவீதம் சம்பளம் அதிகம் கேட்போம் என்று முடிவு செய்தார்.
மில் முதலாளிகள் இந்த நியாயமான் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துவிட்டனர். மில் முதலாளிகளும் கதவடைப்புச் செய்துவிட்டனர. போராட்டம் வலுவடைந்தது. காந்தியடிகளின் தலையீடு இருந்தால் எல்லாம் அமைதியாகவே இருந்தது.


வேலை நிறுத்தம் தொடங்கி சில நாட்களுக்குள்ளேயே செய்திஅகமதாபாத் நகரத்துக்கு வெளியே எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டது. போராட்டம் தொடர்ந்து நீண்ட காலம் நடந்தால் தொழிலாளர்களுக்குத் தொல்லை நேரிடுமே என்று எண்ணி, இந்தப் போராட்டத்தில் அக்கறைகொண்ட சிலர் அவர்கள் உதவிக்கு ஒரு நிதி ஏற்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள்.


பம்பாயிலுள்ள ஒரு அன்பர் இந்த உதவி நிதிக்குப்பெரும் தொகை ஒன்று அனுப்ப விருப்பம் தெரிவித்தார். ஆனால் காந்தியடிகள் இந்தப் பிரச்சனையை எடுத்தவுடனேயே, ”கூடாது இந்த வழியை நாம் ஒத்துக்கொள்ளவே கூடாது. அகமாதபாத்திலேயே உள்ள சிலர் இவ்விதம் உதவு முன்வந்துள்ளனர். தொழிலாளர்களுக்குப் பண உதவி தேவையாயிருக்கம் என்பதும் உண்மைதான்! ஆனால் தொழிலாளர் போராட்டம் பொதுமக்கள் காசை வைத்துக் கொண்டு நடத்தப்படும் கூடாது. தொழிலாளர்கள் ஏழைகள் தாம். ஆனால் அவர்களுக்கும் சுயமரியாதை உண்டு. அதற்கு ஊறு நேராமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் சுயமரியாதை இருந்தால் கஷ்டப்பட்டாலும் பொறுத்துக்கொண்டு போராடுவார்கள். சத்தியாக்கிரஹம் என்றால் மனிதன் தானே கஷ்டப்பட்டாக வேண்டும்.” என்று உறுதியுடன் சொல்லிவிட்டார்.


அவர் மேலும் சொன்னார்: ‘வெளி உதவி கிடைத்தால் மில் முதலாளிகள் பிறர் உதவியை எதிர்பாராமல் தங்கள் ஆற்றலிலேயே போராடட்டும். அப்பொழுதுதான் முதலாளிகள், ‘இவர்கள் ஊன்றி நிற்பார்கள்’ என்று புரிந்து கொள்வார்கள். உடன்பாடு காண விழைவார்கள்” என்று சொல்லி விட்டு, தொழிலாளர் உதவிக்கு வேறு வழி தேடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ”தேவை ஏற்படும்போது ஓரளவு உதவுவோம் ஆனால் வாழ்க்கைக்குச் சரியான ஏற்பாடு ஒன்று செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டடம் நீடித்து நடக்க முடியும். உடைகிற வாய்ப்பும் இருக்காது’ என்று முத்தாய்ப்பு வைத்து விட்டார்.
கடைசியில் அவ்விதமே செய்யப்பட்டது.
7. மாவு அரைப்பது மிக நல்லது.
காந்திஜிக்கு ஒரு சகோதரி இருந்தார். காந்திஜி தென்ஆப்பிரிக்காவிலிருந்தபோது தம்மிடம் இருந்த எலாப் பொருளையும் ஆசிரமத்துக்குக் கொடுத்துவிட்டார். இந்தியா திரும்பி வந்த பிறகும் தம் சொத்துரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு ”ஏழையாகி” விட்டார்.
ஆனால் இந்த சகோதரிக்கு என்ன செய்வது? அவர் கணவரை இழந்தவர். காந்திஜி தன் செலவுக்கு யாரிடமும் காசு வாங்கமாட்டார். ஆனால் சகோதரிக்கு ஏதாவது ஏற்பாடு செய்தாகவேண்டும். அதனால் அவர் தன் நண்பரான பிராணஜிவன் மேத்தாவிடம் மாதம் பத்து ரூபாய் வீதம் அவருக்க (கோகீ பஹனுக்கு ) அனுப்பி வந்தார். ஆனால் சில நாட்கள் சென்றவுடன் கோகி பஹனுடைய மகளும் விதவையாகித் தாயிடம் வந்து சேர்ந்துவிட்டாள். பத்துரூபாய் இரண்டுபேருக்கும் போதவில்லை. எனவே சகோதரியம்மையார் காந்திஜிக்கு, ”செலவு அதிகரித்துவிட்டதனால் அண்டை அயலில் மாவு அரைத்துக் கொடுத்துச் செலவைச் சரிகட்ட வேண்டியிருக்கிறது” என்று எழுதினார்.காந்திஜி பின் வருமாறு பதில் எழுதினார்: மாவு அரைத்துக் கொடுப்பது நல்லது தான். உடல் நலமும் சிறக்கும். நாங்களும் ஆசிரமத்தில் மாவு அரைக்கிறோம். நீங்கள் எப்போதும் விரும்பினாலும் ஆசிரமத்துக்கு வரலாம். முடிந்த தொண்டைச் செய்து கொண்டு வாழ முழு உரிமை உண்டு. நாங்கள் எப்படி வாழுகிறோமோ அப்படியே நீங்களும் வாழ வேண்டும். நானும் வீட்டுக்குப் பணம் அனுப்பும் நிலையில் இல்லை. நண்பர்களிடமும் அனுப்பச் சொல்ல முடியாது.


வெளியில் மாவு அரைத்துக் கொடுத்து வாழ்ந்த சகோதரிக்கு ஆசிரமவேலை கடினம் இல்லை. ஆனால் ஆசிரமத்தில் ஹரிஜனங்கள் இருந்ததனால் அவர்களுடன் கூடி இருந்து வாழ, பழங்கொள்கைகள் கொண்டு அவருக்கு மனம் ஒப்பவில்லை. அவரும் வரவில்லை.
அடிகள் ஏற்பாடும் செய்யவில்லை.
8. எனக்குத்தான் காசாசை அதிகமே
காந்திஜி ஒருமுறை டில்லியிலிருந்துபோது அவருடைய பிறந்த நாள் விழா வந்தது. பட்டணத்திலுள்ள சில குஜராத்தியர்கள் அகதிகளுக்கென்று கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு காந்தியடிகளிடம் 3 மணிக்குத் தங்கள் கூட்டத்திற்கு வருமாறு வாக்கும் பெற்றுக் கொண்டுவிட்டனர். அந்த சமயம் காந்தியடிகளுக்கு அதிகம் இருமல் வந்துகொண்டிருந்தது. சர்தார் பட்டேலுக்கு இந்தச் சேதி தெரியவந்ததும் அவர் சொன்னார்: உங்களுக்கு இவ்வளவு மோசமான இருமல் இருக்கிறது எதற்காக குஜராத்தியர் கூட்டத்திற்குப் போக வேண்டும்? னால் நாங்கள்தான் காசுப்பித்தராயிற்றே! பணம் கிடைக்கும் என்றால் சாகும்போது கூட எழுந்து அங்கே போய்விடுவீர்களே! காசு இப்படியா வசூல் செய்ய வேண்டும்! ‘ளொக்கு’ ‘ளொக்கு’ என்று இருமிக்கொண்டு கூட்டத்திற்கு என்ன போக வேண்டியிருக்கிறது? ஆனால் நீங்கள் எங்கே நான் சொல்வதைக் கேட்கப் போகிறீர்கள்?” என்று சொல்லிவிட்டு பட்டேல் சிரித்துவிட்டார்.


காந்திஜியும் சிரித்துவிட்டு உண்மையிலேயே மூன்று மணிக்கு அங்கே போய்விட்டார். அங்கே பேசும்போது சொன்னார்: ”ந்ந்தலால் பாய், குஜராத்தியர் என்னைக் கூப்பிடுகிறார்கள், வந்தால் காசு கிடைக்கும்’ என்று சொன்னபோது காசாசையால் ஒத்துக்கொண்டேன். ஆனால் அப்பொழுது இங்கே பேசவும் வேண்டியிருக்கும் என்று தெரியாது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது என்க்கு என் பிறந்தநாளின் மதிப்புத் தெரியாமலே இருந்து வந்தது. இந்தியாவுக்கு வந்த பிறகுதான் வேஷம் எல்லாம் தொடங்கிற்று. இதனுடன் சர்க்காவும் இணைந்திருப்பதால் இதை சர்க்கா துவாதசி என்று சொல்கிறோம். சர்க்கா அஹிம்சையின் அடையாளம். ஆனால் இன்று அஹிம்சையின் தரிசனமே கிடைக்காத ஒன்றாக ஆகிவிட்டது. இப்பொழுது சர்க்கா துவாதசி எதற்காகக் கொண்டாட வேண்டும்? ஆனால் மனிதன் சுபாவம் கையைக் காலை ஆட்டிக்கொண்டு தானிருப்பான். பலன் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி!


குஜராத்தியர் எங்கிருந்தாலும் அங்கே அஹிம்சைப் பணி புரிவார்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறேன் ஆனால் அவர்கள் சர்க்கா நூற்பார்களா, மாட்டார்களா என்பதைப்பற்றி எனக்கு ஜப்பாடுதான். சர்க்காவின் பெருமையைப்பற்றி நான் என்ன சொல்லட்டும்! இன்று சமயத்தின் பேரில் கொலை செய்தல், தீ மூட்டுதல் எல்லாம் நடக்கிறது. நாம் நம் சுதந்திரத்த்ஐ எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கறோம்? குடிமக்கள் மனதில் எவ்வளவு கட்டுப்பாடற்ற நிலை பரவியிருக்கிறது? இதை எல்லாம் நான் காணும் போது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.”


இதற்குப் பிறகு அவர் ஹிந்தி ஹிந்துஸ்தானி பற்றியும் பேசினார். ”நீங்கள் ஹிந்துஸ்தானி மொழியையும் நாகரி, உருது - இரண்டு லிபிடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த பணத்துக்காக நான் உங்களுக்கு வந்தனம் செலுத்துகிறேன். நன்றியுணர்வு கொள்கிறேன். இடம் பெயர்ந்த சோகதர சகோதரிகளுக்குக் குளிரில் கம்பளிகள் மிகவும் தேவையாயிருக்கின்றன. இதை எல்லாம் நாம் தான் செய்ய வேண்டும். அரசு செய்ய முடியாது. நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு விட்டோமானால் அரசுக்கு ஆட்சியை ஒழுங்கப்படுத்துவது எளிதாயிருக்கும்.”
9. மாறுபட்ட கருத்து கொண்டிருந்த போதிலும் நாம் பரஸ்பரம் பொறுத்துக் கொள்ளலாம்
ஹரிஜன யாத்திரையின்போது சுற்றிச் சுற்றி காந்தி அடிகள் ஆஜ்மீர் வந்து சேர்ந்தார். காசிலால்நாத் சுவாமி காந்திஜி எங்கு சென்றாலும் அவர் வருவதற்கு முன் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவார். சுவாமி காந்திஜியின் ஹரிஜன நலமுன்னேற்றத் தொண்டுக்குப் பெரிய எதிரி. அவரைப்பற்றி விதவிதமான வதந்திகள் உலவின. காந்தியடிகள் மேல் கல்லை வீச என்றே சிலரை அமர்த்திவைத்திருந்தார் என்று சொன்னார்கள். ஆஜ்மீர்க்காரர்களுக்குக் கவலையாகப் போயிற்று. ஆனால் சேதியைக்கேட்ட காந்தியடிகள், ”சுவாமி லால்நாத் இவ்விதச் செயல்களைச் செய்யமாட்டரா. அவர் எவ்வளவோ தடவை என்னைச் சந்தித்திருக்கிறார். நான் இந்தச் சேதியை நம்பமாட்டேன்,” என்று மிகவும் சாதாரணமாகச்சொல்லி விட்டார்.


அப்போதே சுவாமி காந்தியடிகளைக் காண வந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவந்தது. அவரை அடிகளிடம் அழைத்துவரும் பொறுப்பு உபாத்தியாயருக்கு வந்து சேர்ந்தது. அவர் சுவாமியைப் பார்த்தவுடனேயே முகத்திலிருந்து அவர் பெரிய சண்டைக்குத் தயாராக்க் கச்சை கட்டிக்கொண்டு வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டார். ஆனால் அவர் காந்தியடிகள் இருக்கும் அறைக்கு வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது. அவர்மிகவும் மரியாதையுடனும் இயற்கையாகவும் நடந்துகொண்டார். அர்களைப் பார்த்தவர்கள் இரண்டு படு எதிரிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றே நம்பமுடியாது. லால்நாத் சுவாமி காந்தியடிகளிடம் காசி வரும் போது எங்களுடனேயே தங்குங்கள்! எங்கள் தொண்டர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்வார்கள். உங்களைக் காத்துக்கொள்வார்கள் என்று அழைப்பு விடுத்தார்.


அடிகள் உடனே, ”இது நல்ல யோசனை. எனக்குப் பிடிக்கிறது. மாறுபட்ட எண்ணம் கொண்டிருந்தாலும் நாம் பரஸ்பரம் சகித்துக்கொள்கிறோம் என்பதை உலகம் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும்,” என்று சகஜமாகச் சொன்னார்.
10. வதந்திகளை நான் நம்பத் தயாரில்லை
1925 ஆம் ஆண்டு தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் காலமான பிறகு காந்திஜி பல நாடகள் வங்காளத்திலிருந்தார். அங்கே அரசியலில் ஏற்படும் புதுச்சிக்கல்களை எல்லாம் தீர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு நாள் அவர் சாதாரணமாக ஸ்ரீமான் நளினி ரஞ்சன் சர்க்காரிடம், ”நீங்கள் எப்போதும் காலையில் எப்பொழுது விழித்துக் கொள்கிற வழக்கம்?” என்று கேட்டார்.


சர்க்கார் அவர்களுக்கு இந்தக் கேள்வி பிடிக்கவில்லை. காந்திஜியும் ஏதோ கேட்டுவிட்டார். அவர் பதில் சொன்னார். ‘சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கம் உண்டு.’


காந்திஜி சொன்னார்: ”அப்படியானால் நாளை முடிந்த அளவு சீக்கிரமே எழுந்து வாருங்கள். உங்களிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும்.”
சர்க்காருக்கு ஒன்றும் புரியவில்லை. சிந்தித்தார். இந்தப் பேச்சு நடந்ததே காலை வேளையில்தான். அன்று மாலை காந்தியடிகள் சர்க்கார் அவர்களிடம்,”நான் காலையில் சொல்ல இருந்த வேலை முடிந்துவிட்டது. ஆகவே நீங்கள் வரவேண்டாம்!” என்று சொல்லி விட்டார். பிறகு உண்மையையும் விவரித்தார்.


”வங்காளத்தில் பெயர் பெற்ற ஒரு கனவான் இருந்தார். அவரை வைஸ்ராய் கவுன்ஸிலில் அங்கத்தினராக நியமனம் செய்திருதார்கள். அவர் தங்கள் நண்பர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு சிரக்கார் அவர்களைப் பற்றி அவதூறாகச் சில குற்றச்சாட்டுகள் தெரிவித்தார். காந்தியடிகள் ‘நான் வெற்று வதந்திகளை நம்ப முடியாது. சாட்சி வேண்டும்,’ என்று சொன்னார். சாட்சி கிடைத்ததும் சர்க்கார் அவர்களைக் கேட்கவே காந்திஜி அவரை அதிகலையில் வரச்சொல்லியிருந்தார். அதற்கு முன்னமேயே அந்தக் கனவான் காந்திஜியைச் சந்தித்து ‘நண்பர் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. தான் சர்க்காரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்!’ என்று சொல்லிவிட்டார். அடிகளும் ‘நானே அவரையும் அழைத்துக் கொண்டு உங்களிடம் வருகிறேன்’ என்று சொன்னார்.


இதைக்கேட்ட சர்க்காரின் மனது தழதழத்தது. ”இப்படி எவ்வளவோ அவதூறுகள் கேட்டாய் விட்டது. விடுங்கள். தவிர, நான் அவ்வளவு பெரிய மனிதனுமல்ல. அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்க!” என்று சொன்னார். காந்திஜியா விடுகிறவர்? பிடிவாதம் செய்யவே சர்க்கார் அவர்கள்’நீங்கள் சங்கடப்பட வேண்டாம். நான் மட்டும் போய் வருகிறேன்’ என்றார். பிறகு அவர் போய்ச் சந்திக்கவும் செய்தார்.
11. சரி, அழைத்துச் செல், உன் மகன் தான்
ஒரு பெண்ணை அவள் தந்தை அவள் விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினார். அவள் அடிக்கடி ஆசிரமத்துக்கு வந்உத போய்க்கொண்டிருந்தவள். தந்தையிடம் வாதிட்டுத் தோற்ற அவள்காந்திஜியிடம் ”என்ன செய்யட்டும்?” என்று கேட்டாள்.
காந்திஜி சொன்னார்: ‘இங்கே என்னிடம் வந்து விடு’ பெண் வந்து விட்டாள். தாய் தந்தையர் பெண் ஓடிவந்த சேதி அறிந்ததும் மிகவும் சினம் கொண்டனர். உடனே வார்தாவுக்கு வந்தனர். காந்தியடிகள் அவர்களை நன்கு கவனித்து ஒரு கஷ்டமுமில்லாமி பார்த்துகொ கொள்ளச் சொல்லி உத்தரவிட்டார்.


அவர்கள் காந்திஜியுடன் பேச வந்தனர். அந்தச் சமயம் பெண்ணும் அங்கே வந்தாள். தாய் தந்தை உள்ளே வந்ததும் காந்தி அடிகளின் அடிபணிந்தனர். காந்திஜி முறுவலித்துக் கொண்டார். நலன் பற்றி விசாரித்தார். பிறகு பெண்ணைப் பார்த்துக்கொண்டே சொன்னார்: ”இவள் என்னிடம் ஓடி வந்திருக்கிறாள். இவளை அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா? நல்லது அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பெண்”
இந்தச் சொல்லில் என்ன மாயமிருந்ததோ? தந்தை உடனே, ‘பாபூ! பெண் உங்கள் பெண்தான். உங்களிடமே இருக்கட்டும்! என்று சொல்லிவிட்டார்.
காந்திஜியும் ‘சரி, இவள் விருப்பமும் அது தான். இருக்கட்டும் இங்கேயே’ என்று விடை இறுத்தார்.


12. எண்ணத்தில் உறுதி இருந்தால் நிறைவேற வழியும் உண்டாகும்.
ஒரு அன்பர் வீட்டுக்குச் செல்வதற்கு முன் காந்திஜியுடன் சில வார்த்தைகள் பேச விரும்பினார். ஆனால் அடிகள் எதிரே வந்தவுடன் தைரியம் ஏற்படுவதில்லை. சும்மா இருந்து விடுவார். காந்திஜி ”பேசப்பா, பேசு, நீ ஏதோ பல ஆண்டுகள் முன் விரதம் எடுத்துகொ கொண்டயாம். அதைப்பற்றிப் பேச விரும்புகிறாய் என்று மாகதேவ் சொல்கிறார். எனக்கு நீ விரதம் எடுத்துகொண்டதே மறந்து விட்டது. நல்லது, சொல்!” என்று தூண்டினார்.


அவருக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. திக்கித் தயங்கிச் சொன்னார்: ”ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் சில பிரதிக்ஞைகள் ஏற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது - ”‘இப்போது? அதைக் காப்பாற முடியவில்லை அது தானே!’


மகாதேவ தேசாய்: இல்லை. செய்தி நேர்மாறானது!’
காந்திஜி: அப்படி என்றால் இந்தக் கண்ணீர் மகிழ்ச்சிக் கண்ணீரா?
அந்த அன்பர் வாய்மூடியே இருந்தார். கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. காந்திஜி சொன்னார்: முதன் முதல் நான் என் தந்தையிடத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டபோது நா எழவேயில்லை. அதனால் நான் எழுதிக் கொடுத்துவிட்டேன். அதைப்போல நீயும் எழுதிக் கொடுத்துவிடேன்.


அன்பர் மேலும் கண்ணீர் பெருக்கிணச் சும்மா இருந்தார். சற்றுநேரம் சென்று கொஞ்சம் தைரியம் வரவே அவர் சொன்னார்: ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் என் நோன்பைப் பற்றி எழுதியிருந்தேன். அதில் தாங்கள் ஒரு வார்த்தையைத் திருத்தியிருந்தீர்கள்.”
காந்திஜி ”அப்படியா” நான் மறந்தே விட்டேன்!

அந்த அன்பர் கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவுறுத்திச் சொன்னார்: பாபூ, எனக்கு உள்ளே ஒரு கோரமான சண்டை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் கடவுள் கருணையால் பிரதிக்ஞையை வார்த்தையளவிலும் சரி, பொருள்ளவிலும் சரி, காத்துக் கொண்டு வருகிறேன்.”காந்தியடிகள் சொன்னார்: ‘

1 மறுமொழிகள்:

Anonymous said...

தாய் அன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையைக் கற்பிக்காதுதிருமதி சாரதா தேவி வர்மா மகளிர் இல்லத்தில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தாள். தன் மகனின் உடம்பைப் பற்றி அவருக்கு மிகுந்த அக்கரை. ஒரு நாள் அவனைக் கூட்டிக்கொண்டு காந்திஜியிடம் சென்றாள். அச்சமயம் அவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நாலாபக்கமும் காகிதங்கள் சிதறிக்கிடந்தன. சிலவற்றின் மேல் துண்டுக்கற்கள் வைக்கப்பட்டிருந்தன. பக்கத்திலேயே பனை ஓலை விசிறி ஒன்றும் இருந்தது.

சாரதா தேவியின் மகனைப்பார்த்து காந்திஜி விசிறியை எடுக்குமாறு ஜாடை செய்தார். காந்திஜியின் குறிப்பைப் புரிந்துகொண்ட பையன் விசிறியை எடுத்து விசிற ஆரம்பித்தான்.

சில நிமிடங்கள் கழிந்தன. குளிர்ந்த காற்று வீசினவுடன் காந்திஜிக்கு லேசாகத் தூக்கம் வர ஆரம்பித்தது. அப்படியே பின்னாலிருந்த மெத்தையில் சாய்ந்தார். இதைப்பார்த்து சாரதாதேவி பையனிடமிருந்த விசிறியை எடுத்து தானே விசிற ஆரம்பித்தார். இரண்டு மூன்று நிமிடங்கள்தான் கழிந்திருக்கும்; அதற்குள் காந்திஜி விழித்துக்கொண்டார். சாரதாதேவியின் பக்கம் பார்த்தார். ”ஆம், தாயில்லையா! தாய் அன்பு மகன் பணிபுரிவதைத் தடுத்துவிட்டது. சிறுவனாயிற்றே; மேலும் பலவீனமானவனும்கூட; விசிறிவதினால் அவன் களைத்தல்லவா போய் விடுவான்” எனப் புன்முறுவலுடன் சொன்னார். ”இல்லை, பாபு! விசிறிக்கொண்டிருக்கையில் தவறி தங்கள் உடம்பின் மீது பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே அவன் கையிலிருந்து வாங்கி நான் விசிற ஆரம்பித்தேன்” என்று பதிலுரைத்தாள் சாரதாதேவி.

”இல்லை, இது பொய்யான விவாதம். தாயன்பு குழந்தைக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது கற்பிக்காது” என்றார் காந்திஜி.