கண்ணீர் காவியம் !!!

தலைப்பை பார்த்து இது யாரோ ஒருவருடைய வேதனை காவியமாக மாறுகிறதோ என்று கருத வேண்டாம். சீனாவில் ஒருவர் நிகழ்த்தியுள்ள சாதனை தான் இந்த கண்ணீர் காவியம். .

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரூ அன்டிங். இவர் தனது கண்கள் வழியாக தண்ணீரை பீய்ச்சியடித்து ஓவியங்கள் வரைவது, எழுதுவது போன்ற செயல்களை சர்வ சாதாரணமாக செய்து வருகிறார்.சமீபத்தில் ஷான்சுய் நகரத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் இவர் தனது மூக்கால் தண்ணீரை உறிஞ்சி அதை கண்களால் பீய்ச்சியடித்து நான்கு வார்த்தைகளை எழுதி உள்ளார்.

அதிர்ஷ்டம் கடலை போன்று பரந்து விரிந்தது என்று சீன மொழியில் எழுதி சாதனை படைத்திருக்கிறார்.தனது கண்களில் இருந்து 10 அடி தொலைவுக்கு தண்ணீரை பீய்ச்சியடிக்க முடியும் என்கிறார் ரூ அன்டிங்.

சிறு வயதில் நீச்சல் அடிக்கும் போது விழுங்கும் தண்ணீர் கண்கள் வழியாக வெளியேறுவதை தாம் எதேச்சையாக கண்டுபிடித்த தாகவும் அதன் பின்னர் தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்த திறமையை தாம் வளர்த்து கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

0 மறுமொழிகள் to கண்ணீர் காவியம் !!! :