ரைட் சகோதரர்கள் !!!வானுந்தைக் கண்டுப்பிடித்த ரைட் சகோதரர்கள் மிகுந்த கூச்ச பழக்கங் கொண்டவர்கள்.வில்பர் ரைட்டை

ஆர்வில் ரைட்


மேடையில் பேசுவதென்றால் மிகவும் தயங்குவார்கள்.
ஒரு நாள் ரைட் சகோதரர்கள் ஒரு விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசுவதற்கு மூத்தவரான வில்பர் ரைட்டை அழைத்தனர். வில்பர் ரைட்டுக்குத் தர்மசங்கடமாகப் போய் விட்டது. தன் இருக்கையிலிருந்து எழுந்து மேடைக்குச் சென்ற வில்பர், " எப்போதும் என் தம்பி ஆர்வில்தான் பேசுவது வழக்கம்" என்று கூறிவிட்டு இறங்கினார்.அடுத்துப் பேசுவதற்கு இளையவரான ஆர்வில்லை அழைத்தபோது, " என்னுடைய அண்ணந்தான் ஏற்கனவே சொற்பொழிவு செய்து விட்டாரே. நான் வேறு எதற்கு..?" என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்.

1 மறுமொழிகள்:

KANNAN RAJENDRAN said...

Really supper