வின்ஸ்டன் சர்ச்சில்!!!

இங்கிலாந்துப் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில் இருந்தபோது ஒரு நாள், ஒரு முரட்டுப் பெண்மணி அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.

“”எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் வீட்டு வரியிலிருந்து தாங்கள் விலக்கு அளிக்க வேண்டும்!” என்றாள்.

சர்ச்சில் மறுத்தார். அந்தப் பெண்ணோ மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.
“”இதோ பாரம்மா! சாதாரண நிர்வாக விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரியைப் போய்ப் பார்!” என்றார் சர்ச்சில்.“”இல்லை! நீங்கள் தலையிட்டுத் தான் என் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும்!” என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்தாள் அந்தப் பெண்மணி.
“”முடியாது! நீ முதலில் வெளியே போ!” என்று சற்று கடுமையாகக் கூறினார் சர்ச்சில்.அந்த முரட்டுப் பெண்மணிக்கு “சட்’டென்று கோபம் வந்தது.
“”ஒரு பெண்ணிடம் சிறிது கூட இரக்கமில்லாமல் நடந்து கொள்ளும் நீர் ஓர் ராட்சஷர். இப்போது நான் மட்டும் உமது மனைவியாக இருந்திருந்தால், உமக்கு விஷம் கொடுத்துக் கொன்றிருப்பேன்!” என்று கத்தினாள்.


அதைக் கேட்ட சர்ச்சில் புன்னகைத்தார்.

“”பெண்ணே! நீ மட்டும் என் மனைவியாக இருந்திருந்தால், நீ கொடுக்கும் விஷத்தை மகிழ்ச்சியோடு வாங்கிக் குடித்துவிட்டு என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன்!” என்றார்.

வெட்கத்துடன் இடத்தை காலி செய்தார் அந்தப் பெண்மணி.

0 மறுமொழிகள் to வின்ஸ்டன் சர்ச்சில்!!! :