ஒபாமா ஷூ ' !!!


நம்மூரில் என்றால் அவமரியாதை என்று கொந்தளித்து விடுவார்கள் . ஆனால் , அமெரிக்காவில் புதிய அதிபர் ஒபாமா முகம் அச்சிடப்பட்ட காலணி அமோகமாக விற்பனையாகி வருகிறது . முதல் கறுப்பின அதிபராக ஒபாமா பொறுப்பேற்ற உற்சாகம் அமெரிக்காவெங்கும் .அதன் ஓர் அங்கமாக டீ - ஷர்ட்கள் , சாவிக்கொத்துகள் என்று கிடைப்பதில் எல்லாம் ஒபாமாவின் உருவத்தை அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள் .அந்த வகையில்தான் இந்த ' ஒபாமா ஷூ ' .இதில் ஒபாமாவின் உருவத்துடன் , அவரது புகழ்பெற்ற வாக்கியங்களான ' ஆம் , நம்மால் முடியும் ' , ' மாற்றம் தேவை ' பொன்றவையும் இடம் பெற்றுள்ளன . காலணியின் அடிப்பகுதியில் ஒபாமா படம் . மென்மையான பரப்பில் மிதித்தால் ஒபாமா உருவத்தை உருவாக்கும் அச்சு போன்றவை உள்ள காலணிகளும் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன .


0 மறுமொழிகள் to ஒபாமா ஷூ ' !!! :