விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!!

விலங்குகள் பேசும் பேச்சினை அறிவது பிபிலிகவாதம் என்று பெயர்பெறும். அது ஆய கலைகள் அறுபத்திநான்கில் ஒன்று.—->
அரசன் ஒருவன் உணவு அருந்துவதற்காக அமர்ந்து பட்டமகிஷி தன் கையினால் உணவு வழங்கிக் கொண்டிருந்தார்.


தலை வாழையிலையின் மீது வைக்கப்பட்டிருந்த இனிப்பின் அருகே ஒரு சிற்றெறும்பு வேகமாக வந்துகொண்டிருந்தது.தரையினின்றும் ஓர் எறும்பு இலையின் மீது ஏறி இனிப்பினை நெருங்க முயன்றுகொண்டிருக்கும் எறும்பினிடம் ஒருதுண்டு இனிப்பினை இழுத்துத் தனக்காகத் தள்ளுமாறு கூறியது.
“ஏன்? நீயே ஏறிவந்து எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே” என்றது. அதற்கு பதிலாக கீழே நின்ற எறும்புகூறியது” என்கால்கள் அழுக்காக இருக்கின்றன. உண்பவர் மதிப்பின் அரசர்! அவரது இலையினில் நான் அழுக்காக்குவது சிறப்பன்று! ”


அற்ப விலங்குகளின் உரையாடல் மன்னனைக் கவனிக்கவைத்தது.அரசன் விலங்குகளின் பேசும் மொழி அறிவான் ., அவ்வாறு மொழியறிந்தவர்கள் அதனைப் பிறரிடம் கூறிவெளிப்படுத்தினால் கல்லாக மாறிவிடுவர் என்பது மரபு.
மன்னன் என்பவனுக்கு அவையும் அன்பு செலுத்துகின்றன என்பதை நினைத்து வாய்விட்டுச் சிரிக்கவும் உள்ளே யிருந்து வந்துகொண்டிருந்த அரசி நகைப்பின் கூட அவரும் கலந்து கொண்டு சிரிப்பின் காரணம் கேட்டார்.


வந்தது வினை.சொல்லக்கூடாத காரணத்தை சொன்னாலே ஆயிற்று என்று அவர் பிடிவாதம் பிடிக்க, அரசன் அப்படியே கைகழுவி எழ, விரசமான காட்சி தலையெடுத்து, மன்னனும் மகிஷியும் மெªனம் சாதிக்க, தகவல் அரண்மனை மட்டுமல்லாது நகர்முழுதும் பரவியதோடு அரசுப்பணிகள் தேக்க நிலைகண்டு பதினைந்து நாட்கள் கழிந்தன.
அரசன் அரசியிடம் உண்மையைக் கூறிவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். இறுக்க சூழ்நிலை தீரவேண்டுமானால், அரசுப்பணி தேக்கம் தவிர்ப்பதற்காக தான் கல்லாய் மாறிவிடுவது மட்டுமே சிறந்த வழி! வாழ்ந்தது போதும் என்று எண்ணி அரசியை அழைத்துக்கொண்டு தேர் ஏறி நந்தவனம் தாண்டி நதிக்கரை நோக்கி தேரைச் செலுத்தச் செய்தான்., பின்னர் சாரதியை இறங்கச் செய்துவிட்டு தானே தேர் செலுத்த ஆரம்பித்தான். தண்ணீரில் நின்றுகொண்டு உண்மையினை உரைத்தால் கல்லாக்கிய தன்னுடம்பு நீரினில் ஆழத்தில் மூழ்கி பிறர் அறியாதவண்ணம் மறைக்கப்படுவதை மனதில் எண்ணினான்.வாழ்வின் இறுதியினை இன்று காண்பது என்று முடிவுக்கு வந்தான்.


தேரில் சாரதியின்றி அரசியுடன் இருவருமாய்ச் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு கிணற்று மேட்டினில் இரு ஆடுகள் உரையாடிக்கொண்டிருந்ததை அரசன் கவனித்துக் கேட்டான்.


சூல் கொண்ட பெட்டையாடு இளந்தளிர் இலைபறித்துத் தனக்குத்தருமாறு கிடாயாட்டினைக் கேட்க, அந்த ஆடு பதில் சொல்லியது.” ஏ பெட்டை மிருகமே! நீ என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாய்? இதோ தேர் ஏறி வந்து கொண்டிருக்கும் அரசனைப் போன்று நானும் புழுங்கி உன் வார்த்தைக்காக கிணற்றின் வரிசைக் கற்கள் மிது ஏறிநின்று தவறி உள்விழுந்து மாய்ந்து போவேன் என்று நம்புகின்றாயா? உன்னை அடக்கும் விதம் நான் அறிவேன்.

இப்போதே உன்னை முட்டித் தள்ளுகின்றேன் பார் என்று முன்னங்கால்கள மடக்கிக் பககவாட்டில் திரும்பி பின்னங்கால்கள் மிது நிற்கவும், பெட்டை பயந்துகுனிந்து ” நீ ஒன்றும் எனக்குத் தரவேண்டாம். நான் கிணற்றில் விழுந்து சாவேன். என்னை முட்டித்தள்ளிவிடாதே! வயிறில் இருக்கும் குட்டியும் மாளும். ” என்றுசொல்லி தூரத்தே செல்லவாரம்பித்தது.


முழுமையாக ஆடுகளின் வசனம் அரசனை உசுப்பியது.
அரசியை விடுத்து கீழே இறங்கினான் மன்னன். ” ஆட்சி பீடத்தில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு. ஒவ்வொன்றையும் உன்போன்றோருக்குச் சொல்லித்தான் தீரவேண்டுமோ? இல்லையென்றால் முகத்தை வீங்கவைத்துப் பெரிதாக்கி , குட்டையைக் குழப்பி நரகவேதனை தருவீர்கள்! பெண்களால் பட்ட துன்பம் போதும்!

இரண்டில் ஒன்று முடிவுசெய்யவே இங்கு உன்னை தனியே அழைத்துவந்தேன். கையினில் உள்ள சவுக்கின் சுவை இதுவரை அறிந்திருக்கமாட்டாய் அன்றோ? இப்போது அறிவாயாக!” என்று சாட்டையை ஒங்கவும் அரசி பயந்து கண்ணீர் சிந்தி கால்களைப் பிடித்து கெஞ்ச ஆரம்பித்தார்.


“உண்மைதான், ஒரு அரண்மனைக்குள்ளேயே பெண்டிர் மத்தியில் ஆயிரம் மாறுபாடுகள் இருக்கும் போது தேசத்தின் அளவில் எவ்வளவு இருக்கும்! என்னை மன்னித்துவிடுங்கள்” என்றார் அரசி.

1 மறுமொழிகள்:

Anonymous said...

சங்கர், அரசனுக்கு கிடைத்த அறிவுறை சிறப்பானது...இதுவரை இந்த மாதிரி குட்டிகதை கேட்டதும் இல்ல..புதியதாக் இருக்கிறது...அரசனுக்கு மட்டும் அல்லாது எல்லோருக்கும், உணர்ச்சிவசப்படு அவசர முடிவெடுக்கும் அனைவருக்கும் பொருந்து..pon....