நான் நடை பயின்ற கடற்கரையில்
நான் பொறித்த என் காலடித் தடங்களை
போர் அலை வந்து முற்றாக அடித்துச்
சென்றிருந்தது.......
நான் மகிழ்ந்து சுவாசித்த
பூந் தென்றலில் கூட இன்று
பிணவாடை........
பொன்கதிர் விழைந்த கழனிகளில்
மலிந்து கிடக்கின்றது
பிணங்களின் எச்சங்கள்....
காளி கோவிலுக்குள் செருப்புப் போட்டால்
"காளிக்கிழவி கழுத்தை நெறிப்பா" என
அம்மா சிறுவயதில் சொன்ன ஞாபகம்....
இன்று மூலஸ்தானத்திலும் வெறியர்களின்
சப்பாத்துக் கால்தடங்கள்....
ஏன் அவர்கள் கழுத்தை மட்டும்
காளி நெரிக்கவில்லை??
பாடம் பயின்ற பள்ளிக் கூடங்கள்
காலம் செய்த கோலத்தால்
அகதி முகாம்களாயோ இல்லை
அந்நியனின் பாசறை ஆகவோ
மாறி தன் கோலம் மாறி இருந்தது....
முகவரி தொலைந்து
முட்கம்பிகளின் நடுவே
பரிதாபமாய் நான் நேசிக்கும்
என் தாய் மண்....
குரலிருந்தும் ஊமையாய்....
மௌன ஓலத்துடனும்,
கட்டுடைந்த கண்ணீருடனும்
செய்வதறியாது இக்கரையில் நான்.....
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
18 மறுமொழிகள் to பரிதாபமாய் என் தாய் மண் !!! :
நெஞ்சு பொறுக்கவில்லை... இந்த(கருணாநிதி,காங்கிரஸ்) நிலை கெட்ட மனிதர்களை நினைத்து...
கையாலாகாமல் கவிதை படைக்கிறோம்...
//முகவரி தொலைந்து
முட்கம்பிகளின் நடுவே
பரிதாபமாய் நான் நேசிக்கும்
என் தாய் மண்....//
மனதை உறுத்தும் வரிகள்.. நன்றி
தங்களது இந்த கவிதை வரிகள் கல்மனதையும் கீறி இரத்தக்கண்ணீரை வரவைக்கும் வரிகள்..
//குரலிருந்தும் ஊமையாய்.... மௌன ஓலத்துடனும்,கட்டுடைந்த கண்ணீருடனும் செய்வதறியாது இக்கரையில் நான்..... //
ஏன் அக்கரையில் இருக்கீங்க.. புறப்பட்டு வாங்க..
ஏன் அவர்கள் கழுத்தை மட்டும்
காளி நெரிக்கவில்லை??
சிந்தியுங்கள்.... சத்தியத்திற்க்கு யாது பாகு பாடு..அப்படி இருக்க எங்கும் வலியவன் எளியவனை நசுக்குவதென்பது காலம் காலம் தொட்டு...ஏன் கடவுள் அறிவதில்லை...மற்றப்படி கவிதை ஒரு "செய்வதறியாது விழிக்கும்" மனதின் புலம்பல் வெளிப்பாடு.pon...
மிகவும் மனதை உருக்கும் கவிதை தோழரே . இதற்கு சீக்கிரமே நல்லதொரு முடிவை நம்மை போன்ற இளம்வயதினரால் மட்டுமே தர முடியும் என நம்புகிறேன் ..வாழ்த்துக்கள்
கட்டுடைந்த கண்ணீருடனும்
செய்வதறியாது இக்கரையில் நான்.....
///
நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான்
குரலிருந்தும் ஊமையாய்.... மௌன ஓலத்துடனும்,கட்டுடைந்த கண்ணீருடனும் செய்வதறியாது ...
காலம் மாறும், காட்சிகள் மாறும்..!
//குரலிருந்தும் ஊமையாய்.... மௌன ஓலத்துடனும்,கட்டுடைந்த கண்ணீருடனும் செய்வதறியாது இக்கரையில் நான்..... //
இக்கரையில் நாங்கள்...
வாழ்த்துக்கள்...
500 இதயங்களை உங்கள் எழுத்துக்களால் கொள்ளை கொண்டதற்கு ..
மறக்க நினைத்தாலும் மறக்கமுடியா நினைவுகளும் என் மக்களும்.
இன்னும் நினைவு படுத்தி மறக்காதே என்பதைப்போல கவிதை.மறத்தல் அவ்வளவு சுலபமல்ல தோழரே !
கை கோர்ப்போம்.
கையாலாகாமல் மறுமொழி படைக்கிறோம்...
மனதை வருந்திய கவிதை...500க்கு வாழ்த்துக்கள் சங்கர்!!
இந்த பாவத்தை எங்கணம் தீர்ப்போம் என்று தெரியவில்லை.
வலி சொல்லும் என் தாய் மண் ..பரிதாபமாய் நான் .....இது தான் விதியா..விதியை மாற்றுவோம்.
ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கவேண்டிய வரிகள். உணர்வில் வலியை தாங்கி செல்லும் அருமையான கவிதை. நன்றி சங்கர்.
திரு சங்கர் அவர்களே,
நான் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருக்கிறேன். தயை கூர்ந்து என் பதிவுகளை படித்து உங்கள் மேலான கருத்தை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
http://sriramsrinivasan.net
-ஸ்ரீராம்
kavithai arputham.alamana karuthukalum alakana karpanikalum ...
valthukal tholara...
Post a Comment