இன்று ஒரு தகவல் 32 - பூகம்பம் வருவதை அறியும் அதிசய தவளைகள் !!!

னைவருக்கும் வணக்கம். உலகத்தில் அசுர வேகத்தில் நாளுக்கு நாள்
அறிவியலின் வளர்ச்சி முன்னேற்றம் கண்டாலும் இயற்கையான பல நிகழ்வுகளுக்கு எந்த வகையிலும் பயன் இன்றிதான் இந்த வளர்ச்சிகள் உள்ளது. இதில் யாரும்எதிர் பாராமல் ஏற்படும் பூகம்பம், சுனாமி போன்ற ஆபத்தான இயற்கையான நிகழ்வுகள்தான் மனித இனதிற்கு பெரிதும் அச்சுறுதலாக இதுவரையில்  இயலுமா என்று கேட்டால் இயலாத ஒன்றுதான்.

சரி இந்த அபாயங்கள் வருவதற்க்கு முன்பு ஒருவேளை எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் எதுவும் அறிவியலின் வளர்ச்சியில் சாதித்து இருக்கிறோமா என்று கேட்டாள் அதற்கும் இதுவரை சரியான பதில் இல்லை. அந்த வகையில் இந்தப் பதிவு அதை பற்றியதுதான்,

ருவேளை பூகம்பம் அல்லது சுனாமி இது போன்ற பெரும் அழிவுகள் வருவதற்கு முன்பு நமக்கு தெரிந்தால் அதில் இருந்து பெரும்பாலான மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலும்.அந்த வகையில் இப்பொழுது பூகம்பம் வருவதை  முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி எங்கு இருக்கிறது என்று ஆய்வு செய்ததில் நம்மை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் பல விடையங்கள் கிடைத்திருக்கிறதாம். ஆம் நண்பர்களே..! பூகம்பம் வருவதை ஐந்து நாட்களுக்கு முன்பே அறியக்கூடிய திறன் தவளைகளுக்கு உண்டு என்று. பாரீசைச் சேர்ந்த புவியியல்
ஆராய்ச்சியாளர் ரசெல் கிரான்ட் தலைமையிலான குழு ஆய்வு அறிக்கை நிரூபித்து இருக்கிறார்களாம் .

 உலகத்தில் மனித இன அழிவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்
தாக்கங்களில் பூகம்பமும் ஒன்று இதைப் பற்றி பிரான்சில் நடந்த
ஆராய்ச்சியில் உலகத்தில் உள்ள அனைத்து விலங்குகளையும் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இறுதியாக பூகம்பம் ஏற்படப் போவதை குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாக தவளைகள் அறியக்கூடும் என்று பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை உறுதி செய்து ஜூவாலஜி ஜர்னல் என்ற இதழ் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது . இந்த ஆய்வில் தவளை பூகம்பம் வருவதை எப்படி உணர்வதாக நீங்கள் அறிந்தீர்கள் என்று கேட்டதற்கு அந்தக் குழு இத்தாலியின் லாகுய்லா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 500 பேர் பலியாகினர். 60,000 பேர் தங்களின் உடமைகள் வீடுகளை இழந்து தவித்தனர். அந்தப் பகுதியில்

பூகம்பத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை வசித்த தவளைகள், பூகம்பம் ஏற்பட்ட தினத்தில் ஒன்று கூட இல்லாமல் அங்கிருந்து சென்றிருப்பது தெரியவந்து இருக்கிறது. அதை வைத்து தவளைகளுக்கு பூகம்பத்தை முன்கூட்டி அறியும் திறன் உள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு நடந்தது. பூகம்பம் ஏற்படுவதற்கு முன் பூமியில் இருந்து வெளியாகும் ஒருவித வாயு, துகள்களை வைத்து ஆண் தவளைகளால் பூகம்பத்தை கணிக்க முடியும் என அதில் தெரிய வந்தது. குறைந்தது 5 நாட்களுக்கு முன்பே ஆண் தவளையால் பூகம்பம் ஏற்படப் போவதை உணர முடியும். இதை வைத்து முன்கூட்டி பூகம்ப எச்சரிக்கை விடுக்க முயற்சிக்கலாம் என்றும் அவர்கள் உறுதி செய்து இருக்கிறார்களாம்.

 தற்கு முன் நடந்த ஆராய்ச்சிகளில், பூகம்பத்துக்கு முன் புவியீர்ப்பு அலைகள் அல்லது ரேடியோஆக்டிவ் வாயு வெளிப்படுதல் ஆகியவற்றைக் கொண்டு பூகம்பம் ஏற்படப் போவதை முன்கூட்டி அறியலாம் என்று கூறப்பட்டது. எனினும், அதுபற்றி தெளிவான நிலை இல்லை. அவை அனைத்தும் சரியான எந்த தகவலும் தராததால் யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருந்தது. ஆனால் இப்பொழுது இந்த தவளையின் ஆய்வு அறிக்கை அனைவருக்கும் நம்பிக்கை தருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
   
இனி எல்லோரும்
வளை வளர்ப்போம்..!  பூகம்பம் வருமுன் தடுப்போம்..!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

24 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 32 - பூகம்பம் வருவதை அறியும் அதிசய தவளைகள் !!! :

Chitra said...

Interesting facts!

வால்பையன் said...

இன்னும் நிறைய சொல்லுங்க!

Karthick Chidambaram said...

Very interesting. Please write these sort of stuff more.

எல் கே said...

nice shankar very intersting facts

Praveenkumar said...

மிகவும் அரிய சுவாரஸ்யமான தகவல்கள் நண்பரே..! தொடர்ந்து அசத்துங்க..!

ஜீவன்பென்னி said...

ungal pathivugal anaithum puthiyathai arimugapaduththum payanulla pathivaaga ullathu.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சுவாரஸ்ய தகவல்கள்

வெங்கட் நாகராஜ் said...

சுவாரஸ்யமான அரிய தகவல்கள். தொடருங்கள் நண்பரே!

சௌந்தர் said...

நல்ல தகவல் நண்பரே..! தொடர்ந்து அசத்துங்க..!

Anonymous said...

சுவாரஸ்ய தகவல்கள்

நாடோடி said...

அறியாத‌ த‌க‌வ‌ல்க‌ள்.... தொட‌ர்ந்து ப‌கிந்து கொள்ளுங்க‌ள்..

அகல்விளக்கு said...

Interesting....

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான தகவல்கள்.. இனி தவளைகளுக்கு கிராக்கி ஆகலாம்.

Ahamed irshad said...

சுவாரஸ்யமான தகவல்கள் நண்பரே..

Event photography said...

தகவல் அருமையாக உள்ளது
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

அருமை தம்பி. உன் பணி தொடரட்டும்.

Jeyamaran said...

Nice images

vasu balaji said...

அருமை!

Jey said...

பதிவிலுள்ள தகவல்களும், படங்கலும் அருமை. வாழ்த்துக்கள்

சுசி said...

நல்ல தகவல்.

நன்றி சங்கர்.

GEETHA ACHAL said...

அருமையான தகவல்கள்...பகிர்வுக்கு மிகவும் நன்றி...

ஹேமா said...

தேடித் தேடி தகவல்கள் சொல்றீங்க சங்கர்.சந்தோஷமும் நன்றியும்.
தவளைப் படம் அழகு.

மரா said...

இம்புட்டு தவளையை எங்கிட்டு புடிச்சீங்க!!

Unknown said...

அறியாத‌ த‌க‌வ‌ல்க‌ள்