அம்மா
பத்து மாதம் வலிகள் ஆயிரம் தாங்கி
என்னை சுமந்தாய் ,
ஆனால் இன்று நான் பிறந்து
பத்து நிமிடங்கள் இல்லை
என் மழலை முகத்தை ரசிப்பதற்கு முன்
என் அறிகுறியைத் தேடியல்லவா
அவசர அவசரமாக அலைகிறது உன் கண்கள்
நான் ஆணா, பெண்ணா
என்று அறிந்துகொ(ல்ல)ள்ள !
ஆண் என்றால் மார்போடு அணைத்துக்கொள்கிறாய்
ஆயிரம் வார்த்தைகள் மலர்போல் பேசி
அள்ளிப் பால் கொடுக்கிறாய் !
பெண் என்றால் வார்த்தைகள்
தீர்ந்து போனாவளாய்
எட்டி நின்று என்னைப் பார்த்து
கள்ளிப் பால் கொடுத்து கொல்ல சொல்கிறாய் !
என்ன பிழை செய்தேன் தாயே
என்னை கொல்வதற்காகவா கருவுற்றாய்...??!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
21 மறுமொழிகள் to தீர மறுக்கும் கள்ளிப்பால் வாசம் (சிசுக் கொலை ) !!! :
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்...
நான் ஆணா , பெண்ணா
என்று அறிந்துகொ(ல்ல)ள்ள !
இது மிக அருமையான வார்த்தை
நன்றாகவுள்ளது நண்பா..
இப்போ கொஞ்சம் மக்கள் மனநிலை மாறியிருக்கிறது என நினைக்கிறேன்..
இன்னும் மாறாதவர்களும் மாற இதுபோன்ற அறிவுறுத்தல்கள் தேவைதான் நண்பா.
இப்போது பெண் சிசு கொலை குறைந்து உள்ளது இன்னும் முழுவதுமாக குறைய வேண்டும்
கவிதையிலயும் கலக்குறீங்க. :)
அழகான வரிகள்.
வாழ்த்துக்கள்.
வலிகள் நிறைந்த வரிகள் , அருமை
வலிகள் நிறைந்த வரிகள்..அருமை
"எட்டி நின்று என்னைப் பார்த்து
கள்ளிப் பால் கொடுத்து கொல்ல சொல்கிறாய் !" அருமை...
nalla kavithai nanbare
சீதனம் எனும் பெயரால் லஞ்சம் வாங்கும் ஆண்மையற்ற சமுதாயாமும் இதற்கொரு காரணம் தான். இந்நிலைமை குறைந்து வருவதைக் கேட்கும் பொது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது,
என்ன பிழை செய்தேன் தாயே
என்னை கொல்வதற்காகவா கருவுற்றாய்...??!!
நல்ல கேள்வி....இதுக்கு யார் பதில் சொவது...
சமுதாயம்...இந்த சமுதாய அவலத்தால்தானே ஒருதாயின் மனது கல்லாகிறது.."நான் இந்த சமுகத்தில் படும் அவலங்களையும், இன்னல்களையும் அவமானங்களையும்...என் பெண் படவேண்டாம்..அதை தெரியும்முன்னரே, அடையும் முன்னரே செல்லட்டும் என்றுத்தானோ.." அதனால் இந்த சமுதாய அமைப்பை சாடுங்கள்..பெண் இல்லை என்றால் பிறப்பேது...அவள் சக்தி...ப்டைப்பாளி...அவலை பேணிப்போற்றுங்கல்..வரதட்ச்சனை என்ற பெயரில் சூரையாடாதிருங்கள்.போற்றிப்பாருங்கள்....பிறகு தெரியும் கல்லிப்பால் என்றால் என்ன கேக்க வைக்கலாம்...
நல்ல சமுக ப்ரஞ்சையை உள்ளடைக்கிய கவிதகலை எழுதுகிறீர்கல்..
நல்ல அறிவுறுத்தல் சங்கர். அருமை.
நல்ல கவிதையை வாசித்த திருப்தி நண்பரே.
ரேகா ராகவன்.
(now at Los Angels)
சமூக சிந்தனை !!!
கவிதை நன்னா இருக்கு.
சிசுக்கொலை தமிழகத் தாய்மாரின் மொள்ளமாரிச் செயல். இதற்கு சில தகப்பன்மாரும் உடந்தை.
வறுமையும், வரதட்சணையும் கூட சில நேரங்களில் காரணங்களாகி விடுகிறது. 1998 ல் தர்மபுரி பகுதிகளில் இளங்கலை பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது சந்தித விடயங்கள் இவை.
பாராட்ட வார்த்தைகள் வரவில்லை ... எப்படி வரும், நான் சிறுவனாக இருந்த போது எங்க ஊரிலும் நிகழ்த்த நிகழ்வு. ஒன்றும் செய்யமுடியாதநிலை. குறி தேடுவது இன்றும் நிகழும் உண்மை.
பெண் சிசுவை கொள்ளும் தாய்மாரையும் சேர்த்து கொள்ளல் வேண்டும்.
அவளும் பெண் சிசுவை வந்தவள்தானே.
http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_09.html#comments
Post a Comment