என்னதவம் செய்துவிட்டேன் என் தாயே
உன்னை தாயாக நான் அடைய !
சிறுவயதில் உனக்கும் எனக்கும்
அடிக்கடி சண்டை!
செய்யாதே என நீயும் செய்வேன் என நானும்
போர்க்களம் ஆகும் வீடே!
புரிகிறது இப்போது சிற்பியாய் நீ இருந்து
செதுக்கி இருக்கிறாய் என்னை!
புரியவில்லை அப்போது மன்னித்துவிடு என்னை
என் அன்புத்தாயே!
நான் நோய்வாய்ப்பட்டால்
உருக்குலைந்து போவதென்னவோ நீதான்!
நான் அழநேர்ந்தால் உன் கண்ணிலும்
கண்ணீர்த்துளி!
என் சிரிப்பில் உன் முகத்தில் தெரியும்
ஒரு சூர்யோதயம் !
ஆனால் இன்றோ
முகவரி தொலைத்தக் கடிதமாய்
வீதிகளில் விழுந்துக் கிடக்கிறேன் .
மனித உடல் கொண்ட மிருகங்களின்
இந்த சுய நல பூமியில் இன்னும்
ஒரு நொடி உயிர் வாழ
நான் விரும்பவில்லை .
கா த்திரு தாயே
நானும்
வந்துவிடுகிறேன் விரைவில்
இவர்களில் யாரேனும் ஒருவரால்
கொல்லப்பட்டு
காத்திருக்கும் இந்த கழுகின்
பசி தீர்த்துவிட்டு .!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
30 மறுமொழிகள் to மரணத்தின் விளிம்பில் மழலையின் வாசகங்கள் !!! :
கடைசிப்படத்தை பாக்கையில் மனசை பிசைகிறது :-((.
sogam..!
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html
கவிதையும், படமும் மனதை பிசைகிறது.
மனதைப் பிழியும் படங்கள் மற்றும் கவிதை. சோகம்தான் :((
கவிதையும்,படமும் கல்நெஞ்சையும் கரைக்கும்.
வறுமையின் கொடுமை எப்படிப் பட்டது என்பதை கவிதையில் காணமுடிகிறது.
class
கடைசிப்படம் கல்நெஞ்சையும் கரைக்கும்.
வறுமையின் கொடுமை உங்க கவிதையில் காணமுடிகிறது.
கனமான வரிகள்....
வந்துவிடுகிறேன் விரைவில்
இவர்களில் யாரேனும் ஒருவரால்
கொல்லப்பட்டு
காத்திருக்கும் இந்த கழுகின்
பசி தீர்த்துவிட்டு//
இந்த வரி மிகவும் அருமை
இன்னைக்கு பதிவுலகத்தில தாயின் பதிவுகள இருக்குதே முதல சௌந்தர் இப்ப நீங்க அருமை அதுவும்
*/இந்த சுய நல பூமியில் இன்னும்
ஒரு நொடி உயிர் வாழ
நான் விரும்பவில்லை .
இது மிக அருமை/*
அருமைங்க.. நெஞ்சை உருக்குது..
நெஞ்சை உருக்கும் கவிதைக்கேற்ற படங்கள், இரும்பு மனதையும் உருக்கும் வறுமையின் கொடுமையை விளக்கும் வைர வரிகள்..!
கவிதை படிச்ச உடன் நெஞ்சு வலிகறதே ...நண்பா அருமையான கவிதை ஆனா ரொம்ப சோகமா இருக்கு படிச்ச பிறகு
மனதை உலுக்கும் படங்கள் - கவிதையும்.
கடைசி புகைப்படம் பற்றிய எனக்கு தெரிந்த ஒரு தகவல்..
அந்த சிறுவனை கழுகிடம் இருந்து காப்பாற்றாமல் படம் எடுத்து வந்த அதன்
புகைப்படதாரர் ஒரு சில நாட்களிலேயே தன மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டாராம்.
ஒரு புத்தகத்தில் படித்தேன்.
சிற்பியாய் நீ இருந்து
செதுக்கி இருக்கிறாய் என்னை//
உண்மைதான் ஷங்கர்..
:(... என்ன சொல்ல..
நெஞ்சை பிழியும் கவிதைகளும், படங்களும்..
கடவுளே..
மனசு ரொம்ப கனமாயிருச்சி சங்கர்.
பனித்துளி சங்கர் எங்கள் கண்களில் கண்ணீர் துளி வரவழைத்து விட்டீர்கள்
ரொம்ப கனத்து போச்சு கவிதைய படிச்சு முடிச்ச உடனே.
கனத்த இதயங்களில்
கவிதை.
வெறுத்து விம்முது
வாழ்க்கை
மனதில்
கழுகு காத்திருக்கும் படம், பத்திரிகை காரர் யாரும் மறக்கவே மாட்டார்கள். பல கதை பேசும் படம்!
தாய் - கவிதை
வேறு என்ன?
மனதைத் தொடும் வரிகள்..!!
//வந்துவிடுகிறேன் விரைவில்
இவர்களில் யாரேனும் ஒருவரால்
கொல்லப்பட்டு
காத்திருக்கும் இந்த கழு/
nice
இன்னொரு தகவல்...அந்த கடைசி புகைப்படத்தை எடுத்தவர் மனம் கலங்கி இறந்துவிட்டார்...நம் மனமும் கலங்குகிறது...
அருமையான வரிகள்..
அருமையான வரிகள்..
Post a Comment