நிஜங்களில் தொலைந்து போகும்
ஆசைகள் அனைத்தையும் மீண்டும்
ஒன்றாய் என் இரவுக்குள் நிரப்பும்
கருவூலமாய் என் கனவுகள் .
ஆயிரம் ஆசைகள் ஆடையின்றி
எச்சில் வற்றி தொண்டை காய்ந்து
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மீண்டும் மீண்டும் நிலையற்ற
ஆசைகள் அனைத்தையும் நித்தம்
என் எண்ணங்களில் குவிக்கும் சொர்க்கம் .
ஆயிரம் ஆசைகள் ஆடையின்றி
இன்றும் அங்கும் இங்கும் .
நிலையற்ற நீர்குமிழிகள் போல்
தினம் தினம் தீர்ந்துபோகும் இரவுக்குள்
விரும்பியே தொலைந்து போகிறது
என் கனவுகளும் !
எச்சில் வற்றி தொண்டை காய்ந்து
விழிகள் நீர் தேடும்
தாகத்தின் தருணங்களில் கூட
நிஜத்தின் அருவிகளை வெறுக்கிறேன் !
ஆனால்
கனவில் கொதிக்கும் பாலைவனம்
கண்டு தாகம் தீர்ந்ததாய் பரவசம் அடைகிறேன் . .
மோகத்தின் உச்சத்தில் கூட
மலரின் தீண்டலை வெறுக்கிறேன் .
கனவுகளின் முட்களில் தெரிந்தே
கிழிந்துபோக ஆசைப்படுகிறேன் .
பனித்துளி மோதி வலி கண்டதாய்
நிஜத்தில் உணர்கிறேன்
நிஜத்தில் உணர்கிறேன்
சுவற்றில் முட்டியும் சொர்க்கம் கண்டதாய்
கனவில் சிரிக்கிறேன் ....
மொத்தத்தில் கனவுக்குள் நிஜத்தை தொலைத்து
நிறைவேற மறுக்கும் நிஜத்தை வெறுத்து
நிலையற்று ஜெயிக்கும் கனவை ரசித்து
தினம் கண்மூடி கடந்துகொண்டிருக்கிறேன்
நானும் ஒரு சராசரி மனிதன் என்று சொல்லிக்கொள்ளும்
அங்கங்களின் சிறு அடையாளங்களுடன்
தினம் தினம் இந்த பூமியில் ..........
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
22 மறுமொழிகள் to நிஜங்களின் தாகம் தீர்க்கும் கனவுகள் !!! :
//தாகத்தின் தருணங்களில் கூட
நிஜத்தின் அருவிகளை வெறுக்கிறேன்//
பின்றீங்க.....
படமும்... அருமை.
கவிதையும்... நல்லாயிருக்கு.
பாராட்டுக்கள்.
கவிதையும் படமும் அருமை. வாழ்த்துக்கள்.
excellent. best wishes dear
நல்ல கவிதை !! பாராட்டுக்கள்.
மொத்தத்தில் கனவுக்குள் நிஜத்தை தொலைத்து
நிறைவேற மறுக்கும் நிஜத்தை வெறுத்து
நிலையற்று ஜெயிக்கும் கனவை ரசித்து
தினம் கண்மூடி கடந்துகொண்டிருக்கிறேன்
//
பின்னிட்டீங்க!!
அருமை! கனவுகளை நிஜமாக்க முடியா இயலாமையும், நிஜத்தை ஏற்றுக்கொள்ள முடியா இயல்பும் இங்கு பெரும்பாலோரின் சங்கடம் தான்!
ஒவ்வொரு மனிதனின் கனவுகள் மெய்ப்பட வேண்டும். தங்களின் கனவுகளை பதிவு செய்திருக்கும் விதம் அருமை. எங்கள் எண்ணங்களின் கனவுகளே கலைந்துவிடாதே. நாங்கள் இன்னும் எழுதவேண்டும். எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு கனவு வேண்டும்...
மிகவும் சிறப்பான கவிதை.
உங்களின் கவிதை வரியின் ஜாலத்தில் மயங்கி வரிகளுக்குள்ளேயே சுற்றிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறேன்! அருமை நண்பா.....அற்புத கவிஞா! வாழ்த்துக்கள்!~
உங்களின் கவிதை வரியின் ஜாலத்தில் மயங்கி வரிகளுக்குள்ளேயே சுற்றிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறேன்! அருமை நண்பா.....அற்புத கவிஞா! வாழ்த்துக்கள்!~
கிளாஸ்
//விரும்பியே தொலைந்து போகிறது என் கனவுகளும் !//
நல்லாருக்குங்க நண்பரே... அதிலும் சுகம்தானே...
அனைத்தும் அருமை... புதுமையான கவிதைகள்... வாழ்த்துக்கள் நண்பரே....
//ஆயிரம் ஆசைகள் ஆடையின்றி
இன்றும் அங்கும் இங்கும் .
நிலையற்ற நீர்குமிழிகள் போல்
தினம் தினம் தீர்ந்துபோகும் இரவுக்குள்
விரும்பியே தொலைந்து போகிறது
என் கனவுகளும் !
//
அழகான வரிகள்
நல்ல கவிதை நண்பரே
//மொத்தத்தில் கனவுக்குள் நிஜத்தை தொலைத்து
நிறைவேற மறுக்கும் நிஜத்தை வெறுத்து
நிலையற்று ஜெயிக்கும் கனவை ரசித்து
தினம் கண்மூடி கடந்துகொண்டிருக்கிறேன்//
அருமை.......அருமை.......
அருமையான கவிதை..
//ஆயிரம் ஆசைகள் ஆடையின்றி
இன்றும் அங்கும் இங்கும் .
நிலையற்ற நீர்குமிழிகள் போல் //
சூப்பர்,,,
கனவு இல்லைன்னா வாழ்க்கை சுவைக்காது..
பனித்துளி மோதி என்ன (தென்றல்) காற்று மோதி காயம் பட்டவர்களே இருக்காங்களே சங்கர்...
நல்லா எழுதி இருக்கீங்க..
super
அருமை அனைத்தும்
அருமை அனைத்தும்
//எச்சில் வற்றி தொண்டை காய்ந்து
விழிகள் நீர் தேடும்
தாகத்தின் தருணங்களில் கூட
நிஜத்தின் அருவிகளை வெறுக்கிறேன் !
ஆனால்
கனவில் கொதிக்கும் பாலைவனம்
கண்டு தாகம் தீர்ந்ததாய் பரவசம் அடைகிறேன் . .//
மிக ரசித்த வரிகள் கவிதை அருமையா வந்திருக்கு...வாழ்த்துகள்..சங்கர் ஜி...
semma super!! naan yenna pandren olinchu paatha mathiri irunthucu....
Post a Comment