பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 2 !!!

னைவருக்கும் வணக்கம் .என்னதான் புதுமைகள் தினம்தோரும் தோன்றி மறைந்தாலும் பழமைகள் என்றும் ஒரு புதுமைதான் . அதிலும் புகைப்படங்கள் என்றும் இளமை தீராத ஒரு அதிசயங்கள்தான் . அந்த வகையில் எனக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு மடலில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப் பட்டப்புகைப்படங்கள் கிடைத்தது .இதோ உங்களையும் மகிழ்விக்க அந்த புகைப்படங்களும் அதற்கான எனது புகைப்படக்கவிதையும் பார்த்தும் படித்தும் மகிழுங்கள் . மகிழுங்கள் .




ன்று செயற்கை இல்லை
அதனால்தான் மனிதன் இயற்கையோடு
வாழ்ந்திருக்கிறான்
ஆனால்
இன்று செயற்கை
மட்டும்தான் இருக்கிறது
அதனால்தானோ மனிதன்
இயற்கையை மறந்திருக்கிறான் !

ன்று வீட்டின் சுவர்களையே
இயற்கையில்தான் செய்திருக்கிறான்
ஆனால்
இன்று அதே இடத்தில் உருவான
வீட்டின் சுவர்களில் வரைந்த
செயற்கை ஓவியங்களில் மட்டும்தான்
எஞ்சி இருக்கிறது இயற்கை !

நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும்
மரங்களையும் , மனிதர்களையும்
பார்த்து ரசிக்கும் இந்த தருணம்
பொக்கிஷம்தான் !

ன்றே எஞ்சி இருக்கும்
மரங்களையும் , இயற்கையையும்
புகைப்படம் எடுத்துவைத்துகொள்கிறேன்
இன்னும் ஒரு சில ஆண்டுகளில்
உலகத்தில் எங்கும் கிடைக்காத
அரிய பொக்கிஷம் என்று
இந்தப் புகைப்படங்கள் மாறிப்போகலாம் !


 








 








ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

22 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 2 !!! :

ரிஷபன் said...

பெருக்கெடுத்தோடும் நீர்.. புகைப் படங்களில் பார்த்து.. பெருமூச்சு.. அழகான பதிவு..

Abu Khadijah said...

எப்படி கிடைத்தது உங்களுக்கு இந்த படங்கள், அருமையான பதிவு.

Swengnr said...

நல்ல பழைய படங்கள்! பகிர்வுக்கு நன்றி! ஆனால் அந்த மாட்டை படுக்க வைத்து கிட்டே போனால் "click to share" comment நாங்க என்ன சொல்ல?

நாடோடி said...

அரிதான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரிதான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்...

அழகான பதிவு..

ஆ.ஞானசேகரன் said...

அழகு

அன்புடன் நான் said...

வியப்பான படங்கள் அருமை!

priyamudanprabu said...

அருமையா இருக்கு

vasu balaji said...

புகைப்படங்களே கவிதை. பகிர்தலுக்கு நன்றி சங்கர்.

Unknown said...

புகைப்படங்கள் அனைத்தும் அருமை. அரிதான புகைப்படங்களை தந்த இப்பதிவிற்கு நன்றி

பத்மா said...

nice pictures

Riyas said...

//அன்று செயற்கை இல்லை
அதனால்தான் மனிதன் இயற்கையோடு
வாழ்ந்திருக்கிறான்
ஆனால்
இன்று செயற்கை
மட்டும்தான் இருக்கிறது
அதனால்தானோ மனிதன்
இயற்கையை மறந்திருக்கிறான் //

யாவும் உண்மை..

veeramanikandan said...

ungalaivida ungal pugaipadathoguppu migavum pesugiradhu... actually enga irundhu ipdi ellam collect panreenga...

சுசி said...

சரியா சொன்னிங்க சங்கர்.

படங்கள் பொக்கிஷம்தான்.

மதுரை சரவணன் said...

படங்கள் பொக்கிசம் தான். வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மலரும் நினைவுகள்

ஜில்தண்ணி said...

பார்த்திராத புகைப்படங்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி

AkashSankar said...

அரிய பொக்கிஷம்...

செந்தில்குமார் said...

உங்களாள மட்டும் எப்படி இப்படியெல்லாம்

அருமையான‌ நிழல்பட தொகுப்பு

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. ஆதங்கமான கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான புகைப்படங்கள். பகிர்வுக்கு நன்றி.

Praveenkumar said...

மிக அருமையான புகைப்படங்களின் தொகுப்பு.. கவிதைக்கு அழகுசேர்க்கும் வகையில் அருமையாக தொகுத்து இருக்கீங்க..! தொடர்ந்து அசந்துங்க நண்பா..!