இன்று ஒரு தகவல் 31 - உலகப் பணக்காரர் PART 2 !!!


அனைவருக்கும் வணக்கம் தினமணி நாளிதழில் எனது அனைத்துப் படைப்புகளையும் தவறாமல் இடம் பெற ஆதரவு தந்துகொண்டிருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள்.

எனது இன்று ஒரு தகவல் 30 - உலகப் பணக்காரர் PART 2 !!! 1 என்ற முதல் பதிவில் திருப்பதி வெங்கடாசலபதி என்றவுடன் எல்லோருக்கும் பணக்காரக் கடவுள் என்றுதான் தெரியும் ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி அவர் ஒரு ஏழையாம். அதிகக் கடன்கள்பட்டவர் என்றால் நம்புவீர்களா ?? இதை பற்றிய தகவல்களுடன் எனது அடுத்தப் பதிவில்
சந்திப்பதாக முடிததிருந்தேன் இதோ அதன் தொடர்ச்சி.

திருப்பதி வெங்கடாசலபதி என்றவுடன் எல்லோருக்கும் பணக்காரக் கடவுள் என்றுதான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி அவர் ஒரு ஏழையாம். அதிகக் கடன்கள் பட்டவராம். அவரது வரலாற்றை முழுதும் அறிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை இது. ஒரு முறை திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கினாராம். அப்பொழுது குபேரன் எப்படி இவ்வளவு பணத்தையும் திருப்பி அடைப்பீர்கள் என்று கேட்டதற்க்கு, ""யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடமிருந்து பணத்தை
வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன்,'' என அவரிடம் வாக்கு
கொடுத்துள்ளார். அதன் படித்தான் இன்றும் நாம் காணிக்கைகளாக நம்மால்
இயன்றதை கோவில் உண்டியலில் போட்டுக்கொண்டு இருப்பதாக புராணக் கதைகள் சொல்கின்றனவாம். எது எப்படியோ ஆனால் இவர் மட்டும் எப்படி பணக்கார கடவுள் என்று சொல்லப்படுகிறார் என்று பார்ப்போம் .

உலகத்தில் மிகவும் வேகமாக நிரப்பப்படும் உண்டியல்கள் திருப்பதி
வெங்கடாசலபதி கோவிலில் இருக்கும் உண்டியல்கள்தானாம். என்ன வியப்பாக இருக்கிறதா !. உண்மைதான் சாதாரண நாட்களில் கூட பத்து உண்டியல்கள் நிரம்பிவிடுகிறது என்றால், திருவிழாக்காலங்களில் சொல்லவே வேண்டாம். "காவாளம்' எனப்படும் மிகப்பெரிய பித்தளை அண்டா துணி சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நமது பார்வைக்கு தெரியாமல் உள்ளே நிறுத்தப்பட்டிருக்குமாம். அது நிறைந்தவுடன் அந்த வண்டியை நகர்த்தி விட்டு, புதிய அண்டாவுடன் இன்னொரு வண்டி உள்ளே தள்ளப்படுமாம். நிரம்பிய பானை பாதுகாப்புடன் உண்டியல் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்படுமாம். அது மட்டும் இல்லை ஒரு அண்டாவிற்கு குறைந்தது வசூல் கோடிக்கு குறைவாக இதுவரை இருந்ததே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு
 எவ்வளவு மக்கள் அங்கு சென்று காணிக்கை செலுத்துவார்கள் என்று ..

திருப்பதி வெங்கடாஜலபதிதான் இப்போது உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் ! இவரின் வங்கியின் சொத்து மதிப்பு மட்டும் 1.5 லட்சம் கோடியைத் தாண்டி விட்டதாம். இந்தப் பணத்தில் இருந்து மட்டும் வட்டியாக வருடத்திற்கு 300 கோடி பணம் வருகிறதாம். உலகத்திலியே ஒரே நேரத்தில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் இந்த திருப்பதி கோவிலும் ஒன்று. நாள் ஒன்றிற்கு ஒரு இலட்சம் மக்கள் வந்து செல்கிறார்களாம் . வாரம் ஒன்றிற்கு பனிரெண்டு முதல் 15 கிலோ வரை தங்கம் காணிக்கையாக உண்டியலில் மக்களால் போடப்படுகிறதாம். இதோடு மட்டும் இல்லாமல் இன்னும் சில கோடீஸ்வரர்களும் பக்தி பரவசத்தில் தங்களை அறியாமல் தாங்கள் அணிந்திருக்கும் அனைத்து நகைகள், வைரங்கள் அனைத்தையும் உண்டியலில் கொட்டி விடுகிறார்களாம் .

இப்படித்தான் ஒரு முறை கர்நாடக அமைச்சர் ஒருவர் வைரக் கற்கள் பதித்த ஒரு தங்கக் கிரீடத்தைக் காணிக்கையாகக் கொடுத்தாராம். அப்பொழுதும் அங்கு இருக்கும் நிர்வாகிகள் இதைப்போய் எதற்க்கு கொடுக்கிறீர்கள் இது அப்படி என்ன பெரிய காணிக்கையாக இருக்கப் போகிறது என்று கேட்க


அதற்க்கு அந்த மந்திரி சொன்ன பதில் அங்கு நின்ற அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். ஆமாங்க அவர் கொடுத்த அந்த கிரீடத்தின் விலை ஜஸ்ட் 4.5 கோடிகள்தானாம். இதைவிட அரசாங்கத்தின் கணக்கிலோ அல்லது மறைமுகமாகவோ இன்னும் இந்த  கோவிலுக்கு வரும் காணிக்கைகள் ஒவ்வொன்றுமே மில்லியனை தண்டுமாம் !


 கோவிலின் நகைகளின் சொத்து மதிப்பை இது வரை கணக்கிடப்படவில்லையாம். ஆனால் இதுவரை உள்ள நகைகளின் மதிப்பு 12 டன் இருக்குமாம். ஒரு டன் என்றாலே ஆயிரம் கிலோ என்றால் 12 டன் என்பது எவ்வளவு இருக்கும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். என்ன இன்னும் புரியவில்லையா.! நாம் தினமும் பார்க்கும் லாரி போல் குறைந்தது ஐந்து லாரிகள் வேண்டுமாம் இந்த நகைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள். மொத்த நகைகளின் மதிப்பு மட்டுமே 50 கோடியை தண்டிவிட்டதாம் .


இதுவரை பக்தர்கள் திருப்பதிகோயிலுக்கு தானமாக வழங்கிய நிலங்களின் மதிப்பு மட்டும் 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்குமாம். திருப்பதியில் முன்பு ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு முறைதான் உண்டியலை மாற்றினார்கள். இப்போது தினமும் 20 தடவைக்கு மேல் உண்டியல் மாற்றப்படுகிறது. ஏழுமலையான் அணிந்திருக்கும் கிரீடம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் அளித்தது. தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான் 100 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தில் சங்கிலி
ஒன்றை கொடுத்திருக்கிறார். இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 35ஆயிரம் பேர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !

இதற்கு பிறகும் நான் சொல்லத் தேவை இல்லை எதற்காக இவர் பணக்காரக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார் என்று. நீங்களே அறிந்திருப்பீர்கள் இதற்கு காரணங்கள் என்னவென்று.

ஆஹா நண்பர்களே ஒன்று மறந்துபோச்சே என்ன பாக்குறீங்க அதுததாங்க திருப்பதி லட்டு. இதில் என்ன இருக்கிறது என்று கேக்குறீங்களா இருக்குங்க இருக்கிறது நீங்கள் இதுவரை லட்டு என்பதை
அதிகபட்சமாக எவ்வளவு பெரிதாகப் பார்த்து இருப்பீர்கள் ஒரு ஒரு ஆப்பிள் சைஸ் அல்லது ஒரு பூசணிக்காய் சைஸ் ஆனால் திருப்பதியில் தினமும் உருவாக்கப்படும் லட்டின் எடை 13000 கிலோ என்றால் நம்புவீர்களா.!. இதை பற்றி பல வியப்பான தகவல்களுடன் உங்களை அடுத்தப் பதிவில் சந்திக்கிறேன்.எதிர் பார்ப்புகளுடன் காத்திருங்கள்.

                                                       

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
                                                    29 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 31 - உலகப் பணக்காரர் PART 2 !!! :

சௌந்தர் said...

ஆனால் இவரே கடன் வாங்கி உள்ளார்...

நாடோடி said...

சுவார‌ஸ்ய‌ம்... தொட‌ருங்க‌ள்..

Praveenkumar said...

வியக்க வைக்கும் அரிய தகவல்கள் நண்பா..! தொடருங்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ஆவலுடன்..

பருப்பு (a) Phantom Mohan said...

ஆச்சர்யமான விஷயங்கள் நெறைய சொல்றீங்க! உங்க பக்கத்துக்கு ரொம்ப லேட்டா வந்திருக்கேன், இனி தொடர்ந்து படிப்பேன்! தினமணியில் தினம் பார்க்கிறேன் உங்கள் பெயரை, வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட கடவுளும் நம்ம லிஸ்ட் தானா ?

அவர நம்பி கொட்டி குடுக்குறாங்க, நம்மள நம்பி அஞ்சு காசு கூட ஒரு பயலும் குடுக்கலையே ..

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி ..

வரதராஜலு .பூ said...

வழக்கம்போல கலக்கல்.

சுசி said...

நல்ல தகவல்களோட பதிவு நல்லா இருக்கு..

ஜில்தண்ணி said...

என்னாது 13000 கிலோ லட்டு தினமுமா,அப்பாடி
பயனுள்ள தகவல்கள்
நன்றி

Anonymous said...

திருப்தி வெங்கடாசலபதி பெருமாள் பதியும் கோவில் விஷயங்களே பத்தியும் நீங்க எழுதற இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு ..தொடர்ந்து எழுதுங்கள் ...வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

படிக்க படிக்க ஆர்வமாக இன்ரஸ்டா இருக்கு.. அருமையான கட்டுரை.

ஹேமா said...

நிறைவான தேடல் பதிவுகள் உங்களுடையது சங்கர்.நன்றியும் பாராட்டும்.

தமிழ் மதுரம் said...

இன்று ஒரு தகவல் அருமை. எனக்கு இந்தத் தங்கம் வழங்கும் கருத்து, கோடி கோடியாக் காணிக்கை வழங்கும் கருத்துக்களுடன் உடன்பாடில்லை நண்பா.

நான் கண்ட தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவைப் பொறுத்தவரை ஏழைகள் அதிகமாகவே வாழ்கிறார்கள். கோயில் எனும் பெயரில் பெருமளவாகத் திரட்டப்பட்ட இந்த நிதியினை வறிய மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கலாமே?


இறைவன் பணமும், நகையும் என்ன விரும்பியா கேட்கிறான்? நண்பா யாராவது நல்லவர்கள் இருந்தால் திருப்பதியானுக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள். டண் கணக்கிலுள்ள தங்கங்களும், கோடிக்கணக்கான பணங்களும் பொதுச் சேவைக்குப் பயன்படட்டுமே!

தகவல் அருமை. தொடருங்கோ சங்கர்.

தமிழ் மதுரம் said...

தினமணியில் தினம் தினம் வலம் வரும் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் தோழா!

Thenammai Lakshmanan said...

லட்டு விஷயம்தான் சூப்பர்..

க ரா said...

நல்ல தகவல்கள் சஙகர். தொடருங்கள்.

பனித்துளி சங்கர் said...

வாங்க soundar
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க நாடோடி
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க பிரவின்குமார்
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க Phantom Mohan
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////////வெறும்பய said...
அட கடவுளும் நம்ம லிஸ்ட் தானா ?

அவர நம்பி கொட்டி குடுக்குறாங்க, நம்மள நம்பி அஞ்சு காசு கூட ஒரு பயலும் குடுக்கலையே ..

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி ..
/////////
ஒரு முறை நான் கடவுள் என்று சொல்லிப் பாருங்க .

பனித்துளி சங்கர் said...

வாங்க வரதராஜலு .பூ நீண்ட இடைவெளிக்குப் பிறகு

நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சுசி

நன்றி !

பனித்துளி சங்கர் said...

////ஜில்தண்ணி said...
என்னாது 13000 கிலோ லட்டு தினமுமா,அப்பாடி
பயனுள்ள தகவல்கள்
நன்றி
////////////

ஆஹா நண்பரே நான் இன்னும் லட்டைப் பற்றி சொல்லவே இல்லை அதற்குள்ளும் !
பதிவை வாசீத்துவிட்டு கருத்தை சொன்னால் நலம் புரிதலுக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க sandhya
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க( ஸ்டார்ஜன் ) நீண்ட இடைவெளிக்குப்பிறகு

நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க ஹேமா

நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////தமிழ் மதுரம் said...
இன்று ஒரு தகவல் அருமை. எனக்கு இந்தத் தங்கம் வழங்கும் கருத்து, கோடி கோடியாக் காணிக்கை வழங்கும் கருத்துக்களுடன் உடன்பாடில்லை நண்பா.

நான் கண்ட தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவைப் பொறுத்தவரை ஏழைகள் அதிகமாகவே வாழ்கிறார்கள். கோயில் எனும் பெயரில் பெருமளவாகத் திரட்டப்பட்ட இந்த நிதியினை வறிய மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கலாமே?


இறைவன் பணமும், நகையும் என்ன விரும்பியா கேட்கிறான்? நண்பா யாராவது நல்லவர்கள் இருந்தால் திருப்பதியானுக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள். டண் கணக்கிலுள்ள தங்கங்களும், கோடிக்கணக்கான பணங்களும் பொதுச் சேவைக்குப் பயன்படட்டுமே!

தகவல் அருமை. தொடருங்கோ சங்கர்.
//////


வாங்க தமிழ் மதுரம் உங்களின் ஆதங்கம் நியாயமானது தான் .ஆனால் ஒன்று நான் சொல்லாதத் தவறிவிட்டேன் . இந்த கடவுளுக்கு வரும் பணத்தை அவர்கள் அப்படியே பூட்டி வைக்கவில்லை . இந்த கோவில் உண்டியலில் விழும் பணம் முழுவதும் ஏழைகளுக்கு கல்வி , மருத்துவம் , உணவு , இருப்பிடம் என எத்தனையோ லட்சம் மக்கள் இதனால் பயன்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் . ஒரு வருடத்திற்கு கல்விக்காக மட்டும் 1500 கோடிகள் செலவு செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களே !

நீங்கள் சொல்வதுபோல் மொத்த இந்தியாவிற்கும் உதவ நினைப்பது . வரவுக்கு அதிகமான செலவாகிவிடும் . புரிதலுக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////// thenammailakshmanan said...
லட்டு விஷயம்தான் சூப்பர்..
///////////

வாங்க thenammailakshmanan நான் இன்னும் லட்டைப் பற்றி சொல்லவே இல்லை அதற்குள்ளும் !
பதிவை வாசீத்துவிட்டு கருத்தை சொன்னால் நலம் புரிதலுக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க இராமசாமி கண்ணண்
நன்றி !