இருந்துவிட்டு போ தமிழன் என நீயும் !!!

 நீயும் நானும் பேசுவது தமிழ்தான்
நாம் இருவருமே தமிழர்கள் தான்
இதைவிட நமக்குள் என்ன ஒற்றுமை?
 
போராட்டங்கள் மட்டுமே
வாழ்வாகி போனது எனக்கு
போராட்டமா அப்படி என்றால்
என்கிறாய் நீ...

சொந்த மண்ணிலேயே
அகதிகளாய் நாங்கள்
வெந்துவிட்ட இதயங்கள்..
தொலைந்துவிட்ட சொந்தங்கள்...
சந்ததியே வேரறுந்து ...
நிம்மதியை தானிழந்து ..
இத்தனையும் இழந்தாலும்
இழக்கவில்லை நம்பிக்கை..

கூடிழந்த பறவைகளாய் நாங்கள்
கூடி வாழும் குருவிகளாய் நீ
ஆனாலும் என்னவோ
உன்மீது எனக்கு துளியேனும்
பொறாமை வரவில்லை
நீயேனும் நன்றாக இருக்கிறாய்
அது போதும் .

ரு வேளை சோற்றிற்கும் ,
ஒண்ட ஓரமாய் சிறிது இடத்திற்கு
நாங்கள் சிந்தியக் குருதிகளும் , உணர்வுகளும் ,
கத்தலும் , கதறலும் ,மொத்தமாய்
இந்த முற்கம்பி வேலிக்குள்ளேயே
புதைந்து போகட்டும்
வேண்டாம் இனியும்
 எந்த எதிரிக்கும் இந்த அவல நிலை.!

நீ எங்கு
பிறந்திருந்தாலும்
தமிழனாய் போனதினால்
நீயும் என் சகோதரனே .!

மிழ் அன்னை ஈன்றெடுத்த
மக்கள் தானே நாம்!
இதிலாவது நமக்குள்
ஒற்றுமை ஒன்று
இருந்துவிட்டு போகட்டும் !!




தினமணி நாளிதழில் -வெளியாகியுள்ளது நன்றி தினமணி




ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


25 மறுமொழிகள் to இருந்துவிட்டு போ தமிழன் என நீயும் !!! :

ஜீவன்பென்னி said...

// கூடிழந்த பறவைகளாய் நாங்கள்
கூடி வாழும் குருவிகளாய் நீ
ஆனாலும் என்னவோ
உன்மீது எனக்கு துளியேனும்
பொறாமை வரவில்லை
நீயேனும் நன்றாக இருக்கிறாய்
அது போதும்//

நல்லாயிருக்கு.

எல் கே said...

:(((

சௌந்தர் said...

சொந்த மண்ணிலேயே
அகதிகளாய் நாங்கள்
வெந்துவிட்ட இதயங்கள்..
தொலைந்துவிட்ட சொந்தங்கள்//
உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது. என் மனது ஏதோ சொல்கிறது.

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீ எங்கு பிறந்திருந்தாலும்தமிழனாய் போனதினால் நீயும் என் சகோதரனே .!
தமிழ் அன்னை ஈன்றெடுத்த மக்கள் தானே நாம்!இதிலாவது நமக்குள்ஒற்றுமை ஒன்று இருந்துவிட்டு போகட்டும் !!

///
இது ஒவ்வொரு தமிழனுக்கும்..

Praveenkumar said...

அருமை நண்பா..!
மிகவும் நல்லாயிருக்கு..!

Asiya Omar said...

சங்கர் ,கவிதை அருமை.ஆனால் மனதை ஏதோ செய்கிறது.பாராட்டுக்கள்.

அகல்விளக்கு said...

கவிதை கனத்துப் போகச் செய்கிறது நண்பா...

ருத்ர வீணை® said...

ரொம்ப உருக்கம் நண்பா..

சிநேகிதன் அக்பர் said...

வேதனை நிரம்பிய வரிகள்.

நாடோடி said...

வ‌லி த‌ரும் க‌விதை...

Swengnr said...

வறுமை! அதிலும் இளமையில் வறுமை! கொடுமை! நன்றாக எழுதி உள்ளீர்கள் உண்மையை!

Madhavan said...

கவிதை அருமை... இதே கருத்தில் வேறொரு கோணத்தில் ஒரு சோகக் கவிதையே பாருங்களேன்...

http://neonlines.blogspot.com/2009/03/blog-post.html

தமிழ் மதுரம் said...

ஒரு வேலை சோற்றிற்கும்//

ஒரு வேளை.. என்று போட்டால் நன்றாக இருக்கும்.


அருகே இருந்தாலும், உணர்வின் வெளிப்பாடுகளை உன்னதமாய்க் கவியாக்கியுள்ளீர்கள்.
நிஜம் கலந்த தமிழர்களின் வாழ்வினை அற்புதமான சொல்லோவியங்களால் பதிந்துள்ளீர்கள்.

க ரா said...

((:

ஆ.ஞானசேகரன் said...

//நீ எங்கு
பிறந்திருந்தாலும்
தமிழனாய் போனதினால்
நீயும் என் சகோதரனே .!//

நல்ல வெளிப்பாடு... பாராட்டுகள் நண்பா

Riyas said...

//நீ எங்கு
பிறந்திருந்தாலும்
தமிழனாய் போனதினால்
நீயும் என் சகோதரனே //

நல்லாயிருக்கு

Riyas said...

//நீ எங்கு
பிறந்திருந்தாலும்
தமிழனாய் போனதினால்
நீயும் என் சகோதரனே //

நல்லாயிருக்கு

- இரவீ - said...

வேதனை நிரம்பிய வரிகள்...
நல்ல கவிதைக்கு பாராட்டுகள் நண்பரே...

//ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தபின் நமக்கெது வேண்டும்?//

Unknown said...

ஒற்றுமை கிலோ என்ன விலை? இதுதான் தமிழன் நிலை.

காதர் said...

மொழிக்காக சிந்தப்பட்ட
குருதிப் பெருக்கால்
நனைந்து நனைந்து
எம்மொழி
செம்மொழியானது !
ஆதிக்க வன்புணர்ச்சிக்கு
ஆளான தமிழ்த்தாயின்
காயங்கள் ஆறாது!
புகழ்மாலை சூட்டுவதால்
போர்க்குற்றம் மறையாது!
பிள்ளைக்கறி கேட்கும்
பெரும்பசிக்கு இரையான
தமிழ்ச்சாதி
இனி ஒருபோதும் உறங்காது!
ஜனநாயகத்தின்
விலகாத திரைச்சீலைகளில்
ஹிட்லரை மிஞ்சும்
இராஜபக்சப் படுகொலைகள்!
செம்மொழிச் செம்மலே!
சொந்தக் காலில் நிற்க முடியாத
காலத்திலும்
தன் வாரிசுகளின் பதவிக்கு
பந்தக்கால் நடுவதில் நாட்டம் கொள்ளும்
அதிகார வெறியுனக்கு!
தமிழர்களின் நிர்வாணத்தால்
தயாரிக்கப்பட்டது
உன் பதவிப் பொன்னாடை!
நான் என்று சொன்னால்
ஒட்டாதது
உதடுகள் மட்டுமல்ல!
துரோகிகளின் பட்டியலில்
வரலாற்றுப் பிழையான
உன்பெயரும் தான் !
வீழ்வது
நாமாக இருந்தோம்!
வாழ்வது
தமிழின் பெயரால்
பிழைப்பு நடத்தும்
ஈனர்களின் கூட்டம்!
ம‌லிந்த‌ அர‌சியல் ந‌ட‌த்தும்
உன் த‌வ‌றுக‌ளைக்
மன்னிக்கக் கூடும்..!
மன்னிக்க முடியாது..!
பிணங்களின் மீதேறி
நீ நடத்தும்
முடிவற்ற பெருநாடகம்!

-நன்றி
அமீர் அப்பாஸ்
( jibran.abb@gmail.com)

PUBLISH IN YOUR BLOG..REQUEST

ஹேமா said...

எங்கள் வேதனையை உணர்ந்து உணர்வோடு எழுதிய அத்தனை வரிகளுமே மனதில் பாரமாக இறங்குகிறது சங்கர்.

தமிழிஸ்,தமிழ்மண ஓட்டுப் போட இடமில்லையே.ஏன் ?

முனியாண்டி பெ. said...

வரிகள் என்னை மிகவும் பாதித்தது..

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

Suren2002 said...

கவிதை அருமை!!!

J.P Josephine Baba said...

மனதை உருக்கும் கவிதை!