அனைவருக்கும் வணக்கம் பொதுவாக எழுதுவது என்பது ஒரு கலைதான். நாம் அனைவரும் மிகவும் விரும்பி செய்யும் செயல்களில் ஒன்று அதிலும் பலருக்கு இடது கைகளால் எழுதுவது என்பது மிகவும் விருப்பமான செயல் என்று சொல்லலாம் .
இப்படி நம் ஒவ்வொருவருக்கும் எழுதுவதில் பல வேறுபாடுகள் இருக்கின்றன . நம்மில் சிலர் இடது கை கொண்டு எழுதுவோம் ,பலர் வலது கொண்டு எழுதுவோம் .இதில் இன்னும் சிலர் இரண்டு கைகள் கொண்டும் எழுதுவார்கள். ஆனால் இரண்டு கைகளினாலும் எழுதுவது என்பது எளிதில் இயலாத ஒன்று.
ஆம் நண்பர்களே இந்த இயலாத ஒன்றை மிகவும் சிறப்பாக செய்து அனைவரையும் ஒரு காலத்தில் வியக்க செய்த நாம் அனைவரும் அறிந்த ஒருவர் இருந்திருக்கிறார். யார் அந்த அவர் என்ற கேள்வி உங்களின் அனைவருக்கும் மனதிலும் எழும்பி இருக்கும் . சொல்கிறேன் .அவர்தான் மகாத்மா காந்தி ஆம் இவர் இரண்டு கைகளால் எழுதும் திறமை உள்ளவராம் . இதில் என்ன வியப்பு என்றால் நம்மில் பலரும் இரண்டு கைகளால் எழுதுவது உண்டு ஆனால் அதிகமாக போனால் நமது பெயர் அல்லது சில வரிகள்தான் எழுதுவோம் ஆனால் இவர் ஒரே நேரத்தில் தொடங்கி அறுபது பக்கம் கொண்ட ஒரு மிகப்பெரியக் கட்டுரையை ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் அளவிற்கு திறமை கொண்டிருந்தாராம் . அவர் எழுதியக் கட்டுரையை சரி பார்த்த பலர் எந்த மாற்றமும் இன்றி ஒரே கை கொண்டு எழுதிய கட்டுரைபோல் இரண்டும் இருப்பதுக் கண்டு வியந்து போனார்களாம் .
இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் அவர் இந்த திறமையை அங்கிலம் எழுதுவதில் காட்டவில்லையாம் . தமிழில் எழுதிதான் அனைவரையும் வியக்க வைத்தாராம் . இவருக்கு எப்படி தமிழ் தெரியும் என்று சந்தேகமும் பலருக்கு ஏற்ப்படலாம் சொல்கிறேன் இவர் முழுமையாக தமிழை தில்லையாடி கன்னியப்பச் செட்டியார் என்பவரிடம் கற்று இருக்கிறார் .
டிஸ்கி : ஒரு காலத்தில் இப்படியும் தலைவர்கள் எந்த துண்டுதலும் இன்றி விரும்பிப் படிக்கும் மொழியாக நம் தமிழ் இருந்திருக்கிறது . ஆனால் இன்றோ தமிழை வளர்ப்போம் என்று செம்மொழி மாநாடு அமைத்து தமிழின் பெருமைகளை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு இருகிறார்கள் இன்றைய தலைவர்கள் .
தினமணி நாளிதழில் -வெளியாகியுள்ளது நன்றி தினமணி
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
23 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 33 - இருகை எழுத்தாளர் !!! :
ஆனால் இன்றோ தமிழை வளர்ப்போம் என்று செம்மொழி மாநாடு அமைத்து தமிழின் பெருமைகளை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு இருகிறார்கள் இன்றைய தலைவர்கள் .
காலத்தின் கோலம்.
excellent info
நல்ல பகிர்வு..
நல்ல தகவல் சங்கர்.நன்றி பகிர்தலுக்கு
டிஸ்கி : ஒரு காலத்தில் இப்படியும் தலைவர்கள் எந்த துண்டுதலும் இன்றி விரும்பிப் படிக்கும் மொழியாக நம் தமிழ் இருந்திருக்கிறது . ஆனால் இன்றோ தமிழை வளர்ப்போம் என்று செம்மொழி மாநாடு அமைத்து தமிழின் பெருமைகளை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு இருகிறார்கள் இன்றைய தலைவர்கள்.
...... தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லி தன் பெருமையை அல்லவா வளர்க்கிறார்கள், இவர்கள்!
தெரியாத தகவல்... பகிர்விற்கு நன்றி..
rare information... kelvipattu irukom... unnai pol oruvan padathil idhai kamal solli... indru mulumayum padikkamudindhadhu...
புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி
தமிழ் தெரியும் என்பது தெரியும். ஆனால், இரு கைகளால், ஒரே சம்யத்தில்.. என்பது.. புதிய தகவல்.. நன்றி.
மஹாத்மா தமிழ் நாட்டிற்கு பிரசாரத்துக்கு வந்த போது முழுக்க முழுக்க தமிழில் பேசியதாக படித்ததில்லை.
எழுதுகிற அளவுக்கு காந்திக்கு தமிழ் தெரியுமா ? புதுத் தகவலாக இருக்கிறது.
நல்ல தகவல்.
:)
நல்ல பதிவு சங்கர்
ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான் எல்லாரும் அப்படி இல்லை ஒரு சிலருக்கு வேறுபடுகிரது
இப்போது
எல்லாம் அரசியல் ஆகிவிட்டது
தமிழ் இப்படி ஆகிவிட்டது
வருத்தம் தான் மிச்சம்..
நல்ல பகிர்வுக்கு நன்றி சங்கர்.
நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள்.
பகிர்வுக்கு நன்றி ந்ண்பா..
மகாத்மாவை பற்றி சுவாரஸ்யமான வியக்க வைக்கும் பயனுள்ள தகவல்கள் நண்பரே..! அப்புறம் டிஸ்கியில் அருமையா நச்சுனு நாலுவரியில சொல்லிட்டீங்க.. இன்னும் இதுகுறித்த விரிவான பதிவை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..! ஆவலுடன் பிரவின்குமார்.
can u plz share from where u got this info..?
want to check the authenticity.
வாழ்த்துக்கள் தலை! தொடர்ந்தும் எழுதுங்கோ.. நிறைய எழுதுங்கோ/ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதனைத் தானோ? செம்மொழு மாநாட்டைப் பற்றிச் சொன்னேன்
இதுவரை அறியாத செய்தி. அருமை!
அருமையான இடுகை.நல்ல பகிர்வு.
சரியான நேரத்தில் சரியான பதிவு.
காந்தி தமிழ் எழுதுவார் என்பது புதுத் தகவல் . தமிழ் தெரியும் என்பது தான் உண்மை. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
Post a Comment