இயற்கை அன்னை
என்று சொல்கிறோம் ஆனால்
துரியோதனர்களாய் மாறி தினமும்
அவளை துகில் உரிகிறோம்
அவளுகென்று ஒரு துணி நீ கொடுக்க வேண்டாம்
இருக்கும் துணியையாவது விட்டுவைக்க கூடாதா??
காடு மலைகளும் நதிகளும் கடல்களும்
ஓடும் மீன்களும் பாடும் பறவைகளும்
விலங்குகளும் தாவரங்களும்
நீலவானமும் கண்சிமிட்டும் மின்மினியும்,,,,,,
இவையெல்லாம் மட்டுமா இயற்கை ??
பிறப்பின் காரணம் தெரியாத வரையிலும்
இறப்பின் தருணம் அறியாத வரையிலும்
நீயும்தான் இயற்கையில் அடக்கம்!!!!!
நீஇயற்கையை அழித்து
இரசாயனத்தை பெருக்குவது உன்மீது நீயே
வைத்துக்கொள்ளும் வெடிகுண்டுக்கு சமன் .
புரிந்துகொள் மனமே நீ அழிந்துபோகுமுன் !.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
28 மறுமொழிகள் to புரிந்துகொள் மனமே நீ அழிந்துபோகுமுன் !!! :
இயற்கை மெல்ல அழிகிறது.. கடைசி அழிவு மனிதன் ..
இன்றைய சூழலுக்கான கவிதை
பாராட்டுக்கள்.
அருமையான சூழ்நிலைக் கவிதை..
அருமையான தலைப்பு ,கலக்கிட்டிங்க வாழ்த்துக்கள்.
படங்களும் கவிதையும் அருமை... சிந்திக்க வேண்டியவை....
//வைத்துக்கொள்ளும் வேடிகொண்டுக்கு சமன் //
இந்த வரியில் வரும் வார்த்தை "வெடிகுண்டு" தானே கொஞ்சம் சரி பார்க்கவும்.
யதார்த்தத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
நீங்களும் முகத்தில் அறைவது போல சொல்லிகொண்டுதான் இருக்கீங்க... மக்கள் உணரனுமே....
//புரிந்துகொள் மனமே நீ அழிந்துபோகுமுன் !.//
புரிஞ்சுக்கவே மாட்டாங்க :((((
//பிறப்பின் காரணம் தெரியாத வரையிலும்
இறப்பின் தருணம் அறியாத வரையிலும்
நீயும்தான் இயற்கையில் அடக்கம்!!!!!//
அருமை ..
தொடர்ந்து சுற்று சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் !
தவிர்க்க முடியாத சூழலில் இயற்கை அழிவுக்கு நாங்களும் காரணமாகத்தான் இருக்கிறோம்.
முடிந்தவரை குறைத்துக்கொள்வோம்.
நல்ல சிந்தனைக் கவிதைகளும் படங்களும் சங்கர்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - நாம் உண்டாக்கும் அழிவுகள் நமக்குத்தான்!! உணர்ந்து நடக்க வேண்டும்!!
படங்களும் கவிதையும் அருமை!!
அருமையான கவிதை சங்கர். தொடருங்கள்.
"புரிந்து கொள் மனிதா நீ அளைந்து போக முன்.."............உங்களை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை .
தினமும் இடித்து ரைக்க படங்களும் கவி வரிகளும் அருமை ஒரு சில திருத்தங்கள் தேவை. ( வெடி குண்டு
//நீஇயற்கையை அழித்து
இரசாயனத்தை பெருக்குவது உன்மீது நீயே
வைத்துக்கொள்ளும் வேடிகொண்டுக்கு சமன் .
புரிந்துகொள் மனமே நீ அழிந்துபோகுமுன் !.//
அருமை
நல்ல சிந்தனை பாராட்டுக்கள்
பனித்துளி சங்கர்
உன்னை நீயே அழித்துகொள்ளாதே நச்சு குட்டு
இவன்
செந்தில்குமார்.அ.வெ
//பிறப்பின் காரணம் தெரியாத வரையிலும்
இறப்பின் தருணம் அறியாத வரையிலும்
நீயும்தான் இயற்கையில் அடக்கம்!!!!!//
தன்னை இயற்கையும் பிரித்து பார்க்கும் வரை இது கொடுமைதான்...
அனைத்தும் அருமை ரசித்தேன்...
பிறப்பின் காரணம் தெரியாத வரையிலும்
இறப்பின் தருணம் அறியாத வரையிலும்
நீயும்தான் இயற்கையில் அடக்கம்!!!!!//
உண்மை தான் நண்பரே!! யதார்த்தமான வரிகள்
"நீயும்தான் இயற்கையில் அடக்கம்!!!!!"நல்ல வரிகள்..!
அற்புதம்! அனைவரும் உணர வேண்டிய விஷயம்...
அருமையான கவிதைகள்
-ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net
அது தான் சில சமயம் இயற்க்கை மனிதர்களே அழிக்கறது அதில் என்ன துக்கம் ஏன்னா துரியோதனன் கூட நல்ல மனிதர்களும் அடங்குவது தான் ...ரொம்ப அருமையான எழுத்து வாழுத்துக்கள்
உண்மைத்தாங்க....யாரை குறைசொல்வது... உலகம் அல்லவாபுரிந்தொகொள்ள வேண்டும்...உலக அளவில் விழிப்புணர்ச்சி வேண்டும்.
What you are doing for that
மனித ஒட்ட பந்தயம் அழிவை நோக்கி. . . . .
Go Green and try live with nature....good thought
Post a Comment