இருக்கும் போதும் கவிதை இறந்த பின்பும் கவிதை..!!!

நாங்கள் உம் நிலத்துக்கு ஆசைப்படவில்லை
நீயோ எம் நிலம் வேண்டுமென்றாய்...
முதுகெலும்பு இல்லாத புழு கூட
போராடித்தான் சாகுமாம்..!
நாங்கள் மட்டும் எப்படி தூக்கி கொடுப்போம்
என நினைத்தாய்....!!??
அத்தோடு விட்டாயா..!?

எம் மண்ணில் பிணம் விதைத்தாய்..!
எம் பெண்டிரின் கற்பை கருவறுத்தாய்..!
பிஞ்சு மழலைகள் என்று கூடப்பாராது
தூக்கிலிட்டாய்..! துண்டாக்கினாய்..!
இருப்பிடத்தில் குண்டு எறிந்தாய்..!
நெருப்புக் குண்டுகளின் பசி தீர்த்த
எச்சங்கலாய் எங்கள் உடல்கள்...!
ண்ண உணவின்றி,
உறங்க பாயின்றி,
எத்தனைபேர் மரநிழலில்
அட, மரத்தை கூட நீ விட்டு
வைக்கவில்லையே!
பட்டினியால் பலபேரும்.. நீ
கொட்டிய குண்டினாலே பல பேரும்
துடித்து இறந்து ஏன் உனக்கு
வலிக்கவில்லை?
மனித உடம்பெடுத்து வந்த
சாத்தானா நீ?
மாண்டவர் மீளார் என துயர்
ஆற்றலாம் ஆனால்
இழந்தவர் துயர் எப்படி போகும் ??
கூடிவாழ்ந்த சொந்தத்தை....
எறும்புபோல் சேர்த்த சொத்தை
இழந்த துயர் கூட நாளடைவில்
ஆறிவிடும்....ஆனால்
தன் அங்கம் இழந்தவர் துயரோ
ஆயுள்வரை அல்லவா?
'அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் என்பர்'
உண்மையா என தெரியாது
ஆனால் இவர்களின் கதறலும்
சாபமும் நிச்சயம்
உன்னை வந்துசூழும்
இது சத்தியம்..!!
* * * * * * * * * * * *
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * * * * * * * * *

26 மறுமொழிகள் to இருக்கும் போதும் கவிதை இறந்த பின்பும் கவிதை..!!! :

சௌந்தர் said...

முதுகெலும்பு இல்லாத புழு கூட
போராடித்தான் சாகுமாம்..!
நாங்கள் மட்டும் எப்படி தூக்கி கொடுப்போம்//

சூப்பர் நல்ல பதிவு

சுசி said...

//மாண்டவர் மீளார் என துயர்
ஆற்றலாம் ஆனால்
இழந்தவர் துயர் எப்படி போகும் ??//

வார்த்தைகள் வரவில்லை சங்கர்..

//இவர்களின் கதறலும்
சாபமும் நிச்சயம்
உன்னை வந்துசூழும்
இது சத்தியம்..!!//

இது பலிக்கும்.

Praveenkumar said...

கவிதை நெஞ்சை வருடும் வகையிலும், உண்மையான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மனிதத்துடன் எழியிருக்கீங்க..! பாராட்டுகள் நண்பரே..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வார்த்தைகள் வரவில்லை ...

விஜய் said...

மனசு வலிக்குது சங்கர் ...உண்மையான உணர்வு..நிச்சயம் தீர்வு காண முயல்வோம் சங்கர்...கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் ,இவை தான் சரித்தரத்தை மாற்றி எழுதும்.....

ஜீவேந்திரன் said...

மிக உணர்வு பூர்வமான சிறப்பான மனதை பிழியும் கவிதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் பதிவு

VELU.G said...

வலி மிகுந்த கவிதை அருமை

க ரா said...

வலி. பேயகள் அரசில் பிணந்தின்னிகள் அந்த ரானுவத்தினர்.

ரிஷபன் said...

மனம் கனக்கிறது

Valaakam said...

எறும்புபோல் சேர்த்த சொத்தை
இழந்த துயர் கூட நாளடைவில்
ஆறிவிடும்....ஆனால்
தன் அங்கம் இழந்தவர் துயரோ
ஆயுள்வரை அல்லவா?
------------------
முதுகெலும்பு இல்லாத புழு கூட
போராடித்தான் சாகுமாம்..!
நாங்கள் மட்டும் எப்படி தூக்கி கொடுப்போம்
என நினைத்தாய்....!!??
------------------
சுப்பர்... வைர வரிகள்... :)

Thenammai Lakshmanan said...

ரொம்ப வலிக்க வைத்த கவிதை... ஷங்கர்..

Menaga Sathia said...

உணர்வுபூர்வமான கவிதை சங்கர்!!

ஈரோடு கதிர் said...

வலியோடு

Jeyamaran said...

Very very nice and great

vasu balaji said...

தெய்வம் நின்று கொல்லும் என்பர்'
உண்மையா என தெரியாது
ஆனால் இவர்களின் கதறலும்
சாபமும் நிச்சயம்
உன்னை வந்துசூழும்
இது சத்தியம்..//

சூழ வேண்டும்:(

prince said...

மனதை பிழியும் கவிதை.:(

AkashSankar said...

நல்லது....நாலு பேரின் சாபமாவது...அவர்களை போய் சேரட்டும்...

Pepe444 said...

VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME :) >>> http://artmusicblog.blogspot.com/

அன்புடன் நான் said...

முதுகெலும்பு இல்லாத புழு கூட
போராடித்தான் சாகுமாம்..!
நாங்கள் மட்டும் எப்படி தூக்கி கொடுப்போம்//

உணர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் மலிக்கா said...

மனதை வலிக்கச்செய்த கவிதை..

கமலேஷ் said...

என்ன சொல்றதுன்னே தெரியலை தோழரே..

செந்தில்குமார் said...

கனக்கிரது
என் மனசு வார்த்தைகள் இன்றி....

Meerapriyan said...

nenju thudikkuthu intha neri kedda manitharkalai(maakkalai) ninaithu...-meerapriyan

SARAVANAN said...

sir your thirupathi article is very nice. letters background colour is very low so change the colour.
thank u sir.

SARAVANAN said...

sir your thirupathi article is very nice. letters background colour is very low so change the colour.
thank u sir.