தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal - கவிஞர் பனித்துளிசங்கர் Tamil Poems

உலகத்தில இரண்டே விஷயம் தான் 

தோன்றும் போதும் மறையும் போதும் அழகா இருக்கும் 

ஒன்னு சூரியன் மற்றது காதல் ...!!!!

                         - பனித்துளிசங்கர் .

எட்டு திக்கில் தேடினாலும் கிடைக்காது 
அம்மாவின் சேலை தந்த தொட்டில் சுகம் ! 

'
குழந்தை பருவம்'

            - பனித்துளிசங்கர் .

பூமிக்குகீழ் இடம்பிடிக்க
பூமிக்குமேல் நடக்கும் போராட்டமே
வாழ்க்கை.

           - பனித்துளிசங்கர் .

ஒரு முறை காயம் பட்ட இதயம்
மறுமுறை அன்பிற்கு எளிதில்
அடிமை ஆவது இல்லை...!!!!

                   - பனித்துளிசங்கர்.

இதயம் என்பது ஒரு வினோதமான 
சிறைதான் !
ஏனென்றால் ..
இதில் குற்றம் செய்பவர்கள் 
மாட்டிக் கொள்வதில்லை.
பாசம் வைப்பவர்கள் மட்டுமே 
மாட்டிக் கொள்கிறார்கள்,,, !

                   - பனித்துளிசங்கர்.

எத்தனை முறை தோல்விகளைத் தாங்கி வீட்டிற்குச் சென்றாலும், 

அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்றுச் சொல்லும்

அம்மா இருக்கும் வரையில்

நமக்கு தோல்விகள் இல்லை,!!!

                     - பனித்துளிசங்கர்.
தொட்டுப் பேச
அனுமதி மறுத்தாய்
கொஞ்சிப் பேச
கதவுகள் அடைத்தாய்
விலகும் போது
மட்டும்
வலிக்காமல் முத்தம்
கொடுத்தாய்...!!!

               - பனித்துளிசங்கர்.


தனிமை கொஞ்சம் வித்தியாசமானது

நாமே எடுத்துக்கொண்டால் அது இனிக்கும்

மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் 

மிகவும் வலிக்கும் !!!

                 - பனித்துளிசங்கர்.


உலகின்
மிக பாதுகாப்பான இடம்
உன் அருகாமை
என்பதை உணர்ந்தேன்
உன் "கைப்பிடித்த" நொடியில் ...!! 

              - பனித்துளிசங்கர்.


காதல் விசித்திரமானது.....
உன்னருகில் இருக்கையில்
எதை எதையோ ரசிக்கின்றேன்...
உன்னை பிரிந்து வாடுகையில்
உன் நிழற்படத்தை தவிர ரசிப்பதற்க்கு
ஒன்றுமில்லை எனக்கு...!!

                       - பனித்துளிசங்கர்.


உரிமை இல்லாத உறவும்
உண்மை இல்லாத அன்பும்
நேர்மை இல்லாத நட்பும்
நம்பிக்கை இல்லாத
வாழ்க்கையும்,என்றும்
நிரந்தரமில்லை....!!!

                  - பனித்துளிசங்கர்.


எது ஒன்று இன்பத்தை 
தருகிறதோ,அதுவே 
துன்பத்தையும் தருகிறது...!!

            - பனித்துளிசங்கர்.


காதல் உங்களை சோதிக்கிறது 
என்றால் கவலைப்படாதீர்கள்
ஏற்றுக்கொள்ளுங்கள்
சோதிக்க தகுதியானவரிடமே
உண்மைக்காதல் இருக்கும்...!!!

                - பனித்துளிசங்கர்.நூறுமுறை பிறக்கவைத்தாய்
உன் அன்பால்....!
கோடிமுறை இறக்கவைத்தாய்
உன் பிரிவால்....!!!""

                 - பனித்துளிசங்கர்.
எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்....!!!!!

             - பனித்துளிசங்கர்.

காதல் தோல்வி
காதலில் தோற்பவர்கள்
பிணமாகிறார்கள்
அல்லது
பிணமாக
வாழ்கிறார்கள்
நினைவுகள் மட்டும்
உயிரோடு !!

           - பனித்துளிசங்கர்.
யாருக்கு 
அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ
அவர்களால் தான் 
சீக்கிரம் வகளையும் பெறுகின்றோம் !.....
            
                  - பனித்துளிசங்கர்.
tamil kadhal kavithai
tamil natpu kavithai
tamil jokes
tamil kamakathaikal
tamil kavithai in english
tamil kavithai about friendship
tamil kavithai birthday
tamil love kavithai


0 மறுமொழிகள் to தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal - கவிஞர் பனித்துளிசங்கர் Tamil Poems :