குத்திக் காட்டியது - என் தமிழ் !!!


தாத்தாவின் மூக்குக் கண்ணாடிகை தவறி விழும் முன் சொன்னேன்'Sorry' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரைபோர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்'Thanks' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றேவாழ்த்து அட்டையில் எழுதினேன்'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்'Hai' என்று …!

இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் - காலில்குத்தியது முள் …'அம்மா' என்று அலறினேன் குத்தியது முள்ளில்லை -
என்னை குத்திக் காட்டியது - என் தமிழ்....!

2 மறுமொழிகள் to குத்திக் காட்டியது - என் தமிழ் !!! :

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

இது இயற்கை

தவிர்க்க இயலாது - தவிர்க்க முயலுவோம்

நல்வாழ்த்துக்ள் சங்கர்

Anonymous said...

வாழ்த்துக்கள் ஷங்கர்.நானும் இயன்ற வரையில் ஆங்கிலம் கலக்காமல் பேச நினைப்பேன்.சில சமயம் பேசும்பொழுது ஆங்கிலம் வருவதை தவிர்க்க முடியாமல் போய்விடும்.முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.