அமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் !!!

உலக வல்லரசாகிய அமெரிக்கா நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்.

1) USA 3வது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) 6 வித்தியாசமான மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தவராம்.

2) USA 2வது ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் (John Adams ) வெள்ளைமாளிகையில் முதன்முதலில் வசித்தவர் ஆவார்.

3)USA 4வது ஜனாதிபதி ஜேம்ஸ் மடிசன் ( James Madison ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் குறைந்தவராம்.(5'4")

4) USA 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் கூடியவராம்.

5) USA 39வது ஜனாதிபதி ஜிம்மி காட்டர் (Jimmy Carter) வைத்தியசாலையில் பிறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.

6) USA 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்( Ronald Reagan ) கூடிய வயதில் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியாம்.( 69 -77 வயது வரை பதவி வகிப்பு )

7) USA 7வது ஜனாதிபதி அன்ரூ ஜக்சன் (Andrew Jackson) புகையிரத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.

0 மறுமொழிகள் to அமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் !!! :