நட்பு என்ற வார்த்தையின் ஈர நினைவகளொடு சில கிறுக்கல்கள் !!
.
'வெளி' உலகின்

அவசர நெருக்கடிகளிலும்

உன்னின் அவசர சந்திப்பு ,

பார்வைகள் கூட அளந்துதான்

பேசியதாக ஏதோ
என் மனத்திர்க்குள் ஒரு ஏக்கம் !
இப்பொழுதுக்கூட அதை
எனக்கு சரியாக
குறிப்பிடத் தெரியவில்லை !.
அன்று நாம் சிறைவைத்து
சிரித்த அந்த தருணங்கள்
எல்லாமே வெகுசாதாரனம் !.
நினைவில் கூட இல்லை..!
சந்திக்காத பொழுதில்கூட
உன்னை சிந்தித்ததாய் சொல்வதிற்க்கில்லை !.
ஆனாலும் .ஏதோ சில
கண்டிப்பற்ற காரணங்களால் .
நமது அந்த நிலையற்ற
நீர்க்குமிழி சந்திப்புகள் நிகழ்ந்தது ..!
எப்பொழுதும் நாம் இயல்பாய்
பேசவில்லை இருப்பினும்
அனுமதி பெறாமலே அருந்து விழுந்து
முகவரிகளை அறிமுகப்படுத்தி கொண்டன
நமது வார்த்தைகள் ஏனோ !
நமது வாழ்க்கையில் மாதங்களும் ,
வருடங்களும் கனவுகளாகி போனாலும்
எதிர் பார்த்த சந்திப்புகளும் ,
எதிர்பாரா சந்திப்புகளும்
பசியுடன் இருந்ததில்லை இதுவரை !
இவையெல்லாம் ஒருவேளை
எந்தன் பொய்யான வார்த்தைகள் என்று
நீ சொல்ல நேர்ந்தாலும்,
உனது ஓராப் பார்வைகளாலும் ,
என் முன்
உதிர்த்த ஒரு சில வார்த்தைகளாலும் ,
காயம் கண்டதில்லை என் மனம் !.
இதைவிட என்ன வேண்டும்
நமது நட்பை ஈர நினைவகளொடு
மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்த
????

0 மறுமொழிகள் to நட்பு என்ற வார்த்தையின் ஈர நினைவகளொடு சில கிறுக்கல்கள் !! :