இன்று ஒரு தகவல் : உலக அழகிப்போட்டி தோன்றிய வரலாறு : Miss world event histry 1951+பனித்துளி சங்கர்


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு புதுமையான இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. இதுவரை நாம் எழுதுத்துக்களின் உதவிகொண்டு பல அரியத் தகவல்களை இயன்றவரை ஒவ்வொரு ”இன்று ஒரு தகவல்” என்ற பகுதியிலும் அறிந்து வருகிறோம். ஆனால் இன்றைய தகவல் வழமை போல் இல்லாமல் புதுமையான முயற்சியாக புகைப்படங்களின் தொகுப்புகளால் அறிந்துகொள்ளப் போகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தகவல் அனைவருக்கும் ஒரு ஆவலை ஏற்படுத்தக் கூடிய உலக அழகிகள் பற்றியதுதான் என்று சொல்லலாம்.
 ம்மில் எத்தனை பேருக்கு இந்த உலக அழகிப் போட்டி தோன்றிய வரலாறு தெரியும் என்று தெரியவில்லை சரி இன்றைய தகவலில் இந்த உலக அழகிகள் பற்றி ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் இந்தத் தகவலை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். முதன் முதலில் மிஸ் வோர்ல்டு (Miss World event) எனப்படும் உலக அழகிப் போட்டி லண்டனில் எரிக் மோர்லீ (Eric Morley ) என்பவரால் 1951-ம் ஆண்டு ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டதுதான் இந்த உலக அழகிப் போட்டி என்றால் நம்புவீர்களா !? ஆம் நண்பர்களே..!! தான் வசித்தப் பகுதியில் இருக்கும் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களை மட்டுமே வைத்து முதன் முதலில் சில பரிசுகளை தந்து ஒரு பொழுதுப் போக்கிற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார் மோர்லீ என்பவர்.

 காலப் போக்கில் இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்த ஊடகங்கள் அனைத்தும் சற்று இதை ஒரு புனைப்புடன் உலகம் முழுவதும் பரவ செய்தனர். உலகம் முழுவதும் பலரால் இந்த நிகழ்ச்சி வெகுவாக ஆர்வத்தை ஏற்படுத்தியது அந்த காலக் கட்டத்தில் இந்த நிகழ்ச்சியை மோர்லீ (Eric Morley ) தான் விருப்பப்படும் நேரத்தில் எப்பொழுதாவது மட்டுமே நடத்தி வந்தார்.
 டகங்களின் விளம்பரத்தால் மிகக் குறுகிய காலத்தில் அனைவரையும் அதிகமாகக் கவர்ந்த போட்டிகளில் இதுவும் ஒன்றாகிப்போனது.அதன் பின்புதான் எப்பொழுதாவது நடத்தப்பட்ட இந்த உலக அழகிப் போட்டி வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் என்று மோர்லீ அறிவித்தார். அதன் பின்பும் ஒரு சாதாரணப் போட்டியாக நடத்தப்பட்டு வந்த இந்த அழகிப்போட்டி 1959ம் ஆண்டு பி பி சி (BBC) தனது விளம்பரங்களின் மூலமாக உலகம் முழுவது இந்த பிரபஞ்ச அழகிபோட்டியைப் பற்றி அறிய செய்தது. அதன் பின்புதான் 1960 மற்றும் 1970 ஆண்டுகளில் இந்த உலக அழகிபோட்டி (Miss World Competition) சுமார் 60 மில்லியன் ரசிகர்களுடன் உலகத்தின் டாப் ரேங் போட்டிகளில் ஒன்றாக அனைவராலும் அறியப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
துமட்டுமல்ல 1980ம் ஆண்டுவரை அழகையும் உடல் தரத்தையும் மட்டுமே முதன்மையாக வைத்து நடத்தப்பட்ட இந்த உலக அழகிப் போட்டி முதன் முறையாக 1981ம் ஆண்டுதான் பொது அறிவு, விளையாட்டுத் திறமை என பல புதுமையான தகுதிகளை இந்தப் போட்டிக்குள் புகுத்தியது உலக அழகிப்போட்டி குழு. இதில் இந்தியர்களாகிய நாம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால் இதுவரை நடத்தப்பட்ட மொத்த உலகப் அழகிப் போட்டிகளில் ஐந்து முறை உலக அழகி பட்டம் வென்ற முதல் மூன்று நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா என்பதுதான்.
துமட்டுமின்றி இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த அழகிகளிலும் சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணும் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று இந்த உலக அழகிகளை தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்தியாவின் சார்பில் ஐஸ்வர்யா ராயும் ஒரு நபராக இருக்கிறார் என்பதும் இந்தியாவிற்கு உலக அழகிப் போட்டிகளில் கிடைத்த சிறப்புகளில் ஒன்று என்று சொல்லலாம். இவ்வளவு அழகிகளை இந்த பிரபஞ்சம் அறிய செய்து உலக அழகிப் போட்டியை தலைவராக இருந்து சிறப்பித்து வந்த மோர்லீ கடந்த இரண்டாயிரத்தில் இறந்துவிட்டார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. அவரின் மறைவிற்குப் பிறகு அவரின் தலைவர் பொறுப்பை அவரது மனைவி ஏற்று இதுவரை சிறப்பாக இந்த உலக அழகிப்போட்டியினை நடத்தி வருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக நம் எல்லோருக்கும் உலக அழகிகள் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால் நம்மில் பலருக்கு இதுவரை கடந்த இருபது வருடங்களில் ஒவ்வொரு வருடத்தின் போட்டியிலும் வெற்றி பெற்று உலக அழகியாக மகுடம் சூடிக்கொண்ட அழகிகள் யார் யார் ? என்றுக் கேட்டால் பலருக்கு விடைகள் தெரிவது அரிதுதான். இன்னும் நம்மில் பலருக்கு உலக அழகி என்று சொன்னாலே ஐஸ்வர்யா ராய் (Aishwarya rai )என்பது மட்டும்தான் தெரிகிறது. அந்த அளவிற்கு உலகத்தின் தலை சிறந்த அழகிகளில் இவரும் ஒருவர். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்ற போதிலும் இதுவரை பலர் அறியாத கடந்த இருபது வருடங்களில் உலக அழகிகளாக இந்த பிரபஞ்சத்தில் வலம் வந்தவர்களைப் பற்றி ஒவ்வொரு ஆண்டுகளின் வரிசையில் புகைப்படங்களுடன் அறிந்துகொள்ளப் போகிறோம். சரி நண்பர்களே..! வாருங்கள்.! தகவலுடன் அழகிகளின் புகைப்படங்களையும் பார்த்துவிடலாம்..!!


The Miss World is a famous international beauty pageant. Let's take a look at the last 20 winners of this contest. Each beauty-winner spent a year traveling around the world and representing the Miss World Organization. All girls are gorgeous and unique!


                                    
                                 Kaiane Aldorino -- Miss World for 2009, Gibraltar

                                      


               Ksenia Sukhinova -- Miss World for 2008, RussiaZhang Zilin -- Miss World for 2007, ChinaTaťána Kuchařová -- Miss World for 2006, Czech RepublicUnnur Birna Vilhjálmsdóttir -- Miss World for 2005, IcelandMaría Julia Mantilla -- Miss World for 2004, PeruRosanna Diane Davison -- Miss World for 2003, Ireland
 Azra Akin -- Miss World for 2002, Turkey
Agbani Darego -- Miss World for 2001, NigeriaPriyanka Chopra -- Miss World for 2000, India
Yukta Mookhey -- Miss World for 1999, India Linor Abargil -- Miss World for 1998, Israel Diana Hayden -- Miss World for 1997, IndiaIrene Skliva -- Miss World for 1996, GreeceJacqueline Aguilera -- Miss World for 1995, VenezuelaAishwarya Rai -- Miss World for 1994, India

Lisa Hanna -- Miss World for 1993, Jamaica
Julia Alexandrovna Kourotchkina -- Miss World for 1992, Russia
Ninibeth Leal Jiménez -- Miss World for 1991, VenezuelaGina Marie Tolleson -- Miss World for 1990, United States


ன்ன நண்பர்களே இன்றையப் புகைப்படத் தொகுப்புகளின் தகவலும் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் ஒரு புதுமையானத் தகவலுடன் விரைவில் சந்திக்கிறேன் .


        - பனித்துளி சங்கர்
20 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் : உலக அழகிப்போட்டி தோன்றிய வரலாறு : Miss world event histry 1951+பனித்துளி சங்கர் :

சி.பி.செந்தில்குமார் said...

முதல் ரசிகன்

சி.பி.செந்தில்குமார் said...

அழகிப்போட்டி தோன்றொய வரலாறு ஓக்கேஎ.. அழகிகள் தோன்றிய, வளர்ந்த வரலாறும் போடுங்க.. ஹா ஹா

சக்தி கல்வி மையம் said...

பல தெரியாத தகவல்களைத் தெரிந்துக்கொண்டேன்..

பாலா said...

பல அரிய தகவல்களைத்தந்து அசத்தி விட்டீர்கள். ஆனால் தற்போது உலக அழகி போட்டிகள் காஸ்மெடிக்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களுக்காகவே நடத்தப்படுகின்றன என்பதே உண்மை.

Anonymous said...

சுவராசியமான தகவல்.

கடம்பவன குயில் said...

ஒரு அழகி போட்டிக்குள் இத்தனை விஷயங்கள் உள்ளதா? நல்ல சுவாரஸ்யமான தகவல்.

நிரூபன் said...

1960 மற்றும் 1970 ஆண்டுகளில் இந்த உலக அழகிபோட்டி (Miss World Competition) சுமார் 60 மில்லியன் ரசிகர்களுடன் உலகத்தின் டாப் ரேங் போட்டிகளில் ஒன்றாக அனைவராலும் அறியப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.//

அடடா.. அந்தக் காலத்திலே இருந்து ஆரம்பமாகிடுச்சா...

இன்று ஒரு தகவல்- கலக்கல் பெண்களின் போட்டோக்களுடன், புதுமையாக இருக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உலக அழகிகள் போலவே இந்த உங்கள் பதிவும் நல்ல அழகோ அழகு தான்.

MANO நாஞ்சில் மனோ said...

புது தகவல் அந்நியன் சார்......

ADMIN said...

தொகுத்தளித்த விதம் மிகவும் அருமை.. பகிர்ந்தமைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.!!

நன்றி பனித்துளி சங்கர் அவர்களே..!

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்.

ம.தி.சுதா said...

ஆரம்ப வரலாறை இன்று தான் அறிந்தேன் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

உணவு உலகம் said...

பல அரிய தகவல்கள் அறிய வைத்தமைக்கு நன்றி.

செந்தில்குமார் said...

அருமையான தகவல் சங்கர்....

வரலாறு....

சுவடுகள் உங்கள் வரிகளில் ....ம்ம்ம்

Mahan.Thamesh said...

உலக போட்டி தகவலும் பார்க்காத அழகிகளும் சிறப்பு
பார்த்து ரசித்து தகவலும் அறிந்தேன்
நன்றி

ஆ.ஞானசேகரன் said...

அருமையான தொகுப்பு
மிக்க நன்றிங்க நண்பா....

Unknown said...

அருமையான தகவல்களுக்கு நன்றி!

அண்ணே தானைத்தலைவியோட அழகான போட்டோ எதுவும் கெடைக்கலியான்னே...ஹூம் அழுவாச்சியா வருது....அந்த போட்டோல கிழ ஆச்சியா இருக்காங்க அதான்!

இராஜராஜேஸ்வரி said...

அழகு சொட்டும் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

padamellaam sUppar

Anonymous said...

உலக அழகிகள் பற்றிய விபரம் அருமை