இரவின் திரை எங்கும்
கருப்பு பிம்பங்களின் கால் தடங்கள்
தேகம் மட்டுமே நிலையாய் இருக்கிறது...
ஞாபகங்கள் எல்லாம் எங்கோ சிதறிக்கிடக்கிறது..!
![]() |
கபனித்துளி சங்கர் கவிதைகள் |
கன்னத்தில் கை வைத்து .
உந்தன் ஞாபகங்களின்
விரல் பிடித்த
அந்த பொடி நடை
இந்த உலகம் மறக்க செய்தது .
எப்போதேனும் எட்டிப் பார்க்கும்
எதார்த்த உரையாடல்களில் எல்லாம்
அனுமதியின்றியே ஒட்டிக்கொள்கிறது
உன்னைப் பற்றிய ஞாபகங்கள் .
இதழ்கள் சிரிப்பது
மட்டும்தான் சந்தோசமா
முதல் முறை
மொத்த தேகமும் உந்தன்
ஒற்றைப் பார்வையில்
வெட்கம் கண்டதை
எப்படி சொல்வேன் !?
பல இரவுகள் உறங்கிப் போகாத
எனது இமைகளிடம் கேட்டுப்பார்
கனவிலும் உனது வருகைக்காக
காத்திருந்து ஏமாந்ததை
சொல்லி அழும் !
உனது முகம் பார்க்க காத்திருந்து
விரல் நகம் கடித்தேவா
கழிந்து போவது பொழுதுகள் !?
உருவம் இல்லாத
உணர்வுகளின் தேடலாய்
விழி போகும் தூரம் எங்கும் நீள்கிறது
உன்னைப் பற்றியக் கற்பனைகள் ..
கண்கள் பரிமாறி, காதல் அரங்கேற்றி
இதயம் தொலைத்ததில் என்னுள்
சுமக்க முடியாத சுமையாகிபோனது
இந்த மவுனம் தாங்கிய
தனிமை மட்டுமே...!!
Tweet |
27 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் கவிதைகள் : காதல் பிம்பங்கள் (02+05+2011) :
முதல் மழை எனை நனைத்ததே
எனையும் நனைத்ததே
அருமை பாஸ்!
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
கனவிலும் உன் வருகைக்காக காத்திருந்து ஏமாந்ததை சொல்லி அழுகும்... /// நண்பரே என்ன ஒரு வார்த்தை பிரயோகம்... படிக்கும்போதே ஒரு வலியை உணர்கிறேன்..
அசத்தலான கவிதை..
உண்மையில் தனிமை கொள்ளக்கூடியதுதான்....
அழுத்தமான வரிகள்..
அழகான சிந்தனை...
வாழ்த்துக்கள்..
உங்களுக்காக...
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....
http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html
வாழ்த்துகள்.
மனம் கவரும் கவிதை.
nalla kavithai
//////சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை எனை நனைத்ததே//////////
வாங்க சி.பி.செந்தில்குமார் கவிதை வாசித்துவிட்டுத்தான் கருத்து சொல்லி இருக்கிறீர்களா !??? சும்மா ஒரு சந்தேகம்தான் .வருகைக்கு நன்றி
/////கல்பனா said...
எனையும் நனைத்ததே/////
வாங்க கல்பனா கவிதைக்கு மறுமொழியா !? இல்லை மறுமொழிக்கு மறுமொழியா !? ஒன்றுமே புரியவில்லை . என்ன எழுதி இருக்கிறார்கள் என்று வாசிக்காமல் மறுமொழி இடும்போழுது சில நேரம் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது அதுதான் கேட்டேன் . புரிதலுக்கு நன்றி
வாங்க ஜீ வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
////வை.கோபாலகிருஷ்ணன் said...
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
///////
வாங்க கோபாலக்கிருஷ்ணன் தங்களின் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி !
//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கனவிலும் உன் வருகைக்காக காத்திருந்து ஏமாந்ததை சொல்லி அழுகும்... /// நண்பரே என்ன ஒரு வார்த்தை பிரயோகம்... படிக்கும்போதே ஒரு வலியை உணர்கிறேன்../////////
கவிதையை முழுவதும் வாசித்து மறுமொழி தந்தமைக்கு நன்றி நண்பரே !
//////பாட்டு ரசிகன் said...
அசத்தலான கவிதை..
உண்மையில் தனிமை கொள்ளக்கூடியதுதான்....
அழுத்தமான வரிகள்..
அழகான சிந்தனை...
வாழ்த்துக்கள்..///////////
வாங்க ரசிகன் தங்களின் கருத்திற்கு நன்றி !
////இராஜராஜேஸ்வரி said...
வாழ்த்துகள்.//////
வாழ்த்திற்கு நன்றி நிலவே !
////shanmugavel said...
மனம் கவரும் கவிதை./////
தங்களின் கருத்தும் எனது மனம் கவர்ந்தது நன்றி தோழா !
////Jaleela Kamal said...
nalla kavithai/////
நன்றி Jaleela நல்லவேளை மாற்றி சொல்லாமல் போனீர்களே கேட்டக் கவிதையென்று அதுவரை சந்தோசம் !
கவிதையின் கடைசி பந்தியினை மிக ரசித்துப்படித்தேன்
”கண்கள் பரிமாறி காதல் அரங்கேற்றி
இதயம் தொலைத்ததில் என்னுள்
சுமக்க முடியாத சுமையாகிபோனது
இந்த மவுனம் தாங்கிய
தனிமை மட்டுமே.”
அருமை...
ungalin ouwvaru varigalum thanimaiyel thalattum thaiyai ponravai
it,s Very powerful thank you.
manathai menmaiyakkum alagana karpanai varikal,thanks.
”முதல்முறை மொத்த
தேகமும் உந்தன் ஒற்றைப்
பார்வையில் வெட்கம் கண்டதை
எப்படிச் சொல்வேன்”
முதல்முறை என்ற வரிகளிலேயே பாதித்த முதல் ஜீவன் என்ற மறைமுக உணர்வினை மிகமிக ரசித்தேன்.
பதிவுலக வரலற்றிலேயே முதல் முறையாக காதல் கவிதைக்கு கூட மைன்ஸ் ஓட்டா?(
வாழ்த்துக்கள்
http://sivasinnapodi1955.blogspot.com
//இதழ்கள் சிரிப்பது
மட்டும்தான் சந்தோசமா
முதல் முறை
மொத்த தேகமும் உந்தன்
ஒற்றைப் பார்வையில்
வெட்கம் கண்டதை
எப்படி சொல்வேன் !?//
கவிதைகளை தேடி வாசித்தல்
என் நித்த வழக்கத்தில் ஓன்று
தேன் சிந்தும் காதல் கவிதை வாசிக்க
தபு சங்கர் புத்தங்களை புரட்டுவேன்
வலைகளில் காதல் கவிதைகளை தேடி செல்வது
பனித்துளி சங்கரிடம்
இரண்டு ஷங்கர்கள் எழுதும் வரிகளில்
காதல் ஏனோ நிரம்பி வழிகிறது
கவிதை அருமை,சகோ உங்கள் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிறது.
Post a Comment