இதயம் களவு போனதால்
இந்த உலகம் மறந்துபோனது.
ஒற்றைப் பார்வையில்
பற்றி எரிகிறது தேகம்..!
ஒற்றை நிலவு
ஓராயிரம் விண்மீன்கள்
எல்லாம் கொட்டிக் கிடக்கிறது
நினைவுகள் எங்கும்..!
விரல் தொட்ட
ஒற்றை வண்ணத்துப் பூச்சி
உன்னால் உலகமாகிப்போனது..!
ஒரு குவளையில்
ஊற்றி வைத்த மகிழ்ச்சியாய்
இதயமெங்கும் நிரம்பி வழிகிறது
ஒரு வெட்கம்..!
இத்தனை நாட்களாய்
என்னுடன் உறங்கிய தலையணை
இப்பொழுதெல்லாம்
உன் தேகமாய்....!
ஏதேதோ பேசிக்கொண்டு
கண்ணாடி முன் நின்று சரி செய்யும்
ஆடை எல்லாம்
வெட்கப் படுகிறது ...!
தெருவில் கடந்து செல்லும்
உடல்களில் எல்லாம்
உனது பிம்பங்கள்..
உற்றுப்பார்த்து
ரசிக்க நினைக்கையில்
களைந்து போகிறது
காட்சி பிழைகள்...!
காதலிப்பதாக சொல்லி இருப்பேன்
ஒருவேளை உன்னைக் கண்ட
அந்தக் கனவு இன்னும்
சிறிது நேரம் நீண்டிருந்தால்...!
- ❤ பனித்துளி சங்கர் ❤
Tweet |
19 மறுமொழிகள் to காதல் கனவுகள் : பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் -Tamil Love Poem 11 May 2011 :
ARUMAI ARUMAI
விரல் தொட்ட வண்ணத்துப் பூச்சி வர்ணனை கலக்கல்.
இதயம் களவு போனதால்
இந்த உலகம் மறந்துபோனது.
ஒற்றைப் பார்வையில்
பற்றி எரிகிறது தேகம்..!//
காதலில் பார்வைகளுக்கு உள்ள பவரினை அழகாக வர்ணித்துள்ளீர்கள்.
விரல் தொட்ட
ஒற்றை வண்ணத்துப் பூச்சி
உன்னால் உலகமாகிப்போனது..!/
அவளின் விரல் தீண்டலின் உயிர்ப்பினை இவ் வரிகள் விளக்குகின்றன.
இத்தனை நாட்களாய்
என்னுடன் உறங்கிய தலையணை
இப்பொழுதெல்லாம்
உன் தேகமாய்....!//
அவ்.............முடியலை பாஸ்...
நீங்க கற்பனையின் உச்சிக்கே சென்று விட்டீர்கள்.
தெருவில் கடந்து செல்லும்
உடல்களில் எல்லாம்
உனது பிம்பங்கள்..
உற்றுப்பார்த்து
ரசிக்க நினைக்கையில்
களைந்து போகிறது
காட்சி பிழைகள்...! //
காதல் போதை ஏறினால் காண்பவை எல்லாம் அவள் என்று தோன்றுமே....
அதனை எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
சூப்பர் வர்ணனை செல்லம், அருமை...
காதல் கரை புரள்கிறது ...
மிகவும் ரசித்தேன் ...
Very nice boss!
இத்தனை நாட்களாய்
என்னுடன் உறங்கிய தலையணை
இப்பொழுதெல்லாம்
உன் தேகமாய்...... சூப்பராப்பு
nice
//விரல் தொட்ட
ஒற்றை வண்ணத்துப் பூச்சி
உன்னால் உலகமாகிப்போனது..!//
ஸ்பரிசங்கள் சுகமானது.
//இத்தனை நாட்களாய்
என்னுடன் உறங்கிய தலையணை
இப்பொழுதெல்லாம்
உன் தேகமாய்....//
ரசித்தேன்,கவிஞரே!
நல்லதொரு கனவு. அதில் ஒரு காதல் கவிதை. அச்சச்சோ! காதலை வெளிப்படுத்தும் முன்பே கனவு கலைந்து போனது தான் வருத்தமாக உள்ளது.
பாராட்டுக்கள்.
காதல் உணர்வுகள் வரிகளில் ஜெலிக்கின்றன அருமை.. பாராட்டுக்கள் சகோதரா
மனசை தொடும் கவிதைகள்
காதலை எப்பவுமே முதலில் சொல்லிடுங்க .நிறைய இழப்புக்களை தவிர்க்கலாம் ......
அருமையான கவிதை... //அந்த கனவு சிறிது நேரம் நீண்டிருந்தால்// சூப்பர்..
Superb
Post a Comment