ஒரு பெண் ஒரு கவிஞரை மணக்கிறாள் .திருமணம் முடிந்த முதல் நாள் இரவு முதல் இரவிற்கு இருவரும் ஒரு அறைக்குள் சிறை வைக்கப்பட்டனர். அப்பொழுது தன் கணவனான கவிஞனிடம் கேட்கிறாள்.இத்தனை கவிதைகள் எழுதுகிறீர்களே..! எனக்காக இப்பொழுது ஒரு கவிதை எழுதினால்தான் நமக்கு முதல் இரவு என்கிறாள் அதற்கு கணவன் எனும் கவிஞன் சொல்கிறான் .
யாருமற்ற அந்த தனிமையில்
நான்கு சுவர்கள் மட்டும் பார்வையாளர்களாய்..
நீ என் அருகில் இருக்கும் பொழுதும்
உன் சுவாசம் என்னை தீண்டும் பொழுதும்
வெளிச்சம் இறந்துபோனப் பொழுதும்
இந்த இரவு உறங்கிபோனப் பொழுதும்
தேகங்கள் இரண்டும் ஆடைகளுக்கு விடுப்பு தந்த பொழுதும்
அந்த நிசப்தத்தை உனது கொலுசொலி கலைக்கும் பொழுதும்
உன் கூந்தல் எறிய பூக்கள் என் விரல்களால் காயப்படும் பொழுதும்
உனது விரல் நகங்கள் எனது தோள்களில் பதியும் பொழுதும்
ஒரு வேளை எழுதிப்போகலாம்
வார்த்தைகள் இல்லாத சில சத்தங்களை
கவிதையென உனக்காக நான்..........!
Tweet |
18 மறுமொழிகள் to முதல் கவிதை இரவு :Muthal kavithai iravu -பனித்துளி சங்கர் முதல் இரவுக் கவிதைகள் 20 May 2011 :
தல கவிதை நல்லா இருக்கு.
கவிதை கவிதை ... கலக்கல் கலக்கல் ...
மாப்ள கவிதை கலக்கலுய்யா!
Mm, very nice poem.
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!
அசத்தல் கவிதை..
ம்...அருமை !
யாருமற்ற அந்தத்தனிமையில்,
அனைத்து இன்பங்களும்
உங்கள் கவிதையில்
அழகாகவே சொல்லாமல்
சொல்லப்பட்டுள்ளன,
வார்த்தைகள் இல்லாத
சில சத்தங்கள் போலவே!
பாராட்டுக்கள்.
அழகு.
கவிதை தோழர் சங்கர் மிக அழகான கவிதை ! வார்த்தைகள் இல்லாத சத்தங்கள் கூட கவிதையாய்! அழகான வார்த்தை ! நன்றி !
வார்த்தைகள் இல்லாத சப்தங்கள் கவிதையாக.... நிறைவான கவிதை.
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு கும்மியாச்சு...
அசத்தல் கவிதை. அழகு மிளிர்கிறது.
கவிதையென உனக்காக நான்....
பல அர்த்தங்களை மனதிற்குள் தூவிச்சென்றது....
மிக அருமையாக உணர்தேன்... :)
தமிழ் கவிதைகள் என்றைக்குமே படிக்க இனிக்கும்..இன்றும் அப்படியே
http://zenguna.blogspot.com
அருமை !
super kavithai...
super kavithai...
Post a Comment