யார் விதைத்தது தெரியவில்லை ஆனால்
திரும்பும் திசை எங்கும்
பூத்துக் கிடக்கிறது இந்தக் காதல் !.
பசி எடுத்தும்
உன்னப்படாத உணவு
தாகம் எடுத்தும்
குடித்து முடிக்காத தண்ணீர்
பார்பவர்களின் கண்களுக்கு
பைத்தியம் என்று கூட எண்ணத் தோன்றும் .
![]() |
கவிஞர் பனித்துளி சங்கர் கவிதைகள் |
இது மட்டுமா ஆடை உடுத்துகையில்
பொத்தான் இல்லாத இடத்தில் எல்லாம்
என்னதான் செய்கிறதோ விரல்கள் .
அவளை எண்ணிக்கொண்டே
பின் தொடர்ந்த நினைவுகள் திரும்புகையில்தான்
அறியப்படுகிறது எனக்காக
நான் இல்லாத நிஜங்கள் !.
ஆள் கடல் தொலைத்த இதயமாய்
திரும்பும் திசை எங்கும்
அலைமோதுகிறது ஒரு எதிர்பார்ப்பு .
எத்தனை முறைதான் என்னில்
பறித்து செல்வாய் இன்றாவது
சரியாக கொடுத்துவிடு
சொல்லாமல் சொல்கிறது அவளுக்காய்
மீண்டும் பறித்த ரோஜா ஒன்று !
அவளைப் பற்றி எண்ணிக்கொண்டே
பின்னிரவில் உறங்கி
முன்னிரவில் எழுத்து
தினம் அவளுக்கான முற்றுசந்தின்
காத்திருப்பில் உணரும் மகிழ்ச்சியை
சொல்லி தீர்க்க இந்த கவிதை போதாது
இன்னும் சில யுகங்கள் வேண்டும் !!..
❤ பனித்துளி சங்கர் ❤
Tweet |
35 மறுமொழிகள் to காதல் யுகம் - Kadhal Yugam Kavithai -பனித்துளிசங்கர் காதல் கவிதைகள் 17 May 2011 :
பின்னரவில் உறங்கி
முன்னிரவில் எழுந்து
அவளுக்கான காத்திருப்புகளை அழகாய் சொல்லி இருக்கிறேர்கள்...வாழ்த்துக்கள்....
காதல் எதை தருகிறதோ இல்லையோ, நல்ல கவிதைகளை தருகிறது. வாழ்த்துகள் சங்கர்.
காதல் மட்டும் இல்லையென்றால் இந்த பூமியும் நீர்த்துப்போயிருக்கும்...
ஆழமான கவிதை..
வாழ்த்துக்கள்..
பின்னிரவில் உறங்கி
முன்னிரவில் எழுந்து
இன்னும் சில யுகங்கள் கழிய..
அருமையான வரிகள். வாழ்த்துகள்.
எப்பவும் போல பதிவு டாப்பு தான்.
வழக்கம் போல அசத்தல் கவிதை..
காதல் வந்தால் என்னென்னவெல்லாம் எம்முள் நடக்கும் என்பதை அழகாக வடித்துள்ளீர்கள்...
காதல் வர்றதும் கஞ்சா அடிகறதும் ஒன்னு தான் போல என்ன என்னமோலாம் தோணுது .. ஹ ஹ ஹ சும்மா...
கவிதை அருமை ரொம்ப நல்லா இருக்குங்க ...
எத்தனை முறை படித்தாலும் இனிப்பவை காதல் கவிதைகள்! இந்தக் கவிதையும் அருமை!
பின்னிரவில் உறங்கி
முன்னிரவில் எழுந்து
இன்னும் சில யுகங்கள் கழிய..
அருமையான வரிகள். வாழ்த்துகள்.
அழகான காதல் கவிதை சங்கர்..
எனக்கு இப்பவே காதலிக்கணும் போலிருக்கே சங்கர் சார்!
//////ரேவா said...
பின்னரவில் உறங்கி
முன்னிரவில் எழுந்து
அவளுக்கான காத்திருப்புகளை அழகாய் சொல்லி இருக்கிறேர்கள்...வாழ்த்துக்கள்....
////////
வாங்க ரேவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
///தமிழ் உதயம் said...
காதல் எதை தருகிறதோ இல்லையோ, நல்ல கவிதைகளை தருகிறது. வாழ்த்துகள் சங்கர்.//!!
வாங்க தமிழ் உதயம்
அப்படியா !? எங்கேத் தருகிறது சொல்லுங்க எனக்கும் ஒரு ரெண்டு கிலோ வேண்டும் .!???
////////# கவிதை வீதி # சௌந்தர் said...
காதல் மட்டும் இல்லையென்றால் இந்த பூமியும் நீர்த்துப்போயிருக்கும்...
ஆழமான கவிதை..
வாழ்த்துக்கள்..
/////////
காங்க இது சௌந்தர் உங்களின் புதியக் கண்டுபிடிப்போ !????
/இராஜராஜேஸ்வரி said...
பின்னிரவில் உறங்கி
முன்னிரவில் எழுந்து
இன்னும் சில யுகங்கள் கழிய..
அருமையான வரிகள். வாழ்த்துகள்.///////
வாங்க இராஜராஜேஸ்வரி வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி !
///சசிகுமார் said...
எப்பவும் போல பதிவு டாப்பு தான்.
////////
வாங்க சசிகுமார் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி !
////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
வழக்கம் போல அசத்தல் கவிதை..////
அப்படியா நன்றி வேடந்தாங்கல் !
///கந்தசாமி. said...
காதல் வந்தால் என்னென்னவெல்லாம் எம்முள் நடக்கும் என்பதை அழகாக வடித்துள்ளீர்கள்.../////
எனக்குத் தெரிந்து காதல் ஒருமுறைதான் வரும் ஆனால் நீங்க என்னமோ காலம் காலமாக காதல் செய்வது போல சொல்லி இருக்கிங்களே !?? எது எப்படியோ கருத்திற்கு நன்றி
//////வேங்கை said...
காதல் வர்றதும் கஞ்சா அடிகறதும் ஒன்னு தான் போல என்ன என்னமோலாம் தோணுது .. ஹ ஹ ஹ சும்மா...
கவிதை அருமை ரொம்ப நல்லா இருக்குங்க .../////////
கஞ்சாவுடன் ஒப்பிட்டு காதல் கவிதைக்கு மறுமொழி போட்ட அண்ணனுக்கு ஒரு 'O' போடுங்க . நன்றி தலைவா
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எத்தனை முறை படித்தாலும் இனிப்பவை காதல் கவிதைகள்! இந்தக் கவிதையும் அருமை!////
ஒருவேளை எல்லாக் கவிதையிலும் சர்க்கரையை போட்டு கலந்து எழுதி இருப்பாங்களோ !? நன்றி நாராயணன் கருத்திற்கும் வருகைக்கும்
////போளூர் தயாநிதி said...
பின்னிரவில் உறங்கி
முன்னிரவில் எழுந்து
இன்னும் சில யுகங்கள் கழிய..
அருமையான வரிகள். வாழ்த்துகள்.
/////////
வாங்க போளூர் தயாநிதி வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி !
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
அழகான காதல் கவிதை சங்கர்..
//////
நன்றி அக்கா
சங்கர் சார்
என்னை உங்கள் புதிய தோழியாக ஏற்று கொள்வீர்களா !
உங்கள் கவிதைகளை படிக்கும் போது என் கண்ணில் நீர் வருகிறது. அருமையான கவிதை ! காதலை உணர்ந்து காதலை சுவாசித்து எழுதிய கவிதை !
////மோகன்ஜி said...
எனக்கு இப்பவே காதலிக்கணும் போலிருக்கே சங்கர் சார்!
//////////
ஆஹா அப்ப நீங்க இதுவரைக்கும் காதலிக்கவே இல்லையா !??? சீக்கிரம் நடக்கட்டும் நடக்கட்டும்
kannama said...
//சங்கர் சார்
என்னை உங்கள் புதிய தோழியாக ஏற்று கொள்வீர்களா !
உங்கள் கவிதைகளை படிக்கும் போது என் கண்ணில் நீர் வருகிறது. அருமையான கவிதை ! காதலை உணர்ந்து காதலை சுவாசித்து எழுதிய கவிதை !////
அனுமதி பெற்று இதயம் திருடுவது நட்பு !.
அனுமதியின்றி இதயம் திருடுவது காதல் .!
இதில் நீங்கள் முதல் வகை உங்களுக்கு இல்லாத நட்பா .எப்பொழுதும் என் இனியத் தோழிதான் நீங்கள் . உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றிகள் தோழி
அழகாகவே பூத்து நிற்கிறது..
காதல் சுகமானது மட்டுமல்ல சுமையானதும் கூட ஆனால் சுகமான சுமைகள் வாழ்த்துக்கள் கவிதை அருமை
"எத்தனை முறை தான் என்னில்
பறித்து செல்வாய் இன்றாவது
சரியாய் கொடுத்துவிடு
சொல்லாம்ல் சொல்கிறது அவளுக்காய்
மீண்டும் பறித்த ரோஜா ஒன்று"
அருமையான வரிகள்..
அழகான கவிதைகள்.
அருமையான கவிதை ...
எத்தனை கவிதைகள் எப்படித்தான் எழுதினாலும் தீர்ந்துபோகாதது காதல் !
முதல் நாங்கு வரிகள்...supeeeeeeeeeer..
ஆழமான அழகான கவிதை...
Nice
Post a Comment