இறந்துபோன உடலில் எல்லாம்
மீண்டும் உயிர்பிக்கிறது மற்றொரு உடல் .
கட்டி அனைத்துக்கொண்டு சிரிப்பதா !?
இல்லைக் கட்டித் தழுவிக் கொண்டு அழுவதா !?
மாண்ட கணவனின் மேல்
மீளும் நினைவுகளுடன் கதறுகிறாள்
சற்றுமுன் இந்த உலகம் பார்த்த
கைக்குழந்தையுடன் ஒருத்தி !.
ஆயிரம் உறவுகள் ஆறுதல் சொல்லியும்
வற்றிபோகாத கண்ணீர் அருவிகள்
அவளின் விழிகளில் .
மரணத்தின் முடிவில் இத்தனை இரனங்களா!?
முதல் முறை சுமக்கிறேன்
பணம் தேடிவந்த நண்பனின்
பிணத்தை வெளிநாட்டில் !!.....
❤ பனித்துளி சங்கர் ❤
Tweet |
19 மறுமொழிகள் to உயிர் வலி - பனித்துளிசங்கர் கவிதைகள் - Uyir vali Kavithai -Panithuli shankar poem - 28 May 2011 :
very pity.
மரணத்தின் முடிவில் ரணங்கள்... மனம் கனத்துப் போகிறது...
மனசு கனக்கிறது...
கண்ணீர்த்துளி...
கண்ணீர்த்துளி...
மிகவும் வருந்தத்தக்கதொரு நிகழ்ச்சி பற்றி எழுதப்பட்ட அருமையான கவிதை.
மிகவும் வருந்தத்தக்கதொரு நிகழ்ச்சி பற்றி எழுதப்பட்ட அருமையான கவிதை.
:(
இது கவிதையல்ல.ஒரு பெண்ணின் சோகக் காவியம்.அனுபவத் தெறிப்பு !
அருமை ! அருமை ! வலியின் தாக்கம் என் விழிகளில் நீராக !
படிக்கும் போது மனம் கனக்கின்றது
விதவைத் தாயின் உணர்வலைகளைச் சுட்டி நிற்கிறது இக் கவிதை.
வித விதமான வலிகள்.. ஆனாலும் அவை வலிமையானவை.. மனிதனை புரட்டி போடுபவை, அதிலும் மனதில் ஏற்படும் வலி...
அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள்
http://karadipommai.blogspot.com/
மனித பிறவியின் மிகக் கொடூரமான தருணம் இது .....
கணவணை இழந்தோர்கு
காட்டுவ தின்றே
கையில் அந்தோ
குழைந்தையும ஒன்றே
துணைவனை இழந்த
தோகையள் இன்றே
தொல்லை வாழ்வில்
தொடர்நிலை என்றே
இங்கே
சொன்னீர் பனித்துளி
கண்ணீர்த் துளியென
புலவர் சா இராமநசம்
மனம் பாதித்த கவிதை
நிஜத்தின் பதிவெனில்..
எனது இரங்கல்களூம்
சங்கர்....
வரிகள் வலிகளை சுமந்து...கொண்டு
கை குழந்தை உடன் விதவை தாய் ................
Post a Comment