எப்பொழுதும் உஷ்ணம் மட்டுமே
யாசிக்கும் இந்த தேகத்தில்
முதல் முறை
ஒரு மலரின் சுவாசம்
உன்னை நேசித்தக் கணங்கள்
ஞாபகத்தில் இல்லை
ஆனால் தினம் சுவாசிக்கும்
ஒவ்வொரு நொடியும்
உந்தன் ஞாபகங்கள் நிரம்பி வழிகிறது !
உந்தன் முகம் பார்க்காத உரையாடல்கள்
பல கற்பனைகளை
விதைத்து செல்கிறது
என் எண்ணப் பெருவெளிகள் எங்கும் !
பூக்களின் புன்னகை ரசிக்க
உன் சிரிப்பு..!
குயிலின் குரல் ரசிக்க
உனது பேச்சு..!
மதுவுண்ட போதை உணர
உந்தன் பார்வை..!
நீண்ட தூரங்கள் கடக்க
உன் நினைவுகள்..!
ஆயிரம் கவிதைகள் கிறுக்க
உந்தன் சில நொடி வெட்கம்..!
ஒரு நொடியில்
என்னை கொலை செய்ய
உந்தன் அரை நொடி மவுனம்...!
வீட்டின் கூரை
முழுவதும் நமக்காய் ஒரு வானம்..!
தலை நனைக்கும் எப்போதும்
தலை துவட்ட உந்தன் முந்தானை..!
நீ பரிமாறி
நான் உண்ட பின்
கை கழுவ பக்கத்தில் கடல்..!
மேகங்களெல்லாம் ஊஞ்சல் கட்டி விளையாட
உந்தன் ஓரிரு கூந்தல் முடி !
உன்னை வாசித்து முடிக்க
மூக்குத்தி வெளிச்சம்..!
நாம் முத்தமிட ஒரு குழந்தை
நம்மை முத்தமிட ஒரு நிலவு..!
விண்மீன்கள் பறிக்க
துணைக்கு உந்தன் விரல்கள்..!
தாலாட்ட தென்றல்
தலை கோத
உன் விரல்கள்
தலையணைக்கு உன் மடி...!
இந்த உலகம் மறக்க
எப்போதும்
என் அருகில் நீ...!!
Tweet |
36 மறுமொழிகள் to காதல் கவிதைகள் பனித்துளி சங்கர் : தேகம் யாசிக்கும் மலர் : Tamil Kadhal Kavithai / Love Poem 07 May 2011 :
எவ்வளவு ஆனந்தமான வேண்டுகோள்...
அசத்தல் கவிதை நண்பரே....
காதலின் பரவசம்..
காதலின் ஸ்பரிசம்..
காதலின் ஏக்கம்..
காதலின் தாக்கம்...
குடிக்கொண்ட இந்த கவிதை.. படிப்பவரையும் பரவசப்படுத்துகிறது...
good sir
படித்ததும், இனிய அந்த தருணங்களை எண்ணி, மீண்டும் ஏக்கம் பிறந்தது.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
என்னமா எழுதுறீங்க மாப்ள...................இப்படி தங்களை அழைக்கலாமா நண்பா!
super
வாங்க சௌந்தர் உங்களின் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி
வாங்க shanmugavel நன்றி !
/////வை.கோபாலகிருஷ்ணன் said...
படித்ததும், இனிய அந்த தருணங்களை எண்ணி, மீண்டும் ஏக்கம் பிறந்தது.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
//////////
வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார் உங்களின் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி !
//////விக்கி உலகம் said...
என்னமா எழுதுறீங்க மாப்ள...................இப்படி தங்களை அழைக்கலாமா நண்பா!//////
வாங்க விக்கி உலகம் உங்களின் அன்பிற்கு நன்றி ! எப்படிவேண்டுமானாலும் அழைக்கலாம்
///////சசிகுமார் said...
super
///////
வாங்க சசிகுமார் ஏதோ அவசர வேலையென்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி !
வழக்கம் போல் அசத்தல் மக்கா...
////////MANO நாஞ்சில் மனோ said...
வழக்கம் போல் அசத்தல் மக்கா...//////
வாங்க மனோ வருகைக்கும், கருத்திற்கும் நன்றி
அழகான கவிதை பாராட்டுக்கள்.
காதல்....ரசனைகள்....வரிகளாய் சங்கர்
என்னை கொலை செய்ய உந்தன் அரைநொடி மவுனம்....
அழகான வரிகள்
//என்னை கொலை செய்ய
உந்தன் அரைநொடி மவுனம்....//
ரசிப்பின் உச்சம். பாராட்டுக்கள் நண்பரே!
//நீண்ட தூரங்கள் கடக்க
உன் நினைவுகள்...
ஆயிரம் கவிதைகள் கிறுக்க
உந்தன் சில நொடி வெட்கம்...//
எந்த வரியைப் பாராட்ட எந்த வரியை விட என்றே தெரியவில்லை. அனைத்துமே மிக அருமையான அழகான வரிகள்.
சொட்ட சொட்ட நனைக்கும் கவிதைகள்.
///////இராஜராஜேஸ்வரி said...
அழகான கவிதை பாராட்டுக்கள்.
////////
வாங்க இராஜராஜேஸ்வரி கருத்திற்கு நன்றி !
///செந்தில்குமார் said...
காதல்....ரசனைகள்....வரிகளாய் சங்கர்
என்னை கொலை செய்ய உந்தன் அரைநொடி மவுனம்....
அழகான வரிகள்////////////
வாங்க செந்தில்குமார் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
////////FOOD said...
//என்னை கொலை செய்ய
உந்தன் அரைநொடி மவுனம்....//
ரசிப்பின் உச்சம். பாராட்டுக்கள் நண்பரே!
///////////
வாங்க FOOD உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
//////கடம்பவன குயில் said...
//நீண்ட தூரங்கள் கடக்க
உன் நினைவுகள்...
ஆயிரம் கவிதைகள் கிறுக்க
உந்தன் சில நொடி வெட்கம்...//
எந்த வரியைப் பாராட்ட எந்த வரியை விட என்றே தெரியவில்லை. அனைத்துமே மிக அருமையான அழகான வரிகள்.////////
வாங்க கடம்பவன குயில் உங்களின் தொடர்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
///ஸ்ரீராம். said...
சொட்ட சொட்ட நனைக்கும் கவிதைகள்.//////
வாங்க ஸ்ரீராம் கவிதைகள் இல்லை கவிதை மட்டும்தான் . தங்களின் அன்பிற்கு நன்றி
இனிமையான ஆசை,அருமையான கவிதை
அசத்தலான..அருமையான கவிதை நண்பரே!!!
"இந்த உலகம் மறக்க எப்போதும் என் அருகில் நீ" சுவையான கவிதை அழகாக முடித்திருக்கிறீர்கள்.
நல்லாயிருக்கு நண்பா
சகோ, எந்த வரிகளை எடுத்து, வர்ணிப்பது என்றே தெரியவில்லை,
கவிதையின் ஒவ்வோர் வரிகளையும் அழகாகச் செதுக்கியுள்ளீர்கள் சகோ.
nice
கவிதைக்கு ஒரு மந்திர சக்தி உண்டு.
அது படிப்பவரை மாற்றும். அவர் தம் மனதை மலர் போல் ஆக்கும்.
அத்தகைய ஒரு மகத்தான பணி செய்யும் பனித்துளிக்கு அன்பும் பாராட்டுக்களும்.
கவிதை நல்லா இருக்குது. தொடர்ந்து கலக்குங்க....
லாரன்ஸ்
ரொமான்ஸ் ரெம்ப தூக்கல் பாஸ்
சூப்பர் பாஸ்
அத்தனை வரிகளும் அருமையாய் உள்ளது அண்ணே
எல்லா நொடியும் அவளுக்காய்...
எல்லாமும் அவளாய்....
எல்லையில்லா ரசனையோடு
எழுதப்பட்டதோ கவி வடிவாய்?
மிகவும் ரசித்தேன் :)
அனைத்து வரிகளும் அருமை அண்ணா..
வணக்கம் சங்கர் நலமா ?
உங்கள் கவிதைகள் படித்தேன் வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை தோழரே ! மேலும் உங்கள் கவி பனி தொடர இந்த தோழியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே !
அன்புடன்
பிரியமான தோழி
நித்யா
அண்ணா அருமையான காதல் கவிதை...மிகவும் பிடித்த வரிகள்.
Post a Comment