ஜோக்ஸ் சிரிக்கலாம் வாங்க நகைச்சுவை பனித்துளிசங்கர் சிரிப்பு கடி காமெடி துணுக்குகள் -Panithulishankar Tamil jokes +18

டிஸ்கி : எல்லோரும் முடிவில்தான் டிஸ்கி போடுவாங்க இவன் என்ன தொடக்கத்திலே போட்டு இருக்கானே என்று பதிவை வாசிக்கும் முன் கேள்வி கேட்க நேர்ந்தால் நீங்கள் நக்கீரன் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என்று எண்ணிக்கொள்ளுங்கள்..! (ஹி.. ஹி...ஹி...)

'' உலகத்தில் மிகப்பெரிய சந்தோசம் நமது அருகில் இருப்பவர்களை சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான்'' என்று எங்கோ படித்திருக்கிறேன். ( நீ எங்கட எங்களை சந்தோசப் படுத்திப் பார்த்த தக்காளி இத்தனை வருடமாக பதிவு என்ற பெயரில கொலை செய்தது போதாதா..!?? என்று மனசுக்குள் கொலை வெறியில் கோடாரியை தூக்குவது நல்லா இங்கு தெரியுது மக்கா..! அவசரப்படாதிங்க எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்...!! ஹி..ஹி..ஹி...) அதனால்தான் இதை வாசிக்கும் நீங்கள் அருகில் இல்லையென்றாலும் தூரத்தில் இருந்தே சிரித்து மகிழ இந்த நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்புகள் என சில துணுக்குகளை பகிர்ந்திருக்கிறேன். இவற்றை வாசித்துவிட்டு சிரிப்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு. சிரிப்பு வராமல் யாருக்கேனும் மாறாக அழுகை வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.! ஹி...ஹி...ஹி... (ரைட்டு.... சைத்தான் சைக்கிள்ல வருது..!!!)

* * * * * * *
போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
* * * * * * *

சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
 
* * * * * * *
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட
"செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
* * * * * * *
மணமகள் தேவை ஆணழகன் யானைக்கு சிரிப்பு /மொக்கை
 ஒரு யானை ஒரு எறும்பைப் பொண்ணு பார்க்க போனது . யானை எறும்புப்பெண்ணின் சிற்றிடை கண்டு மயங்கி கட்டினா அதைத் தான் கட்டுவேன்னு நாலு காலிலையும் நின்னது .ஆனா அந்த எறும்பு மறுத்து விட்டது . கேட்டதற்கு அந்த எறும்பு சொன்னது என்னவென்றால் பையனுக்கு கை நீளம் !
* * * * * * *
அப்பாவி மனைவிகள் / தப்பான கணவர்கள் சிரிப்பு / ஜோக்ஸ்

வேலைக்காரிக்கும் ரோஸிக்கும் ஒரு நாள் சண்டை வந்துவிட்டது. வேலைக்காரியை வீட்டைவிட்டு அனுப்புவதென்று முடிவானது. வேலைக்காரிக்கு சரியான கோபம். போவதற்கு முன் நல்லா நாலுவார்த்தை ரோஸியைக் கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று முடிவு செய்தாள். ''வீட்டைப் பாத்துக்கிறதுலயும் சமைக்கிறதுலயும் நான் உன்னைவிட பெட்டர்னு உன் புருஷன் என்கிட்ட சொல்லியிருக்கான்.'' ரோஸி கண்டு கொள்ளவில்லை. ''செக்ஸிலயும் உன்னைவிட நான்தான் பெட்டர்னு தெரியுமா உனக்கு?'' ரோஸி அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள், ''இதையும் என் புருஷன்தான் சொல்லியிருப்பான்.'' வேலைக்காரி சொன்னாள், ''இல்லை, தோட்டக்காரன் சொன்னான்.''
  * * * * * * *
"நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே ? "
"குழந்தைகிட்ட இல்ல…என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு "
"அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா…பெட் ரூம் என்னாச்சு ?"
"என்னது ?சமையல் ரூமா ? - அங்கே வேலைக்காரில்ல தூங்கினா… "

* * * * * * *
டாக்டர் : காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க ?
நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி .>!, அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன் ..!
* * * * * * *
முட்டாப்பய தேர்வு சங்கம் ஜோக்ஸ் சிரிப்பு
 
ன்னதான் 300 பக்கம் படிச்சாலும் பரீட்சைல 30 பக்கம் தான் எழுத முடியும்” இப்படிக்கு 3 பக்கம் படிச்சு 30 பக்கம் தாண்டி அடிஷ்னல் பேப்பருக்காக கெஞ்சுவோர் சங்கம்
* * * * * * *
டீச்சர் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
சுட்டிப்பைய்யன் : ஸ்கூல்லையா ?? வீட்லையா சார் ??
* * * * * * *
நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?
டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..
* * * * * * *

கொசுவை ஒழிப்பது எப்படி ஜோக்ஸ் /சிரிப்பு ?

1. முதலில் உயிரோடு ஒரு கொசுவை பிடிக்க வேண்டும்
2. அதை மெத்தையில மேல படுக்க வைக்கவேண்டும்
3. ரெண்டு ரெக்கையும் ரெண்டு கையால் பிடித்துக்கொள்ள வேண்டும்
4. அப்பரம் அதோட வயித்துல கிச்சுகிச்சு மூட்டு
அப்போ கொசு சிரிக்க வாய திறக்கும் அப்போ உடனே அதோட வாயில ஒரு ஸ்பூன் பாய்சனை ஊத்திவிடு….
கொசு செத்துப்போய்டும்
இதையெல்லாம் விட கொசுவை சாகடிக்க இன்னொரு ஈசியான வழி என்னான்னா………………
கொசுவோட காதுல நீ “ஐ லவ் யூ” சொன்னேன்னா அதுவே அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கும்.

* * * * * * *
 புதுமை பெண் நகைச்சுவை ஜோக்ஸ்

மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டின மாதிரி உனக்காக நான் ஒரு மாளிகை கட்டுறேன் டார்லிங்"
" இந்தக் கதையெல்லாம் வேணாம். முதல என் கழுத்துல தாலிய கட்டுங்க"

* * * * * * *
தத்துவம்

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு

தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதில் கூட சுகம் உண்டு……..!!
* * * * * * ** * * * * * *

15 மறுமொழிகள் to ஜோக்ஸ் சிரிக்கலாம் வாங்க நகைச்சுவை பனித்துளிசங்கர் சிரிப்பு கடி காமெடி துணுக்குகள் -Panithulishankar Tamil jokes +18 :

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா ...ஹா.... ஹா...... எல்லா ஜோக்குகளும் அருமை! எல்லாமே ஒரு மார்க்கமாவே இருந்தாலும் சூப்பரா இருக்குது! அசத்தல்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நகைச்சுவைகள் நல்லாத் இருக்குது..
அட நல்லாதான் இருக்குது...

Jana said...

நல்ல நகைச்சுவைகள். அதேபோல நல்ல நகைச்சுவை காணொளி

கடம்பவன குயில் said...

சுவையான நகைச்சுவை. மிஸ்டர் பீன் வீடியோ சூப்பர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லா ஜோக்ஸ்ஸும் அருமை.
யானை+எறும்பு படு ஜோர்

உணவு உலகம் said...

:))

goma said...

நல்லா சிரிச்சேன்

இராஜராஜேஸ்வரி said...

எல்லா ஜோக்ஸ்சும் அருமை.
இரண்டு ரூம்களின் சாவி கேட்ட புத்திசாலி சிந்திக்கவும் வைக்கிறார்.

middleclassmadhavi said...

:-))

ஹேமா said...

பல்லி கரப்பான்பூச்சி - அருமை !

Unknown said...

மாப்ள சிப்பு சிப்பா வந்துது நன்றி!

Yoga.s.FR said...

ஜோக்ஸ் எல்லாம் நல்லாவே இருக்கு!பதினெட்டு பிளஸ் தானே?

ARV Loshan said...

ஹா ஹா ஹா.. முதல் மூன்றும் முன்பே அறிந்ததும் பகர்ந்ததும்..

யானை - எறும்பு, எலி - கரப்பான் ஹீ ஹீ ஹீ..

காட்டுப்பூச்சி said...

சூப்பர்

Unknown said...

Sir,

Jokes are really good. But please change the background color alone