வணக்கம் நண்பர்களே..!! அனைத்து மாணவ மாணவியர்களும், அவர்களது பெற்றோர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே- 2011 (SSLC Exam Results - May 2011) 27.05.2011 வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு முடிவுகளை (Exam Results) இணையதளங்கள் (Websites) வாயிலாகவும், கைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS) வாயிலாகவும் தெரிந்து கொள்ள பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
கடந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட SSLC தேர்வு முடிவுகள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்பட்ட தொய்வு, மதிப்பெண்கள் பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக தள்ளிப்போக நேர்ந்ததாக பள்ளி்க்கல்வித் துறை தெரிவித்தது.
தற்பொழுது, விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விட்ட நிலையில், நாளை தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6,922 பள்ளிகளில் படித்த எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியுள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் காலை 10.00 மணியளவில் வெளியிடப்படும். இதனை
தமிழ்நாடு அரசின் இணையதளங்களான கீழ்கண்ட இணைப்புகளை க்ளிக் செய்து முடிவுகளை காணலாம்.
மற்றும்
எனது அருமை சகோதர, சகோதரிகளான அனைத்து மாணவ மாணவியர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற உங்கள் சகோதரன் பனித்துளி சங்கரின் நல்வாழ்த்துக்கள்...!
* * * * * * *
Tweet |
12 மறுமொழிகள் to பத்தாம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள்- மே 2011 (Public Exam Results- May 2011) :
சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், வேண்டுதல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
சங்கர் அண்ணே, நான் எட்டாம்கிலாசு பாசு., நீங்க பத்து பெயிலா?
அந்த மூணாவது வோ .... சரி விடுங்க., எதுக்கு கிண்டி கிளறி,.....
நல்ல சேவை.
சங்கர் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாகவும் உண்மை தன்மையினையும் எடுத்துக் காட்டுகின்றது.. உங்கள் போன்ற பதிவர்கள் முன்பு நாம் சாதரணம் தங்கள் ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் வேண்டும். இப்படிக்கு இளமை அட்மின்.
வணக்கம் பனித்துளி ...
அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ....
என்ன பனித்துளி தமிழ்நாட்டுல SSLC படிச்ச பசங்களே இல்லையா சங்கர் ??? எல்லாம் பொண்ணுங்க படமா போட்டு இருக்கீங்க ... என்ன பண்ண இல்லைனா ரிசல்ட் அஹ கூட பார்க்க மாட்டாங்க போல ?!!
சமீபத்திற்கு தேவையான பதிவு....
வெற்றிப் பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
தேவை இந்த சேவை.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!!
தேர்வில் வெற்றி பெற்ற சகோதரிகள், சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
http://www.resultlink.in/ check the results here friends
Post a Comment