சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ................
மொக்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..
"சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?"
"இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"
ஆசிரியர்:ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??
மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்.
மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
மருத்துவர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
ஆசிரியர்: எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு
மாணவன்: பி, சி, டி,எப்
ஆசிரியர்: டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??
மாணவன்: அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்
ஜோன்ஸ் : படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்
பீன்ஸ் : யார் வில்லனா?? கதாநாயகனா??
ஜோன்ஸ்: தயாரிப்பாளர்
இயக்குனர் :,இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"
கதாநாயகன் :"படத்தோட பேரு?"
இயக்குனர் "ஜிம்மி ரிடர்ன்ஸ்!"
ஜோன்ஸ் : என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
பீன்ஸ் :இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.
ஜோன்ஸ் : இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.
பீன்ஸ் :பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா...?
ஜோன்ஸ் : ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.
உடுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?
'Addres'
ஜோன்ஸ் : பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
பீன்ஸ் :துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.
ஜோன்ஸ் : இவர் பழக இனிப்பானர்
பீன்ஸ் :என்ன செய்றார்?
ஜோன்ஸ் : ஸ்வீட் கடை வச்சிருக்கார்.
ஜட்ஜ் சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன் ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.
ஜோன்ஸ் : ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?
பீன்ஸ் :அது வாயில்லா ஜீவன்.
ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.
பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!
இன்றைய நகைச்சுவை பாடல் சினிமா
Night at the roxbury-What is love? comedy Song
Tweet |
17 மறுமொழிகள் to ஜோக்ஸ் நகைச்சுவைகள் சிரிப்புகள்-Tamil Jokes Comedy -பனித்துளி சங்கர் 22 May 2011 :
ஆகா ஆகா ஒவ்வொன்றும் அருமை.
Interesting.
ஹா ஹா அருமையான நகைச்சுவைகள்! இன்னமும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
மொக்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..//
ஆரம்ப வரிகளே, சிரிப்பை வர வைக்கிறது சகோ.
உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"//
பாஸ்...இது மரண மொக்கையா. அசத்திட்டீங்களே.
ம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!//
பாஸ்...உட்கார்ந்து யோசித்ததா. அருமையான நகைச்சுவைகள்.
ஹா ஹா ஹா ஹா சூப்பரு....
சூப்பர்ர் ஜோக்ஸ்!!
நல்ல ஜோக்ஸ். பாராட்டுக்கள்.
மாமியார்கள் இரண்டுமே பிரமாதம்.
சிரிக்க வைத்தது நகைச்சுவைகள் !
அசையாமல் கிடந்தா செத்தாச்சுன்னு எரிச்சுடுவாங்களோன்னுதான் எல்லோருக்கும் பயம். இங்கோ அப்படியே தலை கீழ்ஹாய்... அற்புதம் சங்கர்
அனைத்தும் அருமை. மனம்விட்டு சிரித்தேன். நன்றி!
வாய் விட்டு சிரித்தேன்
நன்றி
super comedi..................
hi super comdey very nice ya
நல்ல நகைச்சுவை
நல்ல நகைச்சுவை
Post a Comment