காற்று வெளியில்
திறந்து வைத்தப் புத்தகத்தின்
வாசித்து முடிக்காத பக்கங்களாய்
படபடத்துக் கொள்கிறது
கற்பனைகளும் ,கனவுகளும் !
எட்டித் தொட்டுவிடும் வானமாய்
பார்க்கும் திசை எங்கும்
சரிந்துகிடக்கிறது மேகங்கள் .
உள்ளம் எழுத நினைத்தும்
எழுத்தாணி இல்லாத விரல்களாய்
ஒரு நீண்டதவிப்புடன்
இதயத்தில் சேமிக்க முயற்ச்சிக்கிறேன்
சற்றுமுன் ரசித்த
அந்த இயற்கைக் காட்சிக்கான
கவிதையை !
❤ பனித்துளி சங்கர் ❤
Tweet |
12 மறுமொழிகள் to தரை தொடும் வானம் - பனித்துளிசங்கர் இயற்கை கவிதைகள் -Nature kavithaigal 30 May 2011 :
ஒரு கவிஞனுக்கு இருக்கும் இயல்பான தவிப்பு, பார்த்ததை உடனே எழுத்துக்களாய் வடித்துவிடும் மனோபாவம்..
நல்ல வெளிப்பாடு சங்கர்! வாழ்த்துக்கள்!
http://karadipommai.blogspot.com/
வழக்கம் போல அசத்தல் மக்கா...!!!
நீங்கள் சொல்வது சரியே. உடனுக்குடன் எழுதுகோலால் பதிவு செய்து கொள்ளத்தான் வேண்டும். இல்லாது போனால் அடுத்த நிமிடம் மறந்து போகுது. இதயத்தில் சேமிக்க உங்களைப்போல தனித்திறமை வேண்டும்.
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
அருமையான கவிதை
எளிய ஆனால் வலிய கவிதை
visit: www.kingraja.co.nr
கனவுகள்! கற்பனைகள்.!!
கவிஞர்கள் பார்வை வேறாம்-எதுவும்
கவிதையாய் காண்பதே கூறாம்
புவதனில் உம்முடை புலமை-பலரும்
போற்றிட செய்யும் வளமை
வாழ்க வளமுடன்
புலவர் சா இராமாநுசம்
ஒவ்வொரு விடையத்தையும் அழகையும் மனதில் சேமித்து தேவையான நேரம் அதை விட்Nih செய்து, கவிதையில் மீள் டிப்போசிட் செய்பவன்தானே கலைஞன் :)
அருமையான கவிதை இயற்கையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது ......... கவிதை தோழர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
விரைவில் எழுதி விடுங்கள் நண்பரே...
அந்த இயற்க்கையின் அழகை...
கவிதை அருமை ரசித்தேன்..
நல்ல கவிதை
Post a Comment