சிரிக்க சுவாரஸ்யமான நகைச்சுவை ஜோக்ஸ் தகவல்கள் : பனித்துளி சங்கர் +18 09 May 2011

கைச்சுவை ஜோக்ஸ் ரசித்து சிரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் சிரிப்பு என்பது எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும் .மனிதர்களாகிய நாம் மட்டும்தான் சிரிக்கத் தெரிந்தவர்களா !? என்று கேள்வி எழுப்பத் தொடங்கினால் அதிகம் சிரிக்கத் தெரிந்த உயிர்களின் பட்டியலில் மனிதன் ஏழாவது இடத்தில் இருப்பதாக ஆய்வொன்று சொல்கிறது . அந்த அளவிற்கு மனிதன் சிரிக்கும் தகுதிகள் இருந்தும் தனுக்குத் தானே ஏமாற்றிக்கொண்டு சிரிக்க தெரியாத ஒரு இயந்திரமாய் மாரிகொண்டிருக்கிறான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே !.

சில மாதங்களுக்கு முன்பாக மங்கோலியா என்ற நாட்டில் கண்டறியப்பட்ட ஒரு அதிசயப் பறவை நாற்பதிற்கும் மேற்ப்பட்ட வித்தியாசமான முறைகளில் சத்தத்தை ஏற்படுத்தி சிரிப்பதாக அறியப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளும், மனிதக்குரங்குகளும் தாங்கள் யாருக்கும் தீங்கிழைக்காதவர்கள் என்பதனை தங்களின் பல்லைக்காட்டி நம்முன்னோர்களுக்குத் தெரிவத்தன. ஒவ்வொரு உயிரனமும் சிரிப்பை விதவிதமாக வெளிப்படத்தி வந்துள்ளன. குறிப்பாக, மனிதர்கள் தங்களது மகிழ்ச்சியை புன்னகையாகவும், புன்முறுவலாகவும், முகமலர்ச்சியாகவும், இன்முகம் காட்டியும் தெரிவிக்கிறார்கள். சரி நண்பர்களே நானும்  இந்த சிரிக்கலாம் வாங்கப் பகுதியில் உங்களுடன் சேர்ந்து சிரிப்பதர்க்காகவே சில நகைச்சுவை துணுக்குகளை இந்தப் பதிவில் பகிர்ந்திருக்கிறேன் .ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க...
ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு?
ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன்கமலா : என் காதலருக்கு குறும்பு ஜாஸ்தி.

விமலா : எப்படி சொல்ற?
கமலா : 'உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்'னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு.ரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.
டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.ரசு பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு முறை' குறிப்பிட்டார்.
 
இதை கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார், 'ஆண்/பெண் NN blem' என்று திருத்தி எழுதினார். அதற்க்கு பிறகு Salaaa EEEecced: என்ற இடத்தில் 'Yee' என்று எழுதினார். விண்ணப்பத்தின் கீழ் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு (IIIIIIcciii), உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன் என்னாச்சு கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார் சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார். அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்க்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill The Application In Capital" என்று எழுதியிருந்தது..


சாந்தி : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?

அனிதா  : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே!


அமலா : பைனான்ஸ் கம்பெனிக்காரரைக் காதலிச்சது தப்பாய் போச்சு!
விமலா : ஏன்?
அமலா : எங்கள் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினாலும் ஓடிப் போய் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறார்.


ரு மலையாளி தமிழ் நண்பரிடம் வழி கேட்கிறார்
மலையாளி: அண்ணாச்சி. மச்சி மார்க்கெட் எவிட இண்டு? (மீன் அங்காடி எங்கே உள்ளது?)
தமிழ் நண்பர்: மச்சி மார்க்கெட்டா? நேரா போயி... மனசிலாயா? சோத்துக்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? அங்க ஒரு ஈரானி கடை இருக்கும்... மனசிலாயா? அங்கேர்ந்து பீச்சாங்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? ஒரு பிரிட்ஜ் வரும்... மனசிலாயா? அந்த பிரிட்ஜ் தாண்டுணா மச்சி மார்க்கெட்தான்..! மனசிலாயா?
மலையாளி: எல்லாம் மனசிலாயி. இந்த மனசிலாயியையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாம்.
( மலையாளத்தில் மனசிலாயா என்பதற்கு தமிழில் புரிகிறதா என்பது பொருள்)மெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

                             இன்றைய நகைச்சுவை சினிமா சிரிப்புடிஸ்கி : ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே? பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.


18 மறுமொழிகள் to சிரிக்க சுவாரஸ்யமான நகைச்சுவை ஜோக்ஸ் தகவல்கள் : பனித்துளி சங்கர் +18 09 May 2011 :

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும்படியான மற்றும் சிரிக்கும் படியான நகைச்சுவைகள்...


பிறர் நம் செயலைப்பார்த்து தான் சிரிக்க கூடாது..
மிஸ்டர் பீன் நான் ரசித்த நகைச்சுவையாளர் சார்லின்னுக்கு அடுத்த இடத்தில் அவர்தான்...

வாழ்த்துக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நகைச்சுவைத்துணுக்குகளும், வீடியோ படமும் நன்கு சிரிப்பை வரவழைத்தன.
நன்றி. பாராட்டுக்கள்.

சமுத்ரா said...

அனைத்தும் அருமை

Unknown said...

நண்பா நல்லா இருக்கு ஜோக்ஸ் நன்றி!

Unknown said...

All r very nice! :-)

சசிகுமார் said...

பிரமாதம் நண்பரே இன்ட்லியில் ஏதாவது பிரச்சினையா போன பதிவிலும் வேலை செய்யவில்லை. இந்த பதிவிலும் வேலை செய்யவில்லை.

குறையொன்றுமில்லை. said...

எல்லா ஜோக்குகளுமே நல்லா
இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

மிஸ்டர் பீன் ஹா ஹா ஹா ஹா சூப்பர்....

கடம்பவன குயில் said...

ஹா ஹா ஹா.....நல்லா ரசித்து சிரித்தேன். ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருந்தது. மிஸ்டர் பீன் நல்ல காமெடி.

Unknown said...

மலையாளி ஜோக் சூப்பராக இருந்தது. டிஸ்கி ரசிக்க வைத்தது. மிஸ்டர் பீன் சேட்டை நல்லாயிருந்தது.

ஸ்ரீராம். said...

சர்தார் ஜோக் மீண்டும் சிரிப்பை வரவழைத்தது.

Muruganandan M.K. said...

நைஸ்.
எதற்கு சிரிக்காவிட்டாலும் Mr.Bean ற்கு சிரிக்காதவர்களும் இருப்பார்களா?

natarajan said...

nice jokes boss
myblog

சிங்கக்குட்டி said...

ஹி ஹி ஹி :-)

ஷர்புதீன் said...

i like bean always!!

சிராஜ் said...

எல்லாமே கலக்கல் ரகம்

சி.பி.செந்தில்குமார் said...

ஜோக்ஸ் ராக்ஸ்