தமிழ் நாடு தேர்தல் முடிவுகள் மே13 - 2011 : பனித்துளி சங்கர் -Election results May 13 2011 tamilnadu !

னைவருக்கும் வணக்கம். இது வரை எப்பொழுதும் இல்லாத அளவில் இந்தியாவின் ஒவ்வொரு இதயங்களும் இன்று முதல் சற்று வேகமாக துடித்துகொண்டிருக்கும் என்பது உண்மை. அதற்கு முக்கிய காரணம் நாளை வெளியாகப் போகும் தேர்தல் முடிவுகள் (Election results ) என்றுதான் சொல்லவேண்டும்.

துநாள் வரை சீரியல்கள் பற்றி மட்டுமே சீரியசாக பேசிவந்த எல்லோரும் இன்று தேர்தல் முடிவுகள் (Election results) பற்றி பேசுவது இன்னும் ஒரு சுவாரஸ்யம் என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு திரும்பும் திசை எங்கும் நாளைய தேர்தல் முடிவுகள் பற்றிய ரிதங்கள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் என்றாலே இந்தியாவின் மொத்தப் எதிர்பார்ப்புகளும் ஒன்றாய் குவியும் ஒரே மாநிலம் முக்கியமாக தமிழ்நாடு என்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்ததே. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைபோல் எப்பொழுதும் தமிழ் நாட்டை இரண்டு கட்சிகளே ஆண்டு வருகிறது அதில் ஒன்று திமுக-DMK கலைஞர் கருணாநிதி மற்றொன்று அதிமுக-ADMK செல்வி செயலலிதா என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றபோதிலும். அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழ் நாட்டை சொரண்டப் போறவர் யார்..?? மன்னிக்கவும். ஆளப்போறவர் யார்..?? என்று அறிந்துகொள்ள இன்னும் ஓர் இரவு மட்டுமே மீதம் இருக்கிறது. இதற்கிடையில் தேர்தல் கமிசனின்((Election commission ) இன்றைய அறிக்கைகள் பலருக்கு பீதியை கிளப்பி இருக்கிறது.

ட்டு எண்ணிக்கை குறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக தேர்தல் கமிஷனர் (election commission ) பிரவீன் குமார் தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் ஓட்டு எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வீடியோ காமிரா பொறுத்தப்பட்டு ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பிடிக்கப்படும் என்றார். இந்த புதிய முறையின் காரணமாக ஓட்டு எண்ணிக்கை பணி சற்று தாமதமாகும் என்றார். ஓட்டு எண்ணும் பணியில் 16,966 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஓட்டு எண்ணும் மையத்தில் பணி ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று முதலில் தபால் ஓட்டுக்கள் எண்‌ணப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட 5948 வழக்குகளில 1262 வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியானதும் எந்த மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று கூறி இருப்பது பணம் கொடுத்தவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

டிஸ்கி : ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரசியல்வாதிகளின் கண்களுக்குத் தெரியும் ஒரு காட்சிப் பொருளாக வாக்காளர்களாகிய நாம் இருக்கும் வரை இந்தியாவில் ஆட்சி இலவசங்களாலும் , சில நூறு ரோபாய் நோட்டுக்களாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படும் என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை !

13 மறுமொழிகள் to தமிழ் நாடு தேர்தல் முடிவுகள் மே13 - 2011 : பனித்துளி சங்கர் -Election results May 13 2011 tamilnadu ! :

Ganesan said...

I'm acknowledged

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரண்டாவது நானுங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தேர்தல் ஆணையம் இவ்வளவு கட்டுப்பாடாக இல்லையென்றால் இந்த தேர்தல் இன்னும் கேவலமாக இருந்திருக்கும்...

வாக்கு எண்ணிக்கைக்கும் ஆணையத்தின் ஏற்பாடுகள் பாராட்டகுறியதானும்...

முடிவுகள் நாளை...

Unknown said...

ரைட்டு!

மனோ சாமிநாதன் said...

நல்ல பதிவு! இலவசங்களாலும் சில நூறு ரூபாய் நோட்டுக்களாலுமே இந்தியாவில் ஆட்சி நிலை நிறுத்தப்படுகிறது என்பது நிதர்சனமான கசப்பான உண்மை தான்!

ராஜ நடராஜன் said...

என்னது!தேர்தல் ஆணையம் கட்டுப்பாடா இருந்ததா?

நாங்களே தில்லு முல்லு பண்ண முடியலைன்னு புலம்பிகிட்டுருக்கிறோம்.எங்க வயித்தெரிச்சலை ஏன் வாங்கி கட்டிக்கிறீங்க?

Unknown said...

நாளை இந்த நேரத்தில் தெரிந்து விடும், எரிகின்ற இரு கொள்ளிக்கட்டைகளில் எதனை மிக சிறந்ததாக மக்கள் கருதுகிறார்கள் என்பது. பார்க்கலாம்.

ஷர்புதீன் said...

DISKY is good and true

Anonymous said...

ம்/..பார்ப்போம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நாட்டு நடப்பை அப்படியே சொல்லிவிட்டீர்கள்.

நாளை விடிந்தால் தெரிந்துவிடும்.

இதயத்துடிப்புகள் பலருக்கும் சீராகிவிடும். சிலருக்கு துடிப்பு அதிகமாகும். சிலருக்கு துடிப்பே நின்றுவிடவும் கூடும்.

பார்ப்போம் இன்னும் ஒரே ஒரு நாள் தானே!

ரஹீம் கஸ்ஸாலி said...

ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

ஜனநாயகம் வென்றது

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அனைவரது எதிர்பார்ப்பும் நிறைவேறியுள்ளது..