சில நிமிடங்கள் சிரித்தால் பல வருடங்கள் வாழலாம்-நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்பு :Panithuli shankar Tamil jokes 15 May 2011


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.


panithuli shankar tamil jokes comedy nagaichuvai mokkai kadi lollu sirippu cinima kadi

குடும்பம் நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்பு

ருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...ப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...நீதிமன்றம் ஜோக்ஸ் நகைச்சுவை சிரிப்பு

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..அரசியல் நகைச்சுவை ஜோக்ஸ்

ஒருவர்: என்னது தலைவர் உங்க குழந்தைக்கு ‘சனியன்’ னு பேர் வைத்து விட்டாரே...?
மற்றவர்: ஆமாங்க... மணியன்னு பேர்வைக்க இருந்த சமயத்திலே சம்மனைக் கொண்டு வந்து கொடுக்கவும் சனியன்னு வச்சிட்டார்.
 
 
லைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘குழந்தைக்கு ‘அசின்’னு பேர் வச்சதை மாத்தி, அனாசின்னு வச்சிட்டார்..!சினிமா நகைச்சுவை சிரிப்பு

டிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!ஆசிரியர் மாணவன் நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்பு  

ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது
மாணவன் : தெரியாது சார்
ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்.


ஆசிரியர் : ஒரு கல்லை நாம் மேலே தூக்கிப் போட்டால் அந்தக் கல் ஏன் மீண்டும் பூமியை நோக்கியே வருகிறது?
மாணவன் : ந‌ம்மல தூ‌க்‌கி‌ப் போ‌ட்டவ‌ன் தலைமேல ‌விழலா‌ம்னுதா‌ன்.
ஆசிரியர் : ??????????


ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.


ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!!

சர்தார்ஜி ஜோக்ஸ் சிரிப்பு 
ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

13 மறுமொழிகள் to சில நிமிடங்கள் சிரித்தால் பல வருடங்கள் வாழலாம்-நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்பு :Panithuli shankar Tamil jokes 15 May 2011 :

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜோக்குகள் அசத்தல்! வாத்யார் ஒ போட்ட காமெடி சூப்பர்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
This comment has been removed by the author.
Unknown said...

எல்லா ஜோக்ஸும் நல்லா இருக்குங்க...

சுதா SJ said...

ஹா ஹா செம கடி பாஸ்

ஸ்ரீராம். said...

நானும் ஒரு "O" போட்டுடறேன்...!

Unknown said...

நன்றி மாப்ள சிரிக்க வச்சதுக்கு ஹிஹி!

Anonymous said...

////நடிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!// ஹிஹிஹி

அனைத்தும் கலக்கல் ..)))

cheena (சீனா) said...

ஓ போட்டது - குரங்கு நாய் - சார்லி - எல்லாமே ரசிக்க வேண்டியது - சிரிக்க வேண்டியது

நிரூபன் said...

அரசியல் ஜோக்....டைம்மிங் காமெடியாக இருக்கு சகோ.
எல்லா ஜோக்ஸ்ம் அருமை.

ஷர்புதீன் said...

vadivelu jokku venume...

palane said...

எல்லா ஜோக்குகளும் அருமை .குறிப்பாக சார்லி சாப்ளின் வீடியோ கிளிப் அருமையோ அருமை வயிர் வலிக்க சிரித்தேனா பாருங்களேன் .மிக்க நன்றி சார் .

ADMIN said...

எல்லாமே சிரிப்பை வரவழைத்தது.. சரித்து எமது ஆயுளையும் வளர்த்துக்கொண்டேன்.. பகிர்வுக்கு மிக்க நன்றி!

goma said...

நானும் போடுகிறேன் ஓ