அனைவருக்கும் வணக்கம் நகைச்சுவை என்பது சிலர் இரத்தத்திலே ஊறி இருக்கும் . சாதாரணமாக சிலர் பேசும் எல்லா வார்த்தைகளுமே சிரிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை . அதில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் கிருபானந்த வாரியாரும் ஒருவர்.கிருபானந்த வாரியாரை தெரியாதவர்கள் அதிகம் இருக்க இயலாது என்று சொல்லலாம் . முருகனின் தீவிரப் பக்தர் இவர் என்று சொல்லலாம் .
எதைவைத்து சொல்கிறேன் என்றால் இப்படித்தான் ஒரு முறை
திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு செய்யுமிடங்களில் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்டு அதற்கு சரியான பதிலளிக்கும் குழந்தைகளுக்கு சிறிய அளவிலான புத்தகம் ஒன்றை வழங்குவார். இந்தப் புத்தகம் பெறுவதற்காக இவரது சொற்பொழிவில் முன் வரிசையில் குழந்தைகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஒருமுறை பாரதக்கதை சொல்லும் போது "மகாபாரதத்தில் பாண்டவர்களின் கடைசி தம்பியான சகாதேவன் மிகவும் ஞானி, அறிவாளி, புத்திசாலி என்றார். எப்போதும் வீட்டில் கடைசிப்பிள்ளையாக இருப்பவர்களுக்கு ஞானம் அதிகம்" என்றபடி கூட்டத்தில் இருக்கும் கடைசிப் பிள்ளைகளெல்லாம் கையை உயர்த்திக் காட்டுங்கள்" என்றார்.
உடனே வாரியார் சுவாமிகள், " குழந்தைகளே...! நீங்கள்தான் கடைசிப்பிள்ளை என்று உங்கள் வீட்டில் நீங்கள் முடிவு செய்ய முடியாது. அது உங்கள் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முடிவு" என்றார்.
குழந்தைகள் தங்கள் கையைக் கீழே போட கூட்டத்தில் சிரிப்பொலி அடங்க சிறிது நேரமாயிற்று. என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .
Tweet |
11 மறுமொழிகள் to சிரிப்பு பொங்கும் நகைச்சுவை சொற்பொழிவுகள் - கிருபானந்த வாரியார் - Panithuli shankar jokes speeches :
NIce! :-)
ஹஹாஹா இது டபுள் மீனிங் அல்லவா !!!!
Interesting.
வாரியார் கலக்கல் ஹ ஹ ஹ ...
நானே இதை வாரியார் சொல்லக்கேட்டு மகிழ்ந்துள்ளேன். நினைவூட்டியதற்கு நன்றி.
கேட்டிருக்கிறேன். சுவாரஸ்யம்.
நல்லா இருக்கு.
நகைச்சுவை மிக்க பேச்சு , பலமுறை வாசித்துள்ளேன்.. பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்
வாரியாரும் இரட்டை மொழியில்தான்
பேசியிருக்காரு!!!
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.பகிர்வுக்கு நன்றி....
Unamiayaa ?
Post a Comment