புத்தாண்டு சிறப்புக் கவிதை : இதயம் ஒரு வெற்றுக் காகிதம் 2011

தயம் ஒரு வெற்று காகிதம்தான்
வருடத்தின் இறுதி நாள் இன்று .
இதுவரை நிறைவு பெறாத
ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே
இதில் நிரப்பப்பட்டு இருந்தது இதுநாள் வரை .
அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும்
தூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும்
சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . !
னவுகள் கூட கணக்கத் தொடங்கிவிட்டது
இனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்?
இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!

சைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.

நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!
துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!

னி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!

துநாள் வரை உதடு சுழித்து
உதறித் தள்ளிய பணிகள்
எல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.

ல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை !
இனி வரும் நாட்களில் ஏழைகள்
இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!

நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை இனி
பார்ப்பது கூட கடவுளை
பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.!

ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் !.

இப்படி புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடங்கிவிட்டேன்
இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.!

திர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி
சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை.
இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.

நாளை முதல் உங்களின் இதயங்களும்
ஒரு வெற்று காகிதம்தான் .
அதில் நிரப்பத் தொடங்குங்கள்
பல இலட்சிய எண்ணங்களை .
இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம்
இனி உங்களின் இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும்.

நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும் .

புன்னகையே உங்களுக்காக இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது
புதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .?
நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்
வெற்றி நிச்சயம்.!



திவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய ADVANCE புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!


இது கடந்த வருடத்திற்கு நான் எழுதிய மீள் கவிதை


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



38 மறுமொழிகள் to புத்தாண்டு சிறப்புக் கவிதை : இதயம் ஒரு வெற்றுக் காகிதம் 2011 :

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

சுப்பர் தல..

தமிழ் பொண்ணு said...

மிக்க நன்றி நண்பா என்னுடைய வாழ்த்துகளும்.

செங்கோவி said...

//எதிர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி
சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை// அருமையான வரிகள்..புத்தாண்டு வாழ்த்துகள்.

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பனித்துளி

Jeyamaran said...

அண்ணா ஒவ்வொரு வரியும் அருமை வாழ்த்துகள் இந்த ஆண்டு இனியதாக அமைய வாழ்த்துகள்

சௌந்தர் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Admin said...

புதிய ஆண்டு சந்தோசமான ஆண்டாக அமைய வாழ்த்த்துக்கள்.

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வேங்கை said...

வாழ்த்துக்கள் நண்பரே

சண்முககுமார் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்இதையும் படிச்சி பாருங்கஉடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

டிலீப் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

அப்பாதுரை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்(முற்றுப்புள்ளி இல்லாத முடிவுரை எப்படி?)

Unknown said...

இனிய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Praveenkumar said...

Kavidhai super thala. Thanks ur wishes. Same to u & ur family boss.

Sivatharisan said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு இனியதாக அமைய வாழ்த்துகள்

ஆமினா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ

Kandumany Veluppillai Rudra said...

இன்பம் தொடர! இதயம் குளிர!
துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்.

Anonymous said...

சிறந்த கருத்துக்கள் கவிதையாய்..புத்தாண்டு வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

FARHAN said...

பழையதை மறப்போம்
புதியதை நினைப்போம்

கோவங்களை துரோப்போம்
சந்தோசங்களை பகிர்வோம்

எதிரியை மன்னிப்போம்
நண்பனை நேசிப்போம்

சொன்னதை செய்வோம்
செய்வதை சொல்வோம்

தீயதை விட்தெரிவோம்
நல்லதை தொடர்வோம்

2010 இற்கு விடை கொடுப்போம்
2011 இணை வரவேற்போம் ...


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
wish u happy new year to all

கார்த்தி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

டிலீப் said...

எனது பிறந்த நாள் வாழத்துக்கள் அண்ணா

புதிய ஆண்டே பூமிக்கு வா... & பதிவர் Birth Day

Harini Resh said...

எனது பிறந்த நாள் வாழத்துக்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரஹீம் கஸ்ஸாலி said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸ்ஸாலி said...

புது வருடத்தில் புது வயதிற்குள் நுழையும் நண்பர் பணித்துளியார் அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

Unknown said...

எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

செய்தாலி said...

//எதிர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணிசேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல் வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை.இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்வரிகள்//

அருமை தோழரே சிந்தனைகளிலும் கவிதைகளிலும் கோர்க்கும் வரிகளிலும் புதுமை படைக்கும் உங்களுக்கு என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

venkat said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமையான கவிதை இது

மாதேவி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

மிக்க நன்றி நண்பா என்னுடைய வாழ்த்துகளும்.

Vinu said...

http://vijayfans-vinu.blogspot.com/2011/01/blog-post_5332.html படிக்க தவற வேண்டாம்

Sekar said...

நல்லபதிவுதொடருங்கள் நண்பரேபுத்தாண்டு வாழ்த்துக்கள்

ADMIN said...

என்னைக் கவர்ந்த வரிகள்..."இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்." நன்றி.. சங்கர்..!

சாந்தி மாரியப்பன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..