! சிகரெட்டின் சீக்ரெட் கவிதைகள் : பனித்துளி சங்கர் (Cigarete kavithaigal )


தீர்ந்து போகும்
உன் மீது இருக்கும் ஆசை
ஏனோ தீர மறுக்கிறது எனக்கு..!
நான் புகைத்த சில நிமிடங்களில்
இறந்து போனாய் நீ..!.
உன்னை சுவாசித்த நானோ...
னம் கனம் இறந்து கொண்டிருக்கிறேன்.
புற்று நோய் முற்றிப்போனதாம்,
மருத்துவர் சொன்னார்..!

றிவுரை சொல்லும் பொழுது சிரித்த இதழ்கள்
இன்று ஆராய்ந்து சொன்ன பொழுது அழுகிறது
புகைத்தலின் உச்சம்தான் இறத்தலோ.. !?
முதல் முறை மீண்டும் சுவாசிக்க
எத்தனித்தும் இயலாத நிலை...!!

மெல்ல உயிர் குடிக்கிறது.
புகையிலை (சிகரெட்) தந்த உறவொன்று உள்ளுக்குள்
புற்றுநோய் (கேன்சர்) என்ற பெயரில்..!!
 
 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் . நண்பர்களே உங்களுக்கான கிறிஸ்மஸ் பரிசு மற்றும் மடல் இங்கே இணைக்கப்பட்டுள்ளதுந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
 
 

26 மறுமொழிகள் to ! சிகரெட்டின் சீக்ரெட் கவிதைகள் : பனித்துளி சங்கர் (Cigarete kavithaigal ) :

Praveenkumar said...

முதல் வடை..!!
கவிதை அருமை தல..!!

Unknown said...

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

Praveenkumar said...

மிகவும் விழிப்புணர்வுமிக்க கவிதை வரிகள் நண்பரே..!! தொடர்ந்து நிறைய கவிதைகள் இதுபோன்று படைத்திட....வாழ்த்துகள்.

Praveenkumar said...

//பாரத்... பாரதி... said...
அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் //

மிக்க மகிழ்ச்சி பாரதி. தங்களுக்கும் முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Unknown said...

சிகரெட் பற்றிய கவிதைகள் உயிரைக் குடிக்கிறது.


பாராட்டுக்கள்.

Unknown said...

Super !! புகையிலையை காதலியாக பார்த்து உருகி உருகி வருகிறது கவிதை … ஹஹாஹா … புற்று நோய் வந்தாலும் அந்த காதல் போகமாட்டேன் என்கிறது பாருங்க .. ஏக்கமான கவிதை சிகரெட்டை பார்த்து !!!

Unknown said...

நல்ல கவிதை. அருமையா இருக்குது

Anonymous said...

நச்சுன்னு நல்லதொரு கவிதை...

தமிழ் உதயம் said...

விழிப்புணர்வு கவிதை...அருமை

Anonymous said...

முதல் வடை..!!கவிதை அருமை தல..!!///உனக்கு இருக்கு .....கவிதை சூப்பர் பனித்துளி

தமிழ் பொண்ணு said...

super christmas card.kavithaigalum nandraaga ullathu sir..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

vasu balaji said...

கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்.:) அழகான கவிதைகள்.

Unknown said...

//தீர்ந்து போகும்
உன் மீது இருக்கும் ஆசை
ஏனோ தீர மறுக்கிறது எனக்கு..//

நல்லா இருக்குங்க... துன்பமாய் கூட இருந்தாலும் வாழ்க்கையில் ரசிக்க முடிகிற பல தருணங்களை அணு அணுவாய் ரசிக்கின்ற போதையை பழகிக்கொண்டால் வாழ்க்கையில் எதிர்த்து போராடுகிற போது விளையும் களைப்பை அதுவே போக்கிவிடும். வெண்சுருட்டின் அவசியம் ஏற்படாது. பகிர்விற்கு நன்றி!

மாணவன் said...

விழிப்புணர்வுடன் சிந்திக்கூடிய தகவலை கவிதை மூலம் சொன்னீர்கள் அருமை...

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

Ramesh said...

ஆகா அருமை.இங்க கொஞ்சம் இருக்கு சில நிமிடங்கள் சிகரெட்..
http://sidaralkal.blogspot.com/2009/09/blog-post_4817.html

Unknown said...

அவசியமான கவிதை.

Unknown said...

புகைப்பவர்கள் முதலிலேயே ஆராய்ந்து பார்க்க வேண்டிய வரிகள் நண்பரே!
நீங்க ஏற்படுத்தின விழிப்புணர்ச்சியால் நான் எழுதிய வரிகளை கொஞ்சம் வந்து பாருங்கள் குருவே.
" தவணை முறையில் இறுதிச்சடங்கு(சங்கு) புகைப்பவனுக்கு மட்டுமே கிடைக்கும் சாபங்கள் (புற்று நோய்). "

மகேஷ்
http://maheskavithai.blogspot.com/2010/12/blog-post_24.html

சக்தி கல்வி மையம் said...

சிகரெட் பற்றிய கவிதைகள் SUPER,கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்

சக்தி கல்வி மையம் said...

அட்டகாசமான கவிதை,அருமையான கவிதை வாழ்த்துகள்கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.http://sakthistudycentre.blogspot.com

செல்வா said...

//நான் புகைத்த சில நிமிடங்களில்
இறந்து போனாய் நீ..!.
உன்னை சுவாசித்த நானோ./

ஆஹா ,, நல்லா இருக்கு அண்ணா .. ஆனா என்னத்த சொன்னாலும் சிலர் விட மாட்டாங்க .!

Meena said...

உண்மை தான். தெரிந்தும் குடிக்கிறார்களே. என்ன தான் விஷேஷமோ?

Meena said...

இது மாதிரி சினிமா பாடல்கள் வந்தால் எடுபடுமா. மக்களுக்கு இது விஷயம் அச்சுறுத்த வேண்டும் என்றேத் தோன்றுகிறது

சென்னை பித்தன் said...

நல்லதொரு கருத்தை நயம்படச் சொன்னதற்கு வாழ்த்துகள்.

Unknown said...

சுருக்குன்னு இருக்குங்க..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

கவிதை அழகு... வாழ்த்து மடலும் அழகு.... வாழ்த்திற்கும் மிக்க நன்றி...