நீண்டதொரு வழிப்பாதை
இருந்தும் வழி மறந்த விழிகளுடன்
குழந்தையென தவழ்கிறது உள்ளம்
உன் காலடித் தடம் தேடியே..!
குபுக்கென்று பீறிட்டு வெளிவரும்
கண்ணீர்த் துளிகளிலெல்லாம் இன்னும்
மொழி பெயர்க்கப் படாத மவுனத்தின்
காதல் முகவரி மெல்லக் கசிந்து
எனது உள்ளம் நிரப்பி செல்கிறது .
எழுத்தில் வடிக்க இயலாத
உணர்வுகளின் குவியலாய் உன் முடிவுகளில்
முரண்பட்டு நிற்கிறது உனக்கானப் பிரியங்கள்
என் இதயமெங்கும் .
எனக்கானக் கவிதைகளில்
நீ நிரப்பி செல்லும் ஊடல்களை
ஏனோ உரையாடல்களின்
இடையே மவுனத்தில் இடருகிறாய் !?
தனக்குத் தானே பேசிகொள்வதில்தான்
எத்தனை ஆனந்தம்
முதல் முறை இதையும்
உனக்கான நினைவேட்டில் நிரப்பிக் கொள்கிறேன்
நீயும் நானும்
உரையாடிக் கரைந்த தருணங்களில்
தடை பட்டு தொலைந்து போன
வார்த்தைகளின் மிச்சங்களிலெல்லாம் புதிதாய்
சில சொற்தொடர்
உயிர் பெற்று மீண்டும்
சுவாசிக்கத் தொடங்கிவிட்டது
நம் இருவருக்கும் இடையேயான காதலென.......
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
31 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் : காதல் அரங்கேற்றம் :
i'm the first to like.. :-) கவிதை ரொம்ப நல்லா இருக்கு :-) காதல் உணர்வுகள் நிரம்பி வழிகின்றன.. :)
அருமையான கவிதை...
காதல் பொங்குது....
நல்ல கவிதையை தந்துள்ளீர்கள்.
//ஏனோ உரையாடல்களின் இடையே மவுனத்தில் இடருகிறாய் !?//
//வார்த்தைகளின் மிச்சங்களிலெல்லாம் புதிதாய்சில சொற்தொடர் உயிர் பெற்று மீண்டும் சுவாசிக்கத் தொடங்கிவிட்டது//
காதல் பாடாய் தான் படுத்துகிறது.
/இன்னும் மொழி பெயர்க்கப் படாத மவுனத்தின் காதல் முகவரி மெல்லக் கசிந்து எனது உள்ளம் நிரப்பி செல்கிறது/ nice one..
ஃஃஃஃதனக்குத் தானே பேசிகொள்வதில்தான்எத்தனை ஆனந்தம்ஃஃஃஅருமையாக உள்ளது... ஆனால் பெயரில் வேறுபட்டமல்லவா செர்த்துவிடுவார்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10
//தனக்குத் தானே பேசிகொள்வதில்தான் எத்தனை ஆனந்தம் முதல் முறை இதையும் உனக்கான நினைவேட்டில் நிரப்பிக் கொள்கிறேன்
காதலால் உண்டாகும் மாற்றங்களை இரு வரிகளுக்குள் சொல்லி இருக்கிறீர்கள். மிகவும் நன்றாக இருக்கு சங்கர்!
அருமை நண்பரே. :)
காதல் காதல் !
"..இன்னும்மொழி பெயர்க்கப் படாத மவுனத்தின்காதல் முகவரி .." உணர்வோட்டமுள்ள நல்ல வரிகள்
உங்களுக்கு கவிதைக்கென மினி பத்மபூஷன் பரிசுக்கு பரிந்துரைக்கலாம் போல் தோணுது கவிதையில் முதிர்ச்சி தெரிகிறது
இந்த வரிகள் பிடிச்சிருக்குன்னு பிரித்து சொல்லமுடியாத அளவு அனைத்து வரிகளும் காதல் காதல் காதல்...
அருமை நண்பரே
அருமையான கவிதை..
எனக்கானக் கவிதைகளில்
நீ நிரப்பி செல்லும் ஊடல்களை
ஏனோ உரையாடல்களின்
இடையே மவுனத்தில் இடருகிறாய் !?
//
ohhh.. ok. :)
எனக்கானக் கவிதைகளில்
நீ நிரப்பி செல்லும் ஊடல்களை
ஏனோ உரையாடல்களின்
இடையே மவுனத்தில் இடருகிறாய் !?
//
ohhh.. ok. :)good lines panithuli.
உள்ளத்தில் காதல் பொங்குகிறது, கவிதை அருமை.-அருண்-
காதல் பொங்குது...............
//எனக்கானக் கவிதைகளில்நீ நிரப்பி செல்லும் ஊடல்களைஏனோ உரையாடல்களின்இடையே மவுனத்தில் இடருகிறாய் !//
சில நேரங்கள்-ல..
காதலில் மௌனமே மருந்தாய்.. :-)
நல்ல கவிதை
நீயும் நானும்உரையாடிக் கரைந்த தருணங்களில்தடை பட்டு தொலைந்து போனவார்த்தைகளின் மிச்சங்களிலெல்லாம் புதிதாய்சில சொற்தொடர்உயிர் பெற்று மீண்டும்சுவாசிக்கத் தொடங்கிவிட்டதுநம் இருவருக்கும் இடையேயான காதலென..என்னை மிகவும் கவர்ந்த வரிகள் ..
simply superb!
அமர்க்களம் சங்கர் !!!
அருமை...
அருமையான கவிதை...
//இன்னும்மொழி பெயர்க்கப் படாத மவுனத்தின்காதல் முகவரி மெல்லக் கசிந்து எனது உள்ளம் நிரப்பி செல்கிறது//அருமையான அழகான கற்பனை. வாழ்த்துக்கள்..
காதலை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சங்கர்
Post a Comment