அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த அரிய குட்டித் தகவல்கள் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நாம் மணிக்கணக்கில் வாசிக்கும் அல்லது கேட்கும் தகவல்களை விட ஓரிரு வரிகளிலோ அல்லது ஒரு சில நிமிடங்களிலோ, எங்கேனும் யதார்த்தமாக வாசிக்கவோ அல்லது கேட்கவோ நேரிடும் குட்டித் தகவல்கள் மிகவும் ரசிக்கும் வகையிலும், வியப்பூட்டும் வகையிலும் அமைவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதுபோலத்தான் இன்றையத் தகவலும் உங்களை ரசிக்க வைக்கும் என்பது திண்ணம்.
இந்த தகவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே இப்பொழுது குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கான காரணத்தை இந்தத் தகவலின் வாயிலாக அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி .
Tweet |
33 மறுமொழிகள் to இன்று ஒரு அரிய தகவல் : குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன் !? (27.12.2010)! :
சுடச்சுட.. வடை எனக்கே..!!
சுவாரஸ்யம் நிறைந்த புதுமையான தகவல்கள் நண்பரே..!!
பிறந்த குழந்தையின் அழுகைக்கான காரணம் அறிந்துகொண்டேன்.!!
பகிர்வுக்கு நன்றி தல.
ஹெ..ஹெ.. நான் என்ன நெனச்சேன்னா..???!!! குழந்தை பிறந்தவுடன் முகமூடி அணிந்த மருத்துவரையும், செவிலியரையும் பார்த்ததும் பயந்து மிரண்டு போய் அழுது என்று நினைத்தேன்..!! ஹி..ஹி..ஹி..
நல்ல பகிர்வு சார்
அப்போ வெப்பநிலை மாற்றத்தால் அழுவதில்லையா?
புதுமையான தகவல்கள்,
மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
ரொம்ப அற்புதமான தகவல் மிக்க நன்றி.......
அட...!!!
புதுமையான தகவல்கள்
நன்றி
நல்ல தகவல்.நன்றி.
பகிர்வுக்கு நன்றி
நல்ல தகவல் நண்பரே..
வடை போச்சே !!எப்பவும் போல கலக்கலான பதிவு
அருமையான பதிவு........
பகிர்வுக்கு நன்றி.
வேறு காரணங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.இது புதிதாய் இருக்கிறது !
தகவல் தந்தமைக்கு நன்றி...!மிக அருமையான தகவல் ஷங்கர்...!
நான் அறிந்த தகவல் தான் என்றாலும், மிகச் சிறப்பாக தந்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..! நன்றி! வாழ்த்துக்கள்..!
நல்ல செய்தி .. அருமையான தவல்களை தொடர்ந்து தர வேண்டும். எதிர்பார்ப்புகளுடன் மகேஷ் '
மிக அருமையான தகவல் ஷங்கர்...!
தகவல் நன்று;சுண்டு விரலை கொடுத்தால் அழுகை நிறுத்தலாம் என்ற எனது கூடுதல் தகவலையும் சேர்த்துகொள்ளுங்களேன்.
புதுமையான தகவல்கள்.
//இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.///
இப்படி ஒரு விஷயம் இருக்கா ..?
// பிரவின்குமார் said...
சுடச்சுட.. வடை எனக்கே..!//
அடச்சே , போட்டி அதிகமாயடுச்சு ..?!
ஆனா ஒரு சந்தேகம் , குழந்தை உருவாக அதாவது அது முழு உருவம் பேர மூன்று மாதங்கள் ஆகலாம் அப்படின்னு சொல்லுறாங்க ..? அப்புறம் எப்படி அது பத்து மாதமாக தாயின் இதயத்துடிப்பை உணரும் அண்ணா ..?!
thayin karuvaraiyil iruntha soozhal veru piranthavudan irukkum soozhal veru intha nilayil thayin karuvarayil thadai illamal moochu kattru kidaiththathu nunniya narambu kalin vaziyaga aanal veli vanthavudan thane suvasikkavendiyullathu intha soozhal puthiyathu enbathal kuzhanthai azhikirathu
உண்மைத்தான் இப்போது தான் உணர்கிறேன்... நான் என் குழந்தையை நெஞ்சில் போடும் போது அழாது இருந்தான்... அதனால் அடிக்கடி நெஞ்சில் போட்டுக்கொள்வேன்..... இப்போதுதான் காரணம் புரிகிறது.
தகவலுக்கு நன்றி.... குறிப்பிட்ட காலம் வலைப்பக்கம் வர இயலவில்லை... காரணம் என் மகனின் வரவுக்காக தாயகம் சென்றிருந்தேன்....
நன்றி.
கோமாளி செல்வா said...
ஆனா ஒரு சந்தேகம் , குழந்தை உருவாக அதாவது அது முழு உருவம் பேர மூன்று மாதங்கள் ஆகலாம் அப்படின்னு சொல்லுறாங்க ..? அப்புறம் எப்படி அது பத்து மாதமாக தாயின் இதயத்துடிப்பை உணரும் அண்ணா ..?!
28 December, 2010 19:23//
அதாவது குழந்தை வயிற்றில் கேட்கும் திறனை எப்போது பெறுகிறதோ அப்போதிலிருந்தி என்று பொருள்.
அப்படித்தான் நினைக்கிறேன்... செந்தில்.
செங்கோவி said...
அப்போ வெப்பநிலை மாற்றத்தால் அழுவதில்லையா?//
இதுவும் நல்ல கேள்வித்தான்....
attakaasam
அடச்சே , போட்டி அதிகமாயடுச்சு ..?///ஹி ஹி ஹி
நல்ல கருத்துகளை தந்ததுக்கு உங்களுக்கு எனது அன்பான நன்றி
சூப்பர் அப்பு... கலக்குங்க...
Post a Comment