அரிய தகவல்கள் ஆயிரம் : பசுபிக் பெருங்கடல் வரலாறு அதிசயத் தகவல்கள் PART -1


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் இன்று ஒரு தகவலின் வாயிலாக ஒரு புதிய தகவலுடன் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை நாம் இன்று ஒரு தகவலின் வாயிலாக அனைத்து துறைகளிலும் பல அரியத் தகவல்களை பற்றி பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் துறை உலகத்தில் நான்கில் மூன்று பகுதிகளைக் கொண்டு திகழும் கடல் பற்றிதான். உலகம் நாம் அனைவருக்கும் இந்த வார்த்தை மிக சிறியதாகத் தெரிகிறது அதிலும் இந்த உலகத்தில் ஒரு பகுதி நிலபரப்பில் மட்டுமே வசிக்கும் நான் தினமும் சந்திக்கும் சவால்கள் ஆயிரமாயிரம். இந்த ஒரு பகுதி நிலபரப்பிலும் இன்னும் மனிதன் பயன்படுத்தாமல் இருக்கும் நிலப்பரப்பின் அளவு மொத்த உலக மக்கள் தொகையை மீண்டும் உருவாக்கி அவர்களை குடியிருத்த இயலும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இப்பொழுது உங்கள் அனைவருக்கும் இந்த ஒரு பகுதி நிலப் பரப்பில் ஏற்ப்படும் ஒவ்வொரு நிகழ்வுகள் பற்றியும் நன்றாகத் தெரியும். ஆனால் மூன்று பகுதி நீரால் சூழப்பட்ட இந்த கடல்கள் பற்றி இதுவரை முழுமையாக ஆராயப்படவில்லை என்பது மட்டுமே உண்மை. சரி அந்த வகையில் இன்று நாம் ஒரு கடலைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளப் போகிறோம். (நாம் வெட்டியாக கடலைப் போடுவதை பற்றியல்ல... ஹி..ஹி..ஹி..)
ந்த உலகத்தை மூன்று பகுதி நீரால் சூழ்ந்துள்ள கடல் பல பெயர்களில் ஒரு குறிப்பிட்ட எல்லைகளை தங்களுக்குள் வைத்திருக்கிறது அந்த வகையில் கடல்களில் மிகவும் பெரியதாகக் கருதப்படும் பசிப்பிக் பெருங்கடல் பற்றிதான் இன்று நாம் அறிந்துகொள்ளப் போகிறோம்.

ரி உங்களில் பலருக்கு இந்த கடலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது இருந்தாலும். இந்த கடலைப் பற்றிய தகவலில் தொடக்கத்தில் இருந்து நாம் போகலாம் இந்த கடலுக்கு பசிப்பிக் என்று எப்படி பெயர் வந்திருக்கும் என்று பலருக்கு பல கேள்விகள் எழலாம்.!?
 ந்த பசிபிக் என்றால் என்ன அர்த்தம் !? பசிபிக் என்பதற்கு அமைதி என்று பொருளாம். ஆனால் இந்தக் கடலோ ஒருபோதும் அமைதியாக இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. பொதுவாக நாம் அனைவருக்கும் ஒரு குழந்தைக்கு பெயர் வைத்தவர் யார் அன்னையினை கேட்டால் தெரியும் அல்லது ஒரு ஊரிற்கு பெயர் வைத்தவர் யார் என்றுக் கேட்டால் கூட சொல்லிவிடலாம். ஆனால் இந்தக் கடலுக்கு பசிப்பிக் என்று பெயர் சூட்டியவர் யார் என்றுக் கேட்டால் பலருக்கு விடை தெரியாத மௌனம் மட்டுமே பதிலாக இருக்கும் என்பது மட்டும் திண்ணம். சரி இந்த கடலுக்கு பசிப்பிக் என்று பெயர் சுட்டியவரைப் பற்றி தெரிந்துகொள்வோம். (ங்கொய்யால.. இம்புட்டு நேரம் நீதான் கடலை போட்டு இருக்க..?!! இன்னும் தகவலுக்கு வந்தபாடில்லையேனு.. திட்டுறது நல்லாவே கேட்குது மக்கா..!! இதோ வந்துட்டேன்..!!)
1519-ம் ஆண்டு ஒரு முறை ஐந்து கப்பல்கம் மற்றும் 237 மாலுமிகளுடன் உலகை சுற்றி வரவேண்டும் என்ற ஆர்வத்துடன் முதன் முதலாக பசுபிக் பெருங்கடலை கடக்கத் தொடங்கினார் இந்த போர்த்துக்கீசிய மாலுமி பெர்டினான்ட். அப்பொழுது அவர்கள் செல்லும் வழிகளில் திரளாக சுனாமி பேரலைகள் உருவாவதும் இந்தக் கடலில்தான் இதை அறிந்த பெர்டினான்ட் என்ற போர்த்துக்கீசிய மாலுமி இந்தக் கடலின் கோபத்திற்கு எதிர்மையாக பெயர் வைக்கவேண்டும் என்று எண்ணினார் அதன் விளைவாகத்தான். இந்தக் கடலில் அதிகமாக சுனாமி பேரலைகள் அதிக சத்தத்துடன் எழும்புவதால் இதற்கு அமைதியான கடல் என்ற எதிர்மையான பொருள் அமையும் வகையில் பசுபிக் என்று பெயர் சூட்டினாராம்.

ரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் இனி இந்தக் கடலின் பரப்பளவைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டும் . உலகத்தில் மிகப்பெரிய கடல்களின் வரிசையில் முதன்மையாக திகழ்கிறது.
ந்த மிகப் பிரமாண்டமான பசிப்பிக் பெருங்கடல். அப்படி இந்தக் கடலின் பரப்பளவுதான் எவ்வளவு என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். சொல்கிறேன். இந்த பசிப்பிக் பெருங்கடலின் நீளம் 16 ஆயிரம் கி.மீ . அகலம் 11200 கி .மீ பரப்பளவு 12,8000 சதுர கிலோ மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு

                                                              தொடரும்



                                                 துவரை பசிபிக் பெருங்கடல் பற்றி  நீங்க அறிந்திராத பல வியப்பானத்  தகவல்கள்  என்ன என்பதை இந்த பதிவின் அடுத்தப் பகுதியில் சொல்ல இருக்கிறேன் ஆவலுடன் காத்திருங்கள் . மறக்காமல் உங்களின் கருத்துகளையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

19 மறுமொழிகள் to அரிய தகவல்கள் ஆயிரம் : பசுபிக் பெருங்கடல் வரலாறு அதிசயத் தகவல்கள் PART -1 :

Anonymous said...

அட, வடை!

சென்னை பித்தன் said...

காத்திருக்கிறேன்!

அத்விகா said...

nice.. aduththu eappo varum?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அறிந்திராத தகவல் நண்பரே..

தமிழ் பொண்ணு said...

// ங்கொய்யால.. இம்புட்டு நேரம் நீதான் கடலை போட்டு இருக்க..?!! இன்னும் தகவலுக்கு வந்தபாடில்லையேனு.. திட்டுறது நல்லாவே கேட்குது மக்கா..!! இதோ வந்துட்டேன்..!! //

எப்படி தல கரெக்டா சொல்றீங்க.. :)

venkat said...

அரிய தகவல்கள் மாத்திரம் அல்ல , அதிசிய தகவலும் கூட ,தொடருங்கள் .

Unknown said...

நல்ல தொடர்.. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்..

THOPPITHOPPI said...

சுவாரஸ்யமா இருக்கு

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள்... But,


//"....என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு.."//

தொடரும் போட வேண்டியதுதான்...இப்படியா நிறுத்துவது...!!!

nis said...

அறிவுபூர்வமான அறிந்திராத தகவல்கள்
தொடருங்கள்

Vaitheki said...

நல்ல பதிவு

ம.தி.சுதா said...

அருமையான தகவல்.. எதிர்பார்த்திருக்கிறேன்...

மதி.சுதா.

நனைவோமா ?

Mohamed Faaique said...

நல்ல தகவல்

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

செல்வா said...

//சரி அந்த வகையில் இன்று நாம் ஒரு கடலைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளப் போகிறோம். (நாம் வெட்டியாக கடலைப் போடுவதை பற்றியல்ல... ஹி..ஹி..ஹி..)//

அடடா .. கடலை போடுவது தப்பா ..?

செல்வா said...

//(ங்கொய்யால.. இம்புட்டு நேரம் நீதான் கடலை போட்டு இருக்க..?!! இன்னும் தகவலுக்கு வந்தபாடில்லையேனு.. திட்டுறது நல்லாவே கேட்குது மக்கா..!! இதோ வந்துட்டேன்..!!) //

பாருயா இப்படி எல்லாம் எழுத ஆரம்பிச்சிடாங்க ..?!

செல்வா said...

அடடா இவ்ளோ பெருசா அந்தக் கடல் ..!!
அறிய தகவல்கள் தான் அண்ணா ..!

டிலீப் said...

அருமையான மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே