அனைவருக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நாம் அனைவரும் அறியத் தகவல்கள் ஆயிரம் என்ற பகுதியில் பசுப்பிக் பெருங்கடல் தோன்றிய வரலாறு பற்றிய பல வியப்பானத் தகவல்களை முதல் பகுதியின் அறிந்துகொண்டோம் . முதல் பகுதியை இன்னும் வாசிக்காதவர்கள் இங்கு சென்று அறிந்துகொள்ளலாம் .
அரிய தகவல்கள் ஆயிரம் : பசுபிக் பெருங்கடல் வரலாறு அதிசயத் தகவல்கள் PART -1
சரி நண்பர்களே கடந்தப் பதிவில் இந்த மிகப் பிரமாண்டமான பசிப்பிக் பெருங்கடல். அப்படி இந்தக் கடலின் பரப்பளவுதான் எவ்வளவு என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். (அதான் எழுவது தெரியுதுல.. சொல்லித் தொல...) சொல்கிறேன். இந்த பசிப்பிக் பெருங்கடலின் நீளம் 16,000 கி.மீ., அகலம் 11,200 கி.மீ., பரப்பளவு 1,28,000 சதுர கிலோ மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு என்பதுடன் தொடரும் என்று முடித்திருந்தேன் இதோ அதன் தொடர்ச்சி வாருங்கள் தொடர்ந்து பயணிக்கலாம் .
இதில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு போர்வை போல் உருவாக்கி இந்தக் கடலை மூட நேர்ந்தால் இந்தக் கடலின் 60 சதவீதம் மட்டுமே மறைக்க இயலும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இதன் பரப்பளவை. உலக வரைபடத்தில் அதிகமாக காட்சி தருவதும் இந்தக் கடலின் தோற்றமே என்பது நாம் அறிந்த ஒன்றுதான். சரி இந்தக் கடலின் பரப்பளவுதான் இப்படி என்றால் இதையும் தாண்டிய ஒரு ஆச்சரியம் இந்த கடலின் ஆழத்தை பற்றி நாம் அறிந்து கொள்ளும் பொழுது கசிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .
சரி அப்படி இந்தக் கடலின் ஆழத்தில் என்ன ஆச்சரியம் என்றால் ஒருவேளை உலகத்தில் மிகவும் பெரியதாகக் கருதப்படும் இமய மலையை இந்தக் கடலுக்குள் தூக்கி போட்டால் மூழ்கி போய்விடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். (அப்ப தூக்கி போட வேண்டியதுதானே.. என்றெல்லாம் கேட்கப்படாது... நான் ஜஸ்ட் பனிமலையை மட்டுமே உருட்டுபவன் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.. ஹி..ஹி..)
இதுமட்டும் இல்லாது இந்தக் கடலில் ஆயிரத்திற்கும் அதிகமானத் தீவுகள் இருக்கின்றதாம் இந்தத் தீவுகளில் என்ன ஒரு வேடிக்கையான விஷயம் என்றால் உலகத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கிய எந்த ஒரு நாடும் இதன் பரப்பளவில் பெரியதாக இல்லை என்பதே இந்தத் தீவுகளின் வேடிக்கையான விஷயம். அப்படியென்றால் இந்த கடலில் காணப்படும் ஒவ்வொரு தீவுகளின் பரப்பளவை சற்று கற்பனை செய்து நீங்களேப் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த தீவுகளில் மாரியானஷ் என்ற தீவு மிகவும் வினோதங்கள் நிறைந்த தீவு என்று சொல்லப்படுகிறது காரணம் இந்தத் தீவில் இதுவரை எந்த காடுகளிலும் இல்லாத விலங்கினங்கள் மற்றும் பறவைகள் இங்கு வசிக்கின்றனவாம். அதுமட்டும் இல்லாது இந்த தீவின் அருகில் மட்டும் இந்தப் பசிப்பிக் பெருங்கடலின் ஆழம் 10,795 மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு அதிக சுழல்கள் ஏற்படுவதால் பொதுவாக யாரும் இங்கு செல்ல பயப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
இன்னும் இந்த கடலில் பல விநோதமானத் தீவுகள் கானப்படுகின்றனவாம் அவற்றில் என்ன ஆச்சரியம் என்றால் எப்பொழுதும் பசுமையாகக் காணப்படும் இந்த தீவுகளில் திடீர் என்று எரிமலைகள் உருவாகி நெருப்புக் குழம்புகளை கக்கத் தொடங்கிவிடுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கடலில் பெரிய அளவிலானப் பவளத் தீவுகளும் காணப்படுகின்றனவாம். தேன் பசிபிக் தீவுகளில் வாழும் மக்களுக்கு இந்த தீவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது தகுந்த தட்ப வெப்ப நிலைகள் இந்த தீவுகளில் காணப்படுகின்றனவாம். இதைவிட இந்தக் கடலுக்கு மலைகள் பற்றிய தகவல்கள் இன்னும் சுவராசியமானவை.
அனைவரும் அறிந்த ஹவாய் தீவுகளின் இந்த மலைத் தொடரின் தொடக்கத்தில்தான் அமைந்துள்ளனவாம். இந்தப் பசிபிக் பெருங்கடல் பற்றி நம் அனைவருக்கும் பதினாறாம் நூற்றாண்டில்தான் தெரிய வந்தது. ஆனால் 1768 முதல் 1799 வரை கேப்ட்டன் குக் என்பவர் இந்தக் கடல் முழுவதையும் ஆராய்ந்து பல அறிவியல் பூர்வமானத் தகவல்களையும், இந்தக் கடல் இவ்வளவு பெரியதாக இருப்பதற்காக தகுந்த அறிவியல் ஆதாரங்களையும் நிருப்பித்து இருக்கிறார். இந்த மிகப் பிரமண்டமான அதிசய பசிபிக் பெருங்கடலை ஆராய்ச்சி செய்த குக் என்பவரின் அறிக்கையில் இந்த பசுப்பிக் பெருங்கடல் பூமியில் இருந்து பிரிந்த ஒரு பகுதியே என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பூமி தோன்றிய ஆரம்பக் காலத்தில் பூமிக் கோளானது அதிக அளவில் இறுகியா நிலையில் காணப்படவில்லையாம். அந்த தருணத்தில் அதிக வேகத்துடன் சுழன்ற நேரத்தில் இந்த பூமிக் கோளிலிருந்து ஒரு மிகப்பெரியப் பகுதி பிரிந்து போயிற்று என்றும், அது இன்றிருந்த இடமே இந்த பசுபிக் பெருங்கடலானது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதுவரை நிலப்பரப்பில் தோன்றி மறைந்த உயிர்களைப்போல் பல மடங்கு அதிகமான உயிர்கள் இந்த பசிபிக் பெருங்கடலில் வாழலாம் என்று கணித்திருக்கிறார்களாம்.
என்ன நண்பர்களே..! இன்றைய பசிபிக் பெருங்கடல் பற்றிய சுவராசியமானத் தகவல்களுடன் நீங்களும் இந்தக் கடலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு வியப்பானத் தகவலுடன் சந்திக்கிறேன் .
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
31 மறுமொழிகள் to அரிய தகவல்கள் ஆயிரம் : இமயம் விழுங்கும் பசிபிக் பெருங்கடல் PART 2 :
நான் தான் பர்ஸ்ட் :)
பனித்துளி படிச்சுட்டு வந்துறேன் :)
அனைத்து தகவல்களும் உண்மையில் எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தின.நன்றி பனித்துளி ஷங்கர்.
அடடா..! வடை போச்சே..!!
அப்ப நம்ப அடுத்த டார்கெட் மதுரை பொண்ணுதேன்..! சரி அடுத்த முறை பார்த்துக்கறேன்..!! ஹெ.. ஹே.. வரட்டா..!!
நல்ல தகவல்கள். சுவையான முறையில் சொல்லியிருக்கிறீர்கள்.
படங்கள் விஷயங்களை புரிந்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. நல்ல தேர்வு.
அறிய தகவல்களைக் கொண்ட மிகவும் அருமையான தொடர்.. அருமை..
அடடா..! வடை போச்சே..!
தகவல்கள் அருமை .......
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்!
அருமையான தகவல் நண்பரே
பதிவுக்கேற்றாற்போல் புகைப்பட தேர்வு அருமை
அருமையான தகவல் அட்டகாசமான படங்கள்
நல்ல தகவல்கள் .
பகிர்ந்தமைக்கு நன்றி .
//நல்ல தகவல்கள் .
பகிர்ந்தமைக்கு நன்றி//
repeatu
நல்ல செய்திகள் பாராட்டுகள் . படங்களும் அற்புதமானவை .
அவ்வ்வ்.... இவ்லோ... இருக்கா... சொல்லவே இல்ல... இன்னும் இன்னும் வேனும்.. எழுதுங்க வாறம்... :D
உண்மையில் அரிய தகவல் தான் சங்கர்.
அடி ஆத்தீ....... ! இம்புட்டு விசியம் இருக்கா இந்த கடல்ல....??!!?? பெய்யாம... நம்ம கரகுடியும்... கானாடுகாத்தானும்.... இந்த உலகத்த உட்டு பிருஞ்சு போச்சுன்னா .... சவ்கரியமா இருக்குமில்ல....!!
தாமோதரன் சொல்வது, என்ன ஒரு ஆச்சர்யமான தகவல்............... மிகவும் நன்றி
பயனுள்ள பதிவு. நன்றி...
மிகவும் அருமையான பதிவு..
அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள். நல்ல தகவல்கள்.. நன்றி
அருமையான தகவல்கள்.நானும் ஒரு பசிஃபிக் தீவுவாசிதானுங்க.இப்பேர்ப்பட்டப் பசிஃபிக் சமுத்திரத்தில் கைக்குழந்தையின் நாப்கினை அலசுன ஆளும் நாந்தான்.
படங்கள் சூப்பர்!
உபயோகமான பதிவு. அருமை தொடருங்கள்.
அரிய தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி.
தகவல் களஞ்சியமே ... இல்லை இல்லை தகவல் பெருங்கடலே... நல்லதொரு அறிய தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல... இனிய வாழ்த்துதல்களும்...அன்புடன் ராஜ்குமார்.http://namatchivaya.blogspot.com/2010/12/blog-post_17.html
நல்ல தகவல்கள்.
மிகவும் அருமையான பதிவு ...........
Post a Comment