சிறகுகள் இன்றி பறக்கிறது இதயம்,
உன் உறவு வந்ததால...
இத்தனை வருடங்களில் இல்லாத
மாற்றங்கள் கடந்த சில நாட்களாய்
நாட்குறிப்பேட்டில் அழகாய் தெரிகிறது..!
உன்னைப் பற்றிய நினைவுகள்
மெல்ல கசிகிறது
என் ஞாபக பெருவேளிகளில்
பாலைவனங்களின் நீர்வீழ்ச்சியாய்
மனம் தினம் தினம்
மகிழ்ச்சியில் அலை மோதுகிறது..!
இத்தனை நாட்களாய்
முகம் மட்டுமே காட்டியக் கண்ணாடி
இப்பொழுதெல்லாம் என்னைப்
பார்த்து ஏதேதோ பேசுகிறது...!
எழுத்தாணி தீண்டிய காகிதமாய்
மெல்ல வெட்கப்படுகிறது
உனக்காக நான்
கிறுக்கிய வார்த்தைகளெல்லாம் ..!
அலைகளாய் நீ
உதிர்க்கும் வார்த்தைகளில் எல்லாம்
தினம் கிளிஞ்சல்களாய்
சிதறிப்போகிறேன்..!
சிதறிப்போகிறேன்..!
அருகில் இல்லாத உன் உருவம்
விழி போகும் திசை எங்கும்
பின் தொடர்கிறது
உடன் வரும் நிழலாய்...!
எங்கோ தூரத்தில் கசியும் இசையில்
மெல்லக் துயில் கொள்கிறது
உன் நினைவுகள..!
உன் நினைவுகளை எழுதியே
கரைத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் நீயோ
நான் எழுதாத வார்த்தைகளால்
மீண்டும் என் இதயத்தை
மெல்ல நிரப்பிக் கொண்டிருக்கிறாய்..!
நுரையீரல் தீண்ட முயற்சித்து
தோற்றுப்போகும் சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின் உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான
காதல் உடன் படிக்கைகள் .!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
40 மறுமொழிகள் to ! காதல் உடன் படிக்கை : கவிதைகள் பனித்துளி சங்கர் :
வடை எனக்கே..!!
பதிவுலகில் வடைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுவதால்.. செல்வாவிடமிருந்து... வடையை கைப்பற்றும் முயற்சியில்.... இருக்கும்.. நபர்களில் நானும் ஒருவன்.
ஹெ... ஹே.. தம்பி செல்வா.. முதல் மூன்று வடையும் அண்ணனுக்குத்தான்.!! ஹெ ஹே.. போங்க தமபி போயி.. வேற பிலாக்ல.. வடை கிடைக்குதானா.. பாருங்க..!?? ஹி.ஹி..ஹி..
ஹெ... ஹே.. தல.. !!
கவிதை சூப்பரப்பு..!!
இப்படியெ.. மயின்டெய்ன் பண்ணுங்க..!! ஹி..ஹி.. கலக்கல்.
எழுத்தாணி தீண்டிய காகிதமாய்மெல்ல வெட்கப்படுகிறதுஉனக்காக நான்கிறுக்கிய வார்த்தைகளெல்லாம் ..!//அருமையா உணர்வு நல்லா இருக்கு
அருமையான கவி வரிகள்
//அருகில் இல்லாத உன் உருவம்.........// super
//இத்தனை நாட்களாய்
முகம் மட்டுமே காட்டியக் கண்ணாடி
இப்பொழுதெல்லாம் என்னைப்
பார்த்து ஏதேதோ பேசுகிறது...!
//
கண்ணாடியெல்லாம் பேசுத்து .,
என்ன ஒரு கற்பனை .. கலக்கல் அண்ணா ..!!
வடையை கைப்பற்றியதற்கு.. வாழ்த்துகள் பிரவின்..!!!
கல்பனா.. வடையை அடுத்த முறை இந்த செல்வா மற்றும் பிரவின் கிட்ட இருந்து கைப்பற்ற வாழ்த்துகள்.,!
கருத்துக்கு நன்றி கல்பனா மற்றும் நிஸ்...!
/உன் நினைவுகளை எழுதியே
கரைத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் நீயோ
நான் எழுதாத வார்த்தைகளால்
மீண்டும் என் இதயத்தை
மெல்ல நிரப்பிக் கொண்டிருக்கிறாய்..//
ஹய்யோ சூப்பர் சூப்பர் அண்ணா ..!! கலக்கல் கவிதை .. வட போச்சே ..
/ வடையை அடுத்த முறை இந்த செல்வா மற்றும் பிரவின் கிட்ட இருந்து கைப்பற்ற வாழ்த்துகள்.,!/
காக்கை ஒண்ணு வேலைக்கு வச்சாசுங்க ..!!
இனிமேல் எங்க வடை சுட்டாலும் மிஸ் ஆகாது...!!
செல்வா = வடை வ(வா)ங்கி said...
//இத்தனை நாட்களாய்
முகம் மட்டுமே காட்டியக் கண்ணாடி
இப்பொழுதெல்லாம் என்னைப்
பார்த்து ஏதேதோ பேசுகிறது...!
//
கண்ணாடியெல்லாம் பேசுத்து .,
என்ன ஒரு கற்பனை .. கலக்கல் அண்ணா ..!!
வாங்க செல்வா... அடடா..! இன்னிக்கும் வடை போச்சா.. பிரவின் வடை எடுத்ததற்கு கம்பெனி பொறுப்பல்ல..!!!
கவிதை அருமை
முடிந்தால் கடைப்பக்கம் வரவும்
vikkiulagam,blogspot.com
//செல்வா = வடை வ(வா)ங்கி said...
/ வடையை அடுத்த முறை இந்த செல்வா மற்றும் பிரவின் கிட்ட இருந்து கைப்பற்ற வாழ்த்துகள்.,!/
காக்கை ஒண்ணு வேலைக்கு வச்சாசுங்க ..!!
இனிமேல் எங்க வடை சுட்டாலும் மிஸ் ஆகாது...!! //
ம்ம் பார்க்கலாம்..!!
கல்பனாவை கேட்டா.. பூனை வேலைக்கு.. வச்சுருக்கேன்..! வடை எடுக்க, எடுக்காம இருக்கனு சொல்லுறாங்க..!!!
பிரவின கேட்டா.. டெரர் போஸ்டுல.. நாய்சேகர அப்பாய்ண்ட்மென் பண்ணியிருக்கிறாதா... சொல்லுறான்..! ஏலே என்னலே.. நடக்குது.. இங்க.. அந்நியன் அவதரிச்சா.. என்னாகும்... தெரியும்ல..!!!??? ஹி.ஹி..ஹி
விக்கி உலகம் said...
கவிதை அருமை
முடிந்தால் கடைப்பக்கம் வரவும்
vikkiulagam,blogspot.com
வாங்க நட்பே..! கருத்துக்கு நன்றி..! கடைப்பக்கம் கண்டிப்பாக வருகிறேன்..!
/சிறகுகள் இன்றி பறக்கிறது இதயம்,உன் உறவு வந்ததால../ ஆண்டுகள் பலவாயினும் , அவ்வுறவின் நினைவு வரும்போதும் பறக்கத்தான் செய்யும் இதயம். காதல் உணர்வுகளைக் கவின் படச் சொல்கிறீரகள்.
//சென்னை பித்தன் said...
/சிறகுகள் இன்றி பறக்கிறது இதயம்,உன் உறவு வந்ததால../ ஆண்டுகள் பலவாயினும் , அவ்வுறவின் நினைவு வரும்போதும் பறக்கத்தான் செய்யும் இதயம். காதல் உணர்வுகளைக் கவின் படச் சொல்கிறீரகள். //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...!
\\எழுத்தாணி தீண்டிய காகிதமாய்
மெல்ல வெட்கப்படுகிறது
உனக்காக நான்
கிறுக்கிய வார்த்தைகளெல்லாம் ..!\\
அருமை!
இத்தனை நாட்களாய்முகம் மட்டுமே காட்டியக் கண்ணாடிஇப்பொழுதெல்லாம் என்னைப்பார்த்து ஏதேதோ பேசுகிறது...!சூப்பர் கற்பனை ...உக்காந்து யோசிபீன்களோ ..அருமையான கவி வரிகள் மனதை மயிலிறகால் வருடிய உணர்வு
//சிவா என்கிற சிவராம்குமார் said...
\\எழுத்தாணி தீண்டிய காகிதமாய்
மெல்ல வெட்கப்படுகிறது
உனக்காக நான்
கிறுக்கிய வார்த்தைகளெல்லாம் ..!\\
அருமை! //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...!
//FARHAN said...
இத்தனை நாட்களாய்முகம் மட்டுமே காட்டியக் கண்ணாடிஇப்பொழுதெல்லாம் என்னைப்பார்த்து ஏதேதோ பேசுகிறது...!சூப்பர் கற்பனை ...உக்காந்து யோசிபீன்களோ ..அருமையான கவி வரிகள் மனதை மயிலிறகால் வருடிய உணர்வு //
ஹி..ஹி.. தூக்கம் வராத பொழுது யோசித்தது..!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...!
//எழுத்தாணி தீண்டிய காகிதமாய்
மெல்ல வெட்கப்படுகிறது
உனக்காக நான்
கிறுக்கிய வார்த்தைகளெல்லாம் ..!//
காதலை தீட்ட எடுத்த வண்ணம் அழகு சங்கர்..
எல்லா கவிதையும் அருமை சகோ!!
நல்ல கவிதை வரிகள்..வாழ்த்துக்கள்.. தொடருங்க..
/நுரையீரல் தீண்ட முயற்சித்துதோற்றுப்போகும் சுவாசக் காற்றாய்உன் மறுத்தலின் உச்சத்தில்சிலுவைகளில்அறையப்பட்டு மீண்டும் நீள்கிறதுஎனக்கும் உனக்குமானகாதல் உடன் படிக்கைகள் .!/ சூப்பர்..
// அரசன் said...
நல்ல கவிதை வரிகள்..வாழ்த்துக்கள்.. தொடருங்க..
//
ரிப்பீட்டு
"நான் எழுதாத வார்த்தைகளால்
மீண்டும் என் இதயத்தை
மெல்ல நிரப்பிக் கொண்டிருக்கிறாய்.."
அழகு.
அருமையான வரிகள்... நன்றிகள்..
மதி.சுதா.
நனைவோமா ?
அத்தனை உடன்படிக்கைகளுமே காதல் சொட்டுக்கள் !
very nice
மிக அருமை அண்ணா
எல்லாம் வரிகள் டாப்
வாழ்த்துக்கள்
அருமை
நண்பர் அவர்களுக்கு வணக்கம்
உங்கள் பதிவு மிகவும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
இப்படிக்கு
உங்கள் அசோக்
அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்கே....நானும் ஒரு போட்டி வச்சுருக்கேன்
http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html
உங்கள் பதிவு மிகவும் அருமை மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
காதலியும் கண் சிமிட்டாமல் படிப்பால் !அவள் காதலை இன்றாவது கூறிவிடலாம் என்பதற்காக !
அருமையான கவி வரிகள்.
மிகவும் அருமையான கவிதை
//உன் மறுத்தலின் உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான
காதல் உடன் படிக்கைகள்//
சொந்த அனுபவம் போல..
சூப்பர் !!
உங்கள் காதலின் ஆழம் தெரிகிறது நண்பரே
Post a Comment