மறக்காத மகளிர் தினமும் மறுக்கப்படும் மகளிர் உரிமைகளும் !!!

அனைவரும் அறிந்தது என்றாலும் இதை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துவது என் கடமையாக நினைக்கிறேன் . ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் மகளிர் தினம் மட்டுமே கொண்டாடப்படுகிறது .ஆனால் மகளிர் உரிமைகள் மட்டும் மறக்காமல் மறுக்கப்படுகின்றன .
 உலக அரங்கில் பெண்கள் செய்யும் ஒவ்வொரு சாதனைகளையும் அதனால் அடையும் நன்மைகளையும் மட்டும் எண்ணத்தில் கொண்டு தலை நிமிர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும் அதே பெண்கள் தங்களின் உரிமைக்காக போராடும்பொழுது மட்டும் தலை குனிந்துக்கொள்வது எதற்கென்றுதான் தெரியவில்லை .
 உலக மகளிர் தினம் தோற்றம் , இன்று உலகில் எல்லா அட்டூழியங்களையும், அநாகரிக செயலில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் என்ற நகரத்தில் 1909ஆம் ஆண்டுமுதல் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஏனென்றால் ஓர் தொழிற்சாலையில் வேலைபார்த்த பெண்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு போராடிய போது அன்றைய அமெரிக்காஅரசால் கடுமையாக நடத்தப்பட்டார்கள். அதை நினைவுறுத்தும் முகமாக ஜ.நா. சபையால்1975ஆம் ஆண்டு ''மார்ச் 8"" உலகமகளிர் தினம் என்று அறிவிக்கப்பட்டு இன்றும்தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 50 கோடி பெண்கள் வாழும் நாடு இது. கல்வியிலும், திறமையிலும் ஆணுக்கு இங்கே சளைத்தவரில்லை பெண்கள். 2003 கணக்குப்படி அந்த 50 கோடி பெண்களில் பாதிப்பேர் படித்தவர்கள். 48.3% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்பதும், அதில் 28% பேர் வேலையில் இருப்பவர்கள் என்பதும் பெண்ணின் பெருமைக்கு சான்று.

ஒட்டுமொத்தமாக மட்டுமல்ல, ஆறு கோடியை தாண்டிய தமிழகத்தின் ஜனத்தொகையிலும் பெண்களுக்கு பாதியிடம். அதிலே படித்தவர்கள் மட்டும் ஒரு கோடியே 77 லட்சம் பேர் என்பதும் பெண்களின் வளர்ச்சிக்கு ஆதாரம். இப்படி வளர்ச்சிப் பட்டியலில் போதிய இடம் பிடித்துவிட்ட பெண்களுக்கு இன்னுமா பிரச்னை?

இந்த கேள்விக்கு இந்த புள்ளிவிவரங்களே பொருத்தமான பதில்.

* ஒவ்வொரு 3 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு குற்றம் பதிவாகிறது.

* ஒவ்வொரு 9 நிமிடங்களில் ஒரு பெண், கணவனாலோ அல்லது அவனது உறவினராலோ கொடுமைப்படுத்தப்படுகிறாள்.

* ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறாள்.

* ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை அரங்கேறுகிறது.

* ஒவ்வொரு 29 நிமிடங்களில் ஒரு கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது.

* ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது.

எனவே ஒரு பக்கம் வளர்ச்சி; மறுபக்கம் அதிர்ச்சி என்ற நிலையிலேதான் இன்றைய இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் பயணமும் தொடர்கிறது. கருவிலே தொடங்கிய கொடுமை, கல்யாணம் ஆன பின்னும் விடாமல் விரட்டுவதால் தான் பெண்களை பாதுகாக்க குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கொண்டு வர வேண்டிய கட்டாயம் வந்தது. இந்த சட்டம் வந்த பிறகும் குற்றம் குறையவில்லை. 2006 நவம்பர் முதல் 2007 ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 7,913 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 2006 அக்டோபரில் தான் இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கே வருகிறது. 2008 மே நிலவரப்படி 712 புகார்கள். அதில் தீர்வு காணப்பட்டவை 179 என்கிறது தமிழக புள்ளிவிவரம்.
 கருவிலே ஆணா, பெண்ணா என அறியும் முறை, குழந்தை திருமணம், கட்டாயக் கல்யாணம், கவுரவக் கொலை, வரதட்ணை பலி, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் பலாத்காரம்... பெண்களுக்கு எதிரான குற்றங்களை இப்படி வகைப்படுத்துகிறது பிரக்ஞா என்ற ஒரு அமைப்பு.
பெண் சிசுக் கொலை, கருவிலே கண்டுபிடித்து அழிப்பு என பெண் குழந்தைகள் ஒழிப்பிற்கு பல வழிமுறைகள். கள்ளிப்பால் கொலைகளை ஒழித்தால், அடுத்ததாக கருவில் இனம் கண்டுபிடிக்கும் கருவிகள் வந்தன. விஞ்ஞான வளர்ச்சியின் கண்டுபிடிப்பு கூட பெண்ணை கொல்லும் கருவிகளாகத்தான் உருமாறின. இந்த வகையில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடி பெண்களின் பிறப்பு தடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சி தராமல் இருக்குமா?

சற்று பினோக்கி செல்வோம் ,

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது.

காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.

அரசுகளும், மத நிறுவனங்களும் வளர்ச்சியடைந்த பின்னர் நிலை மாறியது. எங்கும் ஆண்களின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. பெண்ணினம் அடிமைப்படுத்தப்பட்டது, அனைத்து சட்டங்களும் கருத்தியல்களும் ஆண்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. அரசியல், சமுதாய, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப் பட்டனர். பெண்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். இத்தடைகளை மீறி சிலர் உயர் நிலையை அடைந்தாலும் அவர்கள் விதிவிலக்குகளே. மனித இனத்தின் சரிபாதியான பெண்கள் இரண்டாந்திர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். இப்படியாக பல நூற்றாண்டுகள் கடந்தன.

ஐரோப்பிய கண்டத்தில் நிலவிய நிலவுடமை சமூக அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் புதிய கடல்வழி கண்டுபிடிப்புகளாலும் மாற்றம் அடைந்தது. புதிய உற்பத்தி முறையுடன் முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் தேவைபட்ட அதிக மனித உழைப்பை ஈடுகட்டவும், உழைப்புச் சுரண்டலின் மூலம் முதலாளிகளின் லாபத்தை அதிகரித்துக்கொள்ளும் பொருட்டும் தொழில்துறை உற்பத்தியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு புறத்தில் இச்சுரண்டல் பெண்களுக்கு எதிராக இருந்தாலும் அன்றைய இறுகிய சமூக அமைப்பில் ஒரு தளர்ச்சியை/நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளால் 15,16,17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, மனித உரிமைகள் பற்றிய சிந்தனை எழுச்சிப்பெற்றது.

பெண்களும் தம் தாழ்நிலைக்கு எதிராக, உரிமைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கி.பி.1789ல் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தப் போராட்டமானது லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க சுதந்திரப் போரிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தனர். ஆனாலும், பெண்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும் இப்போராட்டம் பல நாடுகளில் உள்ள பெண்களுக்கும் நம்பிக்கையையும் உரிமை வேட்கையையும் விதைத்தது.
 மேரி வோல்ஸ்டன் கிராப்ட்(1759-1797) என்ற பெண்ணுரிமைப் போராளி எழுதிய The Vindication Of the Rights of Women என்னும் புத்தகமும் ஜான் ஸ்டூவர்ட் மில்(1806-1873) என்னும் ஆங்கிலேய சிந்தனையாளர் எழுதிய The Subjection of Women என்னும் புத்தகமும் பெண்ணிய சிந்தனையில் புதிய அலையை உருவாக்கின.
 தொடர்ச்சியான பிரச்சாரத்தின் காரணமாக விழிப்புற்ற பெண்களால் இத்தாலி, அமெரிக்கா, பிரஷ்யா, கிரீஸ், ஆஸ்திரியா, டென்மார்க் என பல நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. பிரஷ்யவில் பெண்களின் முழக்கத்தை கண்டு அஞ்சிய அரசன் 1848, மார்ச் 19ஆம் தேதியன்று பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு பிதிநிதித்துவம் தரவும் ஒப்புக்கொண்டான். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

1840ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் அகில உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் உறுப்பினர்களாக பெண்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் வெகுண்டெழுந்த பெண்ணுரிமை போராளிகள் 1848ல் நியூயார்க்கில் உள்ள செனீகா ஃபால்ஸ் என்னும் ஊரில் நடந்த மாநாட்டில் பெண்களின் உரிமை பிரகடனத்தை (Declaration of the Rights of Women) வெளியிட்டனர். இது பெண்ணுரிமை போராட்டங்களில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதில் ‘ஆண்களும் பெண்களும் இயற்கையில் சமமானவர்களாகவே படைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மாற்றமுடியாத உரிமைகளைக் கடவுளின் மூலம் பெற்றுள்ளனர். இவ்வுரிமைகளுள், வாழ்விற்கும், சுதந்திரத்திற்கும், மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் தேவையான உரிமைகளைப் பெறவே அரசாங்கம் என்னும் அமைப்பு ஆளப்படுபவர்களின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது..... இதுவரை அரசாங்கம் செய்த கொடுமைகளைப் பெண்கள் பொறுமையோடு அனுபவித்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தங்களுக்குச் சம உரிமை கோரிப் போராட வேண்டியது அவசியமாகிறது.....பெண்ணின் வாழ்வெல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும். பெண் ஓட்டுரிமை பெறவேண்டும். மனித சம உரிமை எல்லா இன மக்களுக்கும் ஒரே விதமான திறமைகளும் பொறுப்புகளும் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டது. பெண் ஆணுக்கு சமமான உரிமைகளையும் கடமைகளையும் பெறவேண்டும். இதற்கு எதிரானவை எல்லாம் மனிதனுக்கு எதிரானவை என்றும் தீர்மானிக்கிறோம். இந்த வெற்றியை ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைத்துப் பெற்று இருவரும் எல்லா நிலைகளிலும் பங்கு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கின்றோம்.’ என பிரகடனம் செய்தனர்.

1857ல் பருத்தி நூற்பாலைகளிலும், ஆடை உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், மோசமான பணிச் சூழல், மிகக்குறைந்த கூலி, தொழில் உரிமையாளர்களின் ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் அரசாங்கத்தால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது.

அமெரிக்க நாட்டில் 1908ல் குறைந்த வேலை நேரம், நியாயமான கூலி, வாக்குரிமை ஆகியவற்றைக் கேட்டு மீண்டும் பெண்களின் போராட்டம் வெடித்தது. இது உலகமெங்கும் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் 1910ல் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவரான கிளார ஜெட்கின் தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தது. பெண்களுக்கு வாழ்வின் எல்லா தளத்திலும் சம உரிமைகள், பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத்தின் செவியில் ஓங்கி ஒலித்திடவும் தமது உரிமைகள் குறித்து பெண்களுக்கு நாடு, தேச எல்லைகள் கடந்து விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் தமது ஒற்றுமையை காட்டும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது.

அதன் விளைவாக 1911, மார்ச் 19ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ரஷியாவில் 1913ல் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் கூடிய சர்வதேச மகளிர் பிரதிநிதிகள், ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
 1917ல் மகளிர் தினத்தன்று ரஷிய ஜார் மன்னனுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் தமது வாக்குரிமைக்காகவும், உணவுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர் 90,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். இதில் வெற்றியும் பெற்றனர். இந்தப் போராட்டமே ரஷிய புரட்சிக்கு ஆரம்பமாகும். அடுத்த எட்டு மாதங்களில் ரஷிய புரட்சி வெற்றி பெற்றது. புதிதாக மலர்ந்த சோசலிஷ சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமை அளிக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது.

பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படிப் படியாக வாக்குரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

உலகமெங்கும் தொடர்ந்து நடந்தப் போராட்டங்களின் பயனால் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது உரிமைகளை மீட்க ஆரம்பித்துள்ளனர்.

மேற்கத்திய கல்வியின் விளைவாக இந்திய சமூகத்திலும் பெரும் விழிப்புணர்வு எற்பட்டது. ராஜாராம் மோகன் ராய், கேசவ சந்திர சென், மகாதேவ கோவிந்த ரானடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், மகாத்மா பூலே முத்துலட்சுமி ரெட்டி போன்ற பல சிந்தனையாளர்களும் இந்திய பெண்களின் விடுதலைக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். காந்தியடிகளும் பெண்களின் பங்கேற்பை பெரிதும் வலியுறுத்தியுள்ளார். அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பெற சட்டரீதியான அங்கீகாரத்துக்காகப் போராடினார் அண்ணல் அம்பேத்கர். முழுமையான பெண் விடுதலைக்கு இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறன தந்தை பெரியாரின் சிந்தனைகளும் போராட்டங்களும்.

பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து விழிப்புணர்வு பணிகளை முடுக்கிவிட்டது. 1960களில் எழுச்சி பெற்ற தீவிர பெண்ணிய சிந்தனைகளும் பெண்களுக்கான உரிமை போராட்டங்களுக்கு உத்வேகமளித்து வருகிறது.

பெண்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளின் அளவு மொத்த மதிப்பில் 2 % க்கும் குறைவு; கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு பத்து லட்சம்; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 450 பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன; தலித் பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் வெறும் 7 % மட்டுமே; உலகம் முழுவதும் வீட்டிலிருக்கும் அதாவது சும்மா தமது வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் பணியின் மதிப்பு அதாவது ஆண்டுக்கு 11 ட்ரில்லியன் டாலர்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி என்ன? நாம் பெண்கள் முன்னேற்றத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதுதான்.

இன்று பெண்களின் நிலை
 பெண்கள் விஷயத்திலான பாகுபாடு குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பள்ளி, உணவு, உடை, மருத்துவம் போன்ற விஷயங்களில் ஆண் குழந்தைகளுக்கு தரும் முக்கியத்துவம் பெண் குழந்தைக்கு இல்லை. வளர்ந்து விட்ட பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பில்லை. அவளது உணர்வு, உள்ளம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திருமணம் பேசப்படுகிறது. புகுந்த வீட்டில் பிரச்னை என்கிறபோது, ‘அட்ஜஸ்ட் பண்ணிப் போ’ என்ற அறிவுரை மட்டுமே தாய் வீட்டில் இருந்து கிடைக்கிறது. ‘கணவன் சாப்பாடு போடலியா? அட்ஜஸ்ட் பண்ணு, அடிக்கிறானா? அட்ஜஸ்ட் பண்ணு’... இப்படியே அமுக்கப்படுவதால், ‘எல்லாம் என் தலையெழுத்து’ என்று முடங்கிக் கொள்ளும் முடிவுக்கு வந்து விடுகின்றனர். இதெல்லாம் தலைவிதி அல்ல; அவளை பாதிக்கிற வன்முறை என்பதை என்றைக்கு உணரத் தொடங்குகிறாளோ அன்றைக்கு பெண்ணினத்திற்கு முழு விடியல் பிறக்கும் என்கிறார்.

47% பெண்களுக்கு கட்டாய கல்யாணம்

18 வயதுக்கு முன்பு பெண்களுக்குத் திருமணம் செய்வதை குழந்தைத் திருமணம் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18, ஆண்களுக்கு 21. இதை மீறி சட்டப்படி சிறுவர்களாக உள்ளவர்களுக்கு, விருப்பத்துக்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குடும்ப கவுரவத்துக்காகவும், குடும்பங்களின் ஒற்றுமைக்காகவும், வியாபார லாபங்களுக்காகவும் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன.

உலக அளவில் தெற்காசியப் பகுதியில்தான் அதிக அளவில் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன. கடந்த ஆண்டில் யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி, இந்தப் பகுதியில் 20&24 வயதுள்ள பெண்களில் 49 சதவீதம் பேருக்கு அவர்களின் 18 வயதுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. இந்தியாவில் இது 47 சதவீதம், அதுவும் கிராமப் பகுதிகளில் 56 சதவீதம்.

உலக அளவிலான கட்டாயத் திருமணங்களில், 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கின்றன. அதில் 10 சதவீத மணமகன்களுக்கு வயது ரொம்ப கம்மி.

இந்திய அளவில் 2005ல் 122 கட்டாயத் திருமணங்கள். 2006ல் 99, 2007ல் 96 பதிவாகியுள்ளன.

வரதட்சணை பலி உ.பி.யில் அதிகம்

புதிதாக திருமணமான பெண்களின் மரணங்களுக்கு, பெரும்பாலும் வரதட்சணை தான் காரணம். 97ம் ஆண்டில் 6,006 ஆக இருந்த வரதட்சணை சாவுகளின் எண்ணிக்கை, 2007ல் 8,093 ஆனது. கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமை குறித்த வழக்குகள் 97ம் ஆண்டில் 36,592. இது 2007ல் 75,930 ஆக அதிகரித்தது.

நாட்டிலேயே அதிக அளவாக, உத்தரப்பிரதேசத்தில் 25.7 சதவீதம் வரதட்சணை மரணங்கள் நடப்பதாகவும், அதையடுத்து பீகாரில் 14.5 சதவீதம் நிகழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கலப்புத் திருமணம் - கவுரவக் கொலை

தனிப்பட்ட விருப்பத்தின்படி நண்பரையோ காதலரையோ கணவரையோ ஒரு பெண் தேடிக்கொள்ளும்போதும், குடும்பத்தினர் திணிக்கும் மாப்பிள்ளையை ஏற்க மறுக்கும்போதும், பெண்கள் மீது குடும்பத்தினர் தாக்குதலை நடத்துகிறார்கள். அது மரணத்தில் முடியும் எனத் தெரிந்தே நடத்தப்படுகிறது. வெறும் வறட்டு கவுரவத்துக்காக நிகழும் மரணங்கள்.

குடும்ப கவுரவத்தை மீறி, சாதி கடந்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் இந்த Ôகவுரவக் கொலை’க்கு இலக்கு ஆகியுள்ளனர். அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் நடத்திய ஒரு ஆய்வில், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் நாட்டின் 10 சதவீத Ôகவுரவ கொலைÕகள் நிகழ்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் 60 சம்பவங்கள் நடந்துள்ளன.

பாலியல் பலாத்காரம் 733% அதிகரிப்பு

பாலியல் பலாத்காரம் அதிகரித்து வரும் குற்றம். பதிவான விவரங்களின்படி 1971ம் ஆண்டிலிருந்து 733 சதவீதம் அதிகரித்துள்ளது. 1997ல் 15,330 வழக்குகள். 2007ல் 20737 ஆக அதிகரித்தது. இதில் மத்திய பிரதேசத்திற்கு முதலிடம்.

இந்தியாவில் பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளில் 92.5 சதவீதம் பேர், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்த நபர்களாகவே இருக்கின்றனர். கொடுமைக்கு உள்ளாக்கப்படுவோரில் 9.5 சதவீதம் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள். பாதிக்கப்பட்ட மற்றவர்களில் 15&18 வயதினர் 15.2 சதவீதம் பேர். இரண்டில் மூன்று பங்கினர் 18க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

குற்றம் 2003 2004 2005 2006 2007
பாலியல் பலாத்காரம் 15847 18233 18359 19348 20737
கடத்தல் 13296 15578 15750 17414 20416
விபச்சாரத்திற்கு கடத்தல் 5510 5748 5908 4541 3568
வரதட்சணை பலி 6208 7026 6787 7618 8093
சித்ரவதை செய்தல் 50703 58121 58319 63128 75930
பாலியல் தொந்தரவு 32939 34567 34175 36617 38794
பாலியல் வன்முறை 12325 10001 9984 9966 10950
வரதட்சணை கொடுமை 2684 3592 3204 4504 5623
மொத்தம் 139512 152866 152486 166136 184051

தமிழகத்தில்...

குற்றம் 2007 2008 2009
பாலியல் பலாத்காரம் 523 573 596
வரதட்சணை பலி 208 207 194
பாலியல் தொல்லை 1558 1705 1242
பாலியல் வன்முறை 875 974 501
சித்ரவதை செய்தல் 1976 1648 1460
கடத்தல் 1097 1155 1133
வரதட்சணை கொடுமை 368 262 207

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் எண்ணிக்கை விவரம்:

2003 4952
2004 4833
 2005 5064
2006 3789
2007 6605
2008 6524
2009 5333

சாதி, இன, மத, மொழி ஒடுக்கு முறைகளை விடக் கொடியதும் அதிகம் பேரை பாதிப்பதும் இந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான். மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதை, சமூக மதிப்புடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும். இதற்கு உத்வேகமளிக்கக் கூடிய நாளாக சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாள் விளங்குகிறது.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - தந்தை பெரியார் .

 அனைவருக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

30 மறுமொழிகள் to மறக்காத மகளிர் தினமும் மறுக்கப்படும் மகளிர் உரிமைகளும் !!! :

Tamilparks said...

அருமையான பதிவு, வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

மிக சிரமபட்டு தகவல்கள் திரட்டப்பட்ட பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

அருமை

வரதராஜலு .பூ said...

நல்ல விரிவானதொரு அலசல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு

சாந்தி மாரியப்பன் said...

//“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது”//

எல்லோரும் இதை உணர்ந்துகொண்டால் நல்லார்க்கும்.

raKeshr said...

வாழ்த்துக்கள்

EVERJOY said...

excellent one. very informative. thanks for nice sharing. very useful and effective efforts u have taken. best wishes dear

settaikkaran said...

சற்று நீளமான பதிவாயிருந்தாலும் பல தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. இது போன்ற பதிவுகளை சற்றே பிரித்துப் பகுதிகளாய் இட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமோ என்று எனக்கோர் யோசனை தோன்றியது உண்மை தான்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Tamilparks அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் வரதராஜலு .பூ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Nanrasitha அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் T.V.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி அமைதிச்சாரல் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் RaKeshr அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் EVERJOY அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் சேட்டைக்காரன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கட்டுரை; தகவல்கள் அறிந்து கொண்டேன்.
மகளிர்தின வாழ்த்துகள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

Anonymous said...

நிறைய தகவல்கள் சொல்லி இருக்கிறீர்கள்

www.ifunnystory.com said...

நல்ல தகவள்கள் :)

lolly999 said...

ஆண்கள் யோக்கியர்களாக இருந்தால் இந்த மகளிர் தினமே தேவை இல்லை என்பது எனது கருத்து: மகளிர் மீதுள்ள அக்கறைக்கு நன்றி:தங்கள் ப்ளாக் மிக நன்றாக உள்ளது

பனித்துளி சங்கர் said...

தோழி lolly999 அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி சின்ன அம்மிணி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் www.yestamil.com அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து
ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

08 March, 2010 14:58

பிரேமா மகள் said...

அருமையான கட்டுரை மட்டுமல்ல... தகவல்களும் அருமை..

பிரேமா மகள் said...

அருமையான கட்டுரை மட்டுமல்ல... தகவல்களும் அருமை..

CINIMA said...

யார் அங்கே ! என்னை கேக்காம குழந்தைக்கு யார் ராக்கெட் வாங்கிதந்தது .????????

riya said...

படித்து விட்டு சிந்திக்க வேண்டிய விடயம் மட்டுமல்ல ,,,செயற்படுத்தப்பட வேண்டிய விடயமும் கூட,,,,, மனித மனங்களை சுத்தப்படுத்த முயன்று இருக்கிறீர்கள் ...முயற்சிக்கு வாழ்த்துகள்,,,,