ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில், ஆக்சுபோர்டு என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாயந்ததாகும்.
இதன் தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எனக் கூறுவர்.இது தேம்ஸ் நதியும் , ஷெர்வெல் ஆறும் சங்கமமாகும் இடத்தின் கரையில் நதிக்கும் ஆறுக்கும் இடையில் அமைந்திருக்கிறது . ஆற்றில் இறங்கி கரையேறும் இடத்தை துறை என்பர் . இதற்கு ஆங்கிலத்தில் போர்டு என்று பெயர் .இந்தத் துறையில் எருமைகள் வந்து , நீராடி , நீர் அருந்தி செல்வதால் அந்தக் குறிப்பிட்ட நதிக்கரையை ஆக்ஸ்போர்ட் என்று அழைத்தனர் . அந்த இடத்தில் பல்கலைக்கழகம் அமைந்ததால் அதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் என்று அழைத்தனர் .
இதன் தொடக்க நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே இன்றுவரை இது சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உயர் கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நகர மக்களுக்கும் இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே கி.பி. 1209ல் எழுந்த சண்டையினால் சில மாணவர்கள் வட-கிழக்கான திசையில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னும் ஊருக்கு ஓடிச் சென்றனர் என்றும், அதனாலேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானது என்றும் ஒரு தொல்கதை உண்டு. இதனால் இன்றளவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டாப் போட்டி உண்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
இப் பல்கலைக்கழகமானது 42 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். இதில் 2008 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 28,660[1] மாணவர்கள் படிக்கின்றார்கள். அவற்றில் 18,495[1] மாணவர்கள் பட்டப் படிப்புக்காவும், 9,145[1] மாணவர்கள் மேற்பட்டப் படிப்புக்காகவும் பயில்கின்றார்கள். இப் பல்கலைக்கழகமானது சுமார் 3.6 பில்லியன் பிரித்தானிய பவுண்டு நிறுவன வளர்ச்சித் தொகையாகப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .
Tweet |
13 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 2 - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் !!! :
சூப்பர் ! அவ்வ்வ்வவ்வ்வ் !
:-) nice one!
அங்கிள்,.. என்னையும் அந்த யூனிவர்சிட்டியில் படிக்க சேர்த்துக்குவாங்களா?
pattaiya kilappunga maamu!
மூணு வோட்டும் போட்டுட்டேன்.
நல்ல பதிவு.
இரண்டு விஷயங்கள்.
டெம்ப்ளேட் நிறம் படிக்கச் சிரமமாய்...
பின் தொடர்பவர்களின் மொத்தப் படத்தினாலோ என்னமோ ஒவ்வொரு முறையும் தளம் திறக்க எடுக்கும் நேரம் அதிகமாவது ....
//இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .//
தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சுங்கண்ணா... தமிழிஷ் ஓட்டுப்பட்டையை காணுமே... எப்படி போடுவது?
// ]இப் பல்கலைக்கழகமானது 42 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். //
எப்படிங்க இத்தனை வருஷமா எந்த அரசியல்வாதி கண்ணுலேயும் படாம இருந்திருக்கு... கேட்கவே ஆச்சர்யமா இருக்கில்ல..
பயனுள்ள தகவல்.நிரைய படிப்பிங்க போல...வாழ்த்துகள்
இளமுருகன்
நைஜீரியா
இதுமாதிரி பயனுள்ள தகவல்கள் குடுக்கும்போது இன்னும் கொஞ்சம் விரிவா குடுக்கலாமே :)
நண்பர் ராஜன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நல்ல பதிப்பு நண்பரே... இதே போல் பல நல்ல தகவல்களை பகிருங்கள்...
// இந்தத் துறையில் எருமைகள் வந்து , நீராடி , நீர் அருந்தி செல்வதால் அந்தக் குறிப்பிட்ட நதிக்கரையை ஆக்ஸ்போர்ட் என்று அழைத்தனர் . அந்த இடத்தில் பல்கலைக்கழகம் அமைந்ததால் அதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் என்று அழைத்தனர் ... //
பனித்துளி தோழர் ..
நிஜம்மாவா சொல்றீங்க ...
காமெடி ஒண்ணும் இல்லையே ...
கலக்கிட்டீங்க
Post a Comment