இன்று ஒரு தகவல் 6 - கிராமபோன் !!!

சைக் கருவிகளில் இன்று அறிவியலின் வளர்ச்சியால் ஆயிரம் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் . ஒரு காலத்தில் இந்த அவசர உலகத்தை அமைதியாக தாலாட்டி உறங்கவைத்தது இந்த கிராமபோன்தான் .இன்றும் பரிணாமம் மாறினாலும் ,எனது இசையால் வசமாக இதயம் எது என்று எத்தனையோ இதயங்களை தனது பரம இரசிகர்களாக மாற்றிப் ஆட்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறது ..


ன்று உலகத்தில் இசை இல்லாத நாடு இசையை இரசிக்காத இதயங்கள் என்று யாரும் இருக்க இயலாது . உலகத்தில் அனவரும் எந்த வேறுபாடும் இன்றி இரசிக்கும் ஒரே அதிசயம் இசை என்று சொல்லலாம் . கருவில் இருக்கும் குழந்தைகூட இசையை ரசிக்கின்றது என்று ஆய்வுகள் சொல்கின்றன .இத்தனை அதிசயங்களையும் ஒன்றாக நாம் கேட்டு மகிழ்வதற்கு ஒரு காலத்தில் எந்த இசை கருவி பயன்பட்டது என்று கேட்டால் ஆனவரும் சொல்லும் ஒரே பதில் கிராமபோன் .

சை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை.

ஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

அதே நேரம் அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ,1877-ம் ஆண்டு நவம்பர் 21 -ல் தனது கிராமபோன் கண்டுபிடிப்பை முறைப்படி அறிவித்தார்.அமெரிக்காவில் 1847-ம் ஆண்டு பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன், நவீன உலகுக்கு தந்த கொடைகள் ஏராளம்.

டிசன் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணமாக இருந்தது சிறு வயதில் அவர் பார்த்த டெலிகிராப் ஆபரேட்டர்வேலைதான். இதுதான் அவரை பல கண்டுபிடிப்புகளுக்கு உந்தித்தள்ளியது. புதுப்புது ஆராய்ச்சிகளுக்காக நியூஜெர்சி நகரில் அவர் பிரத்யேகமான ஆய்வுக் கூடத்தை அமைத்திருந்தார்.

தந்தி தொழில்நுட்பம் மூலம் ஒலியை பதிவு செய்து பிறகு அதே ஒலியை மறு ஒலிபரப்பு செய்யும் ஆராய்ச்சியை அவர் 1870 களில் செய்து வந்தார்.தகர இழைகள் சுற்றப்பட்ட உருளையைக் கொண்டு ஒலியை பதிவு செய்ய முயற்சித்தார்.

வம்பர் 21, 1877 இல் தோமஸ் அல்வா எடிசன் ஒலியைப் பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக நவம்பர் 29 இல் காட்சிப் படுத்தினார். இது பின்னர் பெப்ரவரி 19, 1878 இல் அவரால் காப்புரிமம் பெறப்பட்டது.

டிசனின் முதலாவது போனோகிராஃப்பில் ஒலி வெள்ளீயத் தகடு ஒன்றிலேயே பதிவு செய்யப்பட்டது. வெள்ளீயத் தகடு குழாய் ஒன்றின் மேல் சுற்றப்பட்டுப் அதன் மேல் பதிவு செய்யப்பட்டது.

ரு முறை 1877-ம் ஆண்டு ஆய்வுக் கூடத்தில் தனது தொழிலாளி குரேசி என்பவரை உருளையை சுற்றச் சொல்லிவிட்டு, எடிசன் ஒரு பாடல் பாடினார் . சிறிது நேரம் கழித்து கருவியை இயக்கிய போது அதே பாடல் ஒலிபரப்பானது. இதைப் பார்த்த எடிசனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

இது குறித்து பின்னாளில் அவர் கூறும்போது,'புது கண்டுபிடிப்பு ஒன்று வெற்றியடையும் போது எனக்கு உடனடியாக ஏற்படுவது பயம்தான்' என்றார்.எடிசனின் ஒலிப்பதிவு கருவியைப் பார்த்து நியூஜெர்சி நகரமே அதிசயித்தது.

மற்ற கருவிகள் கண்டுபிடிப்பினால் கிடைத்தது போன்று கிராமபோன் கண்டுபிடிப்பில் எடிசனுக்கு பணம் கிடைக்கவில்லை. எனினும், இசை உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கிராமபோன் கண்டுபிடித்தவர் என்ற அழியாப் புகழுக்கு எடிசன் சொந்தக்காரரானார்.
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

37 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 6 - கிராமபோன் !!! :

பிரேமா மகள் said...

இம்புட்டு அறிவா பாஸ் உங்களுக்கு?

Praveenkumar said...

வணக்கம் தல. உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. உங்களது கட்டுரைத் தொகுப்பு இப்பொழுது மிகவும் நன்றாக உள்ளது. உதாரணம் முதல் எழுத்து பெரிய எழுத்தாக பதிவிடுவது, தினசரி நாளேடுகளில் படிப்பது போன்று உள்ளது. தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம். வாழ்த்துகள் தலைவா....!!

பா.வேல்முருகன் said...

நல்ல பகிர்வு. நன்றி தல.

அண்ணாமலையான் said...

தொடரட்டும்

விக்னேஷ்வரி said...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சங்கர்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல தகவல் நண்பரே.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{{{ பிரேமா மகள் said...
இம்புட்டு அறிவா பாஸ் உங்களுக்கு? }}}}}}}}}}}}}}}}


பின்ன இது கொஞ்சம்தான் மீதம் எல்லாம் வாடகைக்கு கொடுத்து இருக்கிறேன் உங்களைபோன்றவர்களுக்கு !

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{பிரவின்குமார் said...
வணக்கம் தல. உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. உங்களது கட்டுரைத் தொகுப்பு இப்பொழுது மிகவும் நன்றாக உள்ளது. உதாரணம் முதல் எழுத்து பெரிய எழுத்தாக பதிவிடுவது, தினசரி நாளேடுகளில் படிப்பது போன்று உள்ளது. தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம். வாழ்த்துகள் தலைவா....!! }}}}}}}}}}}


எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்குவிப்புகள்தான் நண்பரே !

உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

Vels அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி விக்னேஷ்வரி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு. நன்றி

பனித்துளி சங்கர் said...

நண்பர் T.V.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

வரதராஜலு .பூ said...

எப்பிடிங்க இவ்வளவு டீடெய்லா? சான்சே இல்ல. கலக்குங்க

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{வரதராஜலு .பூ said...
எப்பிடிங்க இவ்வளவு டீடெய்லா? சான்சே இல்ல. கலக்குங்க }}}}}}}}}}}}}}}}}


எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்குவிப்புகள்தான் நண்பரே !

உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

Unknown said...

இசை என்பதே ஒரு இனிமை
அது உருவானவிதம் படிக்கும் போது
மிகவும் அருமை.
நன்றி...

தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம்.
வாழ்த்துகள்

என்றும் ப்ரியமுடன் M.MEENU

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா!!! தகவல் ஜூப்பர்..........
பனித்துளி உங்கள் கவனத்திற்கு.............
எட்டிப்பார்த்த நிலாவிலேயே நிற்கிறது உங்கள் பனித்துளி, blog update - இல்.....
அதை கொஞ்சம் கவனிக்கவும்.

Unknown said...

இன்னும்...எதிர்பார்ப்பது
என்ன என்றால்?
சிறிய விசயமாக
இருந்தாலும்,
பல கருத்துக்களை கொண்டதாக அமைந்தால் இன்னும்
உங்கள் எழுத்து
புத்துணர்வு பெரும்.

தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம். வாழ்த்துகள்.

என்றும் ப்ரியமுடன் M.MEENU

பனித்துளி சங்கர் said...

///////சைவகொத்துப்பரோட்டா said...
ஆஹா!!! தகவல் ஜூப்பர்..........
பனித்துளி உங்கள் கவனத்திற்கு.............
எட்டிப்பார்த்த நிலாவிலேயே நிற்கிறது உங்கள் பனித்துளி, blog update - இல்.....
அதை கொஞ்சம் கவனிக்கவும்./////
இதோ இப்பொழுதே சரி செய்துவிடுகிறேன் .

பனித்துளி சங்கர் said...

நண்பர் MEENAVAN அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பிரபாகர் said...

தகவல்கள் தொகுத்துத் தந்த விதம் அருமை நண்பா! தொடருங்கள்...

பிரபாகர்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{{{{{{{meenavan said...
இன்னும்...எதிர்பார்ப்பது
என்ன என்றால்?
சிறிய விசயமாக
இருந்தாலும்,
பல கருத்துக்களை கொண்டதாக அமைந்தால் இன்னும்
உங்கள் எழுத்து
புத்துணர்வு பெரும்.

தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம். வாழ்த்துகள்.

என்றும் ப்ரியமுடன் M.MEENU}}}}}}}}}}}}


அப்படியே ஆகட்டும் நண்பரே !

பனித்துளி சங்கர் said...

நண்பர் பிரபாகர் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

geethappriyan said...

நண்பரே அருமையான தகவல்களுக்கு நன்றிகள்.

geethappriyan said...

பல அறிய தகவல்களை தொகுத்து வழங்குகிறீர்கள்,இனி அடிக்கடி வருகிறேன்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
பல அறிய தகவல்களை தொகுத்து
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கிராமபோன் தகவல்கள் அருமை கலக்குங்கள் தல..

மதுரை சரவணன் said...

அசத்துங்க. தினம் தகவல் நன்றாக உள்ளது. நானும் உங்களுடன் போட்டி போட்டு பதிவை வெளியிட வேண்டியுள்ளது. இருப்பினும் உங்கள் எழுத்தில் கவர்ச்சி தெரிகிறது. வாழ்த்துக்கள்.

கட்டபொம்மன் said...

அருமையான தகவல்கள், ககபோ..

சிநேகிதன் அக்பர் said...

அரிய பல தகவல்களை அறியத்தந்ததற்கு நன்றி.

கலக்கல் பாஸ்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் ஸ்ரீ.கிருஷ்ணா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{Madurai Saravanan said...
அசத்துங்க. தினம் தகவல் நன்றாக உள்ளது. நானும் உங்களுடன் போட்டி போட்டு பதிவை வெளியிட வேண்டியுள்ளது. இருப்பினும் உங்கள் எழுத்தில் கவர்ச்சி தெரிகிறது. வாழ்த்துக்கள். }}}}}}}}}}}}}}


நண்பரே என்னை விட நீங்கள்தான் சிறந்த முறையில் பதிவுகளை கொடுத்து இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் . வருகைக்கும் உங்களின் கருத்துக்கும் .

பனித்துளி சங்கர் said...

நண்பர் அக்பர்
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் கட்டபொம்மன்
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

Tamilparks said...

மிகவும் அருமையாக உள்ளது தொடரட்டும் உங்கள் படைப்புகள்

Unknown said...

நல்ல தகவல் நண்பரே