இன்று ஒரு தகவல் 5 அலெக்ஸாண்டர் !!!

லகத்தை ஆள வேண்டும் என்று ஹிட்லர் நினைத்ததால் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஹிட்லருக்கு  முன்பே உலகத்தை ஆள வேண்டும் என்று நினைத்தவன் தான் அலெக்ஸாண்டர். தன் லட்சியத்தில் 75 சதவீதம் வெற்றியை கண்டவன். ஹிட்லரிடம் இல்லாத அன்பு, போர் வீரர்களை மதித்தல், பெண் ஆசை அற்றவன் மற்றும் பலரின் பாராட்டுகளுக்கு உரியவன் தான் அலெக்ஸாண்டர்.
ரு முறை உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் புறப்பட்டவர் அலெக்ஸாண்டர் . பாரசீக நாட்டை வெற்றி கொள்ள அப்பகுதிக்குள் படையோடு நுழைந்தார் அவர். படையெடுக்கக் காத்திருந்த வேளையில் கடுமையான காய்ச்சல் அவரைத் தாக்கியது . உடன்வந்த அவரின் வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை .

' இது இந்த நாட்டுப் பகுதியில் வரும் விஷக் காய்ச்சல் போல் தெரிகிறது . பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்தால் இந்த நோயைக் குணப்படுத்தி விடுவார் ' என்று அவர்கள் சொன்னார்கள் .


' திரி நாட்டு வைத்தியரை நம்பி எப்படி வைத்தியம் செய்ய அழைப்பது ?' என்று பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால், அலெக்ஸாண்டர் மட்டும் தயங்கவில்லை. பாரசீக மன்னர் தன் எதிரி என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்லவர் என்று அவர் நம்பினார் . அரண்மனை வைத்தியர் அழைத்து வரப்பட்டார். பரிசோதனை செய்தபின் ' இந்த விஷக் காய்ச்சலுக்கு உரிய மூலிகைச் சாற்றை நாளை கொண்டுவருகிறேன் ' என்று சொல்லிவிட்டு, புறப்பட்டுச் சென்றார் அவர் .
மறுநாள் அவர் திரும்புவதற்கு முன்னால் ஒற்றர்கள் மூலம் அலெக்ஸாண்டருக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது. ' எதிரி நாட்டு வைத்தியர் கொண்டுவரும் மூலிகைச் சாற்றைக் குடிக்காதீர்கள். அதில் விஷம் கலக்கப்பட்டுள்ளது ' என்பதுதான் அந்தச் செய்தி.

ந்த வைத்தியர் கொடுத்த மருந்தை குவளையில் பிடித்தபடி ஒற்றர்கள் அனுப்பிய தகவலை வைத்தியரிடம் சொன்னார் அலெக்ஸாண்டர் .


வைத்தியர் முகத்தில் அச்சம் பரவியது. ஆனால், அடுத்த வினாடியே அந்த மூலிகைச் சாற்றை கடகடவென குடித்து விட்டார் அலெக்ஸாண்டர்.


' எப்படி என்னை நம்பி அதைக் குடித்தீர்கள்?' என்று வைத்தியர் கேட்டபோது, அதற்கு அலெக்சாண்டர் சொன்ன பதில் இது தான்...


' பாரசீக மன்னர் எனக்குப் பகைவராக இருந்தாலும் சூழ்ச்சி செய்து என்னைக் கொல்ல மாட்டார் என நம்பினேன். அரண்மனை வைத்தியரான நீங்களும் தொழில் நேர்மை உள்ளவராக இருப்பீர்கள் என்று நம்பினேன். எனவே விஷம் கலக்கப்பட்டிருக்காது என்று எண்ணி தைரியமாகக் குடித்தேன் ' என்றார்.


' பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
 நாகரிகம் வேண்டு பவர் '
என்று வள்ளுவர் சொன்னது இதைத்தான்.


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .

48 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 5 அலெக்ஸாண்டர் !!! :

Praveenkumar said...

வணக்கம். நண்பரே..! உங்களது இன்று ஒரு தகவல் பதிவுகள் அனைத்தும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. இன்று அலெக்ஸாண்டரை பற்றி அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி. தங்களுக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

பயனுள்ள தகவல் வாழ்த்துகள்.....

விக்னேஷ்வரி said...

அலெக்ஸாண்டரைப் பற்றிய அரிய தகவல். நன்றி.

அண்ணாமலையான் said...

puthia thakavalkal

Happy Smiles said...

சிந்திக்கவும் வைக்கும் உங்களின் பதிவு அருமை. ஏதோ ஒரு காலத்தில் அலெக்ஸ் பற்றி படித்து இருக்கிறேன். இப்பொழுது நினைவு கொண்டு பார்க்கிறேன் உங்களின் பதிவால். வாழ்த்துக்கள்.

வெள்ளிநிலா said...

shankar, now i am in out of station , so pls send your all articles to my mails ( not only link)
:)

lolly999 said...

நன்றாகத்தான் மவுசய் SORRY, மலையை உருட்டுகிறீர்கள் அந்நியன் keep it up!!!

தினேஷ் ராம் said...

போரின் முடிவு எப்படி இருந்தது??

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

அலெக்ஸாண்டரின் அபார நம்பிக்கையும் பாரசீக மன்னனின் நல்ல உள்ளமும் பாராட்டத் தக்கவை.

நல்லதொரு தகவல் - நன்று நன்று நல்வாழ்த்துகள்

பனித்துளி சங்கர் said...

ka

சிவாஜி said...

நல்லதொரு தகவல்

Paleo God said...

தொடருங்கள் சங்கர்..:)

ira kamalraj said...

பகிர்வுக்கு நன்றி. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

Raghu said...

அலெக்ஸாண்ட‌ரைப் ப‌ற்றி கிழ‌க்கு ப‌திப்பக‌ம் ஒரு புத்த‌க‌ம் வெளியிட்டுள்ள‌து. அதில் நிறைய‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிந்துகொள்ள‌லாம்

இளமுருகன் said...

நன்றாக போய் கொண்டிருக்கிறது
வாழ்த்துகள்
இளமுருகன்
நைஜீரியா

மதுரை சரவணன் said...

super.

புலவன் புலிகேசி said...

நல்ல தகவல் நண்பா...

Simulation said...

அலெக்சாந்தரும் ஆறுமுகனும்

http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_11.html


- சிமுலேஷன்

சைவகொத்துப்பரோட்டா said...

தகவல் ஜூப்பரப்பு.

DREAMER said...

பயனுள்ள தகவல்கள்...

-
DREAMER

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

நல்ல தகவல் நண்பா....

karthik said...

பயனுள்ள செய்தி மனம் நெகிழ்ந்துவிட்டது நண்பரே

பனித்துளி சங்கர் said...

நண்பர் பிரவின்குமார் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் ஸ்ரீ.கிருஷ்ணா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி விக்னேஷ்வரி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி Mehar அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

///////// வெள்ளிநிலா ஷர்புதீன் said...
shankar, now i am in out of station , so pls send your all articles to my mails ( not only link)
:) /////////////அப்படியே ஆகட்டும் !

பனித்துளி சங்கர் said...

/////// lolly999 said...
நன்றாகத்தான் மவுசய் SORRY, மலையை உருட்டுகிறீர்கள் அந்நியன் keep it up!!! //////பின்ன நாங்கெல்லாம் ராவான ரவுடிக .

பனித்துளி சங்கர் said...

/////// சாம்ராஜ்ய ப்ரியன் said...
போரின் முடிவு எப்படி இருந்தது?? ///////அத ஏன் கேக்குறீங்க நான் போனதால தப்பிச்சாங்க .

பனித்துளி சங்கர் said...

ஐயா cheena (சீனா) அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

பனித்துளி சங்கர் said...

நண்பர் சிவாஜி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் ira kamalraj அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் ர‌கு அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் இளமுருகன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Madurai Saravanan அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் புலவன் புலிகேசி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Simulation அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் DREAMER அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் BONIFACE அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் karthik அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றியும் வாழ்த்தும்..

mohamedali jinnah said...

மிகவும் நல்ல கட்டுரை .அலெக்ஸாண்டர் வரலாறு படைத்த நாயகன் , இன்றைய அரசியலுக்கு ஒரு பழம்

ம.தி.சுதா said...

இன்ற தான் பார்த்தேன் சகோதரா அருமையான தகவல் நன்றிகள்....

prasanth said...

hai

prasanth said...

super